search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka Port"

    • திட்டமிட்டபடி சீன போர்க்கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.
    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி கொழும்பு துறைமுகத்தில் சீனா உளவு கப்பல் நிறுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    சீன ராணுவத்துக்கு சொந்தமான 'ஹாய் யாங் 24 ஹாவ்' என்ற போர்க்கப்பல் இலங்கையில் கொழும்பு துறைமுகத்துக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்தது. இருந்தபோதிலும் திட்டமிட்டபடி சீன போர்க்கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது. 129 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 வீரர்கள் இருப்பதாகவும், இந்த படைக்கு கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இலங்கைக்கு சீன போர்க்கப்பல் வந்துள்ளது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இலங்கையில் சீன கப்பல் இருப்பதாகச் செய்திகளைப் பார்த்தேன். அது போர்க்கப்பலா இல்லையா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அதே சமயம் நாட்டின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாக கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது என்பதை உறுதிபட தெரிவிக்கிறேன்" என்றார்.

    முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி கொழும்பு துறைமுகத்தில் சீனா உளவு கப்பல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    ×