என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "spurious liquor"
- அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
- பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களை சேகரித்தனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம்தான் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. கங்காராம் புனியா கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்ததாக வந்த தகவலின்பேரில் எங்கள் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவரிடம், விவரத்தைக் கேட்டு அறிந்தோம். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சிலரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கள்ளச்சாராயம் தொடர்பாக பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது 308, 302, 120-B போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வீடுகளில் காலியான மது பாட்டில்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்நிலையில், அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விஷ சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் திரண்டனர்.
- விஷ சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் விஷ சாராயம் குடித்து பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பத்தில் பதட்டம் நிலவிவருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எக்கியார் குப்பம் பகுதியில் விஷ சாராயம் விற்பனையை தடுக்கக்கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு, மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது.
கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயத்தை குடித்ததால் 10 பேர் இறந்துள்ளனர். அவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து இருப்பதாக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் கூறினார். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது, மேலும் வேறு குற்றவாளிகள் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பராங்கி மாவட்டத்தில் ராணிகஞ்ச் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று இரவு ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர்.
அவர்களில் பலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் ராம்நகர் சமூக சுகாதார மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.
திங்கள் அன்று தேர்தல் முடிந்ததும் அரசியல் கட்சியின் சார்பில் விருந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். #spuriousliquor
அசாம் மாநிலம், கோலகாட் மாவட்டத்தில் உள்ள போர்பதார் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 48 மணி நேரத்தில் ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் தயாரித்தவர்கள் யார் ? அது எங்கு தயாரிக்கப்பட்டது ? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். #SpuriousLiquor
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்