search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPEECH COMPETITIONS"

    • போட்டிகளில் பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி, பராசக்தி வித்யாலயா போன்ற பல பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் அறிவு கோவில் ஆன்மீகக் கல்வி மையம், இலஞ்சியில் வேதாத்திரி மகரிஷியின் 113-வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாடல், ஒப்புவித்தல் போட்டி, கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி, நடனம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி, பராசக்தி வித்யாலயா போன்ற பல பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவி காளிபிரியா நடன போட்டியில் பங்கேற்று 2-ம் இடமும், மாணவன் கோதண்டராமன் ஒப்புவித்தல் போட்டியில் 3-வது இடமும், பேச்சுப் போட்டியில் 3-வது இடமும் பெற்றார். போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு செங்கோட்டை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • காந்திஜெயந்தி வருகிற 2ம் தேதி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகிறது.
    • அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    காந்திஜெயந்தி வருகிற 2ம் தேதி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகிறது. அதன்படி 12ம் தேதி தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலை ப்பள்ளியில் (ஆண்கள்) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 10 மணி முதல் சமூக இடை வெளியுடன் நடைபெற உள்ளது.

    தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன. இப்போட்டி களில் மாவட்ட த்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்துக்கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்களு க்கான பேச்சுப் போட்டிக்கு "அண்ணலின் அடிச்சு வட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம்" எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களு க்கான பேச்சுப்போ ட்டிக்கு"வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கை யும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    மேலும், பேச்சு ப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்பு டைய போட்டிக்கு அனுப்ப வேண்டும். அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ ர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்ற றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரி யர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

    கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000, என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளி தரன் தெரிவித்துள்ளார்.

    • அண்ணா, பெரியார் பிறந்த நாளன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறுகின்றன.
    • போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு

    அரியலூர்:

    தமிழக அரசின் உத்தரவின் படி வருகிற 15-ந்தேதி முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், 17-ந்தேதி பெரியார் பிறந்த நாளை முன்னிட்டும் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளது.

    அதன்படி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் பேச்சு போட்டிகளும், 17-ந்தேதி பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டிகளும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்படவுள்ளது.

    போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்பவர்களில் அரசு பள்ளியை சேர்ந்த 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது.

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மதியம் 1.30 மணிக்கும் போட்டிகள் தொடங்கப்படும். எனவே அரியலூர் மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குனர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று மேற்கண்ட பேச்சு போட்டிகளில் பங்கேற்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ×