என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sri Lanka Cricket"
- டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
- அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணி அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு புறப்பட்டது.
இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
- குணதிலகாவை கைது விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நீதிமன்ற நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிட்னி போலீசார், குணதிலகாவை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தனுஷ்கா குணதிலகா மீதான குற்றச்சட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிககை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளார். குணதிலகா நவம்பர் 7ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம், நீதிமன்ற நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும். மேலும் ஐசிசியுடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என இலங்கை கிரிக்கெட் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் குணதிலகா கைது செய்யப்பட்டதால் அவர் இல்லாமல இலங்கை அணி நாடு திரும்பியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்