search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spic nagar school"

    • டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வியக்கும் விஞ்ஞானம் 2022 எனும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • மாணவர் மொத்தம் 289 பேர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முப்பாடப்பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வியக்கும் விஞ்ஞானம் 2022 எனும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. விழாவினை ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டாரின் பொது மேலாளர் செந்தில் நாயகம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளி செயலர் பிரேம் சுந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் பாபு ராதாகிருஷ்ணன்,ஸ்பிக் நகர் ரோட்டரி தலைவர் அருள் ஜெயக்குமார்,செயலாளர் சரவணக்குமார், ரோட்டரி உறுப்பினர்கள் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    விழாவின்போது மாணவர் மொத்தம் 289 பேர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முப்பாடப்பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் விளக்க காட்சியின் மூலம் எதிர்கால அறிஞர்களாக மாறி விளக்கம் அளித்து வியப்படையச் செய்தனர்.மேலும் பல்வேறு மன்றத்தின் சார்பாக திடக்கழிவு மேலாண்மை எனும் தலைப்பில் தங்களது விஞ்ஞான அறிவை பயன்படுத்தினர். இது அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. இவற்றுடன் பல்வேறு ஓவியங்களை வரைந்து மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    ×