search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sportsperson"

    • விளையாட்டு வீராங்கனை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி பள்ளப்ப ட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகள் தங்கபாண்டியம்மாள் (18). கல்லூரி மாணவியான இவர் ஜூடோ விளையாட்டு வீராங்கனை ஆவார். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கபாண்டியம்மாள் விளையாடி உள்ளார். திருப்பூரில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பெற்றோர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த தங்கபாண்டியம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள வீரநல்லாங்குளத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (60). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி சாட்சியாபுரம் கந்தபுரம் காலனியைச் சேர்ந்தவர் அந்ேதாணிசாமி. இவரது மனைவி ஆரோக்கிய புஷ்பா (50). வடபட்டி நடுநிலைப்பள்ளியில் அரசு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய புஷ்பா சம்பவத்தன்று இரவு கத்தியால் உடலில் கீறிக்கொண்டு வீட்டின் வராண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுண் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திறமை இருந்தும் கூலி வேலைக்கு செல்லும் இறகுப்பந்து விளையாட்டு வீரர் அரசு தனக்கு பொருளுதவி அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
    • பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், தனது 18-வது வயது முதல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முத்துக்குடா கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜனகன் (வயது 27). இறகு பந்து விளையாட்டு வீரரான இவர், தேசிய அளவில் 3 முறை தங்கப்பதக்கமும், சர்வதேச அளவில் 3 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    தந்தை இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். கூலித்தொழிலாளியான தாய் கற்பகம் தன்னால் முடிந்த கூலி வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜனகன் தனது 13-வது வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனை அறிந்த தாய் அவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார்.

    அப்போதிலிருந்தே பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், தனது 18-வது வயது முதல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போது ஜனகளின் விளையாட்டு ஆர்வத்தை அறிந்த அலுவலர்கள், சக நண்பர்கள் நாங்கள் உதவுகிறோம் விளையாட்டை தொடருமாறு அவரிடம் கூறியுள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து ஜனகன் மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து மாநில அளவில், தேசிய அளவில் என பல்வேறு சாதனைகள் படைத்ததோடு, சர்வதேச அளவில் பூட்டானில் நடைபெற்ற செளத் ஏசியன் போட்டியில் ஒரு முறை தங்கப்பதக்கமும், நேபாளத்தில் நடைபெற்ற ஓபன் இண்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்பில் 2 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று விளையாட போதிய பொருளாதாரம் வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள ஜனகன் கூறுகையில், நான் இறகு பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் 3 முறை தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இருந்த போதிலும் தேசிய அளவில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கிலும், வெளிநாடுகளுக்கு சென்று சர்வதேச அளவில் விளையாட லட்சக்கணக்கிலும் செலவாகிறது.

    என்னால் முடிந்தவரை நானே வேலை பார்த்தோ, தாய் மற்றும் நண்பர்கள் உதவியோடு இதுவரை விளையாடி விட்டேன். இனிமேலும் நான் தொடர்ந்து விளையாட தமிழக அரசு எனக்கு பொருளுதவி மற்றும் ஏதேனும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    மேலும் இது தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். இதற்கிடையில் தந்தையின்றி தவித்து வரும் எனது மகன் விளையாட்டில் மென்மேலும் உயர தமிழக அரசு உதவிட வேண்டும் என தாய் கற்பகம் கேட்டுக்கொண்டார்.

    கர்நாடகத்தில் உள்விளையாட்டரங்க திறப்பு விழாவில் பங்கேற்ற வருவாய்த்துறை மந்திரி விளையாட்டு வீரர்களை நோக்கி பரிசுப் பொருட்களை துாக்கி எறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. #RVDeshpande
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தின் கார்வார் மாவட்டத்தில் ஹலியால் தொகுதி அமைந்துள்ளது. இங்கு பொதுப்பணித் துறையால் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இதன் திறப்பு விழாவுக்கு பின்னர், தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கி கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த விழாவில் ஹலியால் தொகுதி எம்.எல்.ஏ.,வும், மாநில வருவாய்த்துறை மந்திரியுமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே கலந்து கொண்டார்.

    அவர் உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, ஒவ்வொருவராக பரிசுகள் பெற அழைக்கப்பட்டனர். வீரர்கள் மேடைக்கு அருகில் வந்தபோதும், அவர்களுக்கு உரிய விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொருட்களை கைகளில் கொடுக்காமல் மேடையில் இருந்தபடி தூக்கி எறிந்தார்.

    வருவாய்த்துறை மந்திரியின் இந்த செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தேஷ்பாண்டே ஏற்கனவே குடகு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை நோக்கி நிவாரண பொருட்களை தூக்கி வீசிய சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #RVDeshpande
    ×