என் மலர்
நீங்கள் தேடியது "Sri Lankan navy"
- கடந்த மாதம் 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.
- 2 படகு மீனவர்களும் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா (வயது 45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்தோணி மகாராஜா உள்பட 12 மீனவர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.
அதேபோன்று அதே பகுதியை சேர்ந்த அந்தோணி தென் டேனிலா (வயது 23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த மாதம் 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.
இந்த 2 படகு மீனவர்களும் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தருவைகுளத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் மடக்கி பிடித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் 22 பேரும் இலங்கை கடற்படையில் தளத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சிறை பிடிக்கப்பட்ட 22 பேரை விடுதலை செய்யக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் தருவைகுளம் ஊராட்சி கூட்டமைப்பினர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது.
- இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
நாகப்பட்டினம்:
தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது மகன் மணிகண்டபிரபு, அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் ஆகியோருடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
இந்நிலையில் நேற்று மாலை அனைவரும் கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
தொடர்ந்து, ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
அதனை தொடர்ந்து, காயமடைந்த மீனவர்கள் செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு வந்தனர். பின்னர், சக மீனவர்கள் அவர்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் எங்களுக்கு சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் மீண்டும் நாகை மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது சக மீனவர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
- கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
- கைது செய்யப்பட்டவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை டாடாநகரை சேர்ந்தவர் செல்வநாதன் (வயது 40). இவர் சொந்தமாக விசை படகு வைத்துள்ளார்.
அந்த விசை படகில் படகின் உரிமையாளர் செல்வநாதன், அதே பகுதியை சேர்ந்த விஜயநாதன், குழந்தைவேல், பாக்கியராஜ் மற்றும் ஆனந்தவேல், மாதவன், இனியவன், சதன், சரவணன், சுப்பிரமணியன், செந்தில், ஆறுமுகம் உள்ளிட்ட 12 பேர் கடந்த 10-ந்தேதி அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியகரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் முல்லைத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 12 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யபட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு மீனவர்களை படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்து வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10-ந்தேதி எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் இன்று 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்.
- மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 படகுகளில் சென்ற 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- புதுச்சேரியை சேர்ந்த 20 படகுகள் இலங்கையில் உள்ளன.
புதுச்சேரி:
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இலங்கை கடற்படை 13 பேரை சிறை பிடித்துள்ளது. இதில் 2 மீனவர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்காலை சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட 13 பேர் இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் கிளிஞ்சல் மேடு செந்தமிழன், நாகை நம்பியார் நகர் பாபு ஆகியோர் காயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு நமது நாட்டுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுத உள்ளார். தொலைபேசி மூலமும் பேசி அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பார்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சை அளிக்க புதுச்சேரிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பும் புரிதலும் இருக்க வேண்டும்.
கடலில் எல்லை எங்குள்ளது என்று யாருக்கும் தெரியாது. மீன் வளர்ந்தது மேட் இன் இந்தியாவா? மேட் இன் இலங்கையா? என கூற முடியாது. கடலில் மீன் என்பது பொதுவான விஷயம்.
இதனால் இலங்கை அரசு இலங்கை ராணுவம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். நாமும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.
நாமும் புரிதலோடு நடந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுப்பதும் புரிதலும் இலங்கை ராணுவத்திடம் இல்லை. அவசரப்படுகிறார்கள்.
புதுச்சேரியை சேர்ந்த 20 படகுகள் இலங்கையில் உள்ளன. அவற்றையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும்
தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை மீனவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் இந்த முறை துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- துப்பாக்கி முனையில் படகில் இருந்த11 மீனவர்கள், கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் என 13 பேரையும் கைது செய்தனர்.
- காயமடைந்த பாபு, செந்தமிழ் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் புதுவை, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகளை பிடித்துச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தவேல். அவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த 26-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். இதனால் மீனவர்கள் செய்வதறியாமல் திகைத்த நிலையில் நடுக்கடலில் வைத்து வானத்தை நோக்கியும், படகு மீதும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால் பயந்து போன மீனவர்கள் பாபு, செந்தமிழ் ஆகியோர் கடலுக்குள் குதித்து தப்ப முயன்றனர். இதில் அவர்கள் இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து துப்பாக்கி முனையில் படகில் இருந்த11 மீனவர்கள், கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் என 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவர்களில் காயமடைந்த பாபு, செந்தமிழ் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சி காட்சிகள் வெளியானது.
மீனவர்களின் படகுகளை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.
- விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.
அவர்கள் எல்லைதாண்டி வந்தாக கூறி சிறைபிடிப்பு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் 13 பேரை சிறைபிடித்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து 171 விசைப்படகுகளில் 1,200-க்கும் மேற்பட்ட மீனர்கள் மீன்துறை அலுவலக அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர். அவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியான தனுஷ்கோடி-தலை மன்னார் இடையே வலை களை விரித்து இருந்தனர்.
நள்ளிரவில் அந்த பகுதிக்கு ரோந்து பணி வந்த இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட படகு களை சுற்றிவளைத்தனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட பெரும்பாலான படகுகளில் இருந்த மீனவர்கள் அவசரம் அவசரமாக வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில் கடைசியாக தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினத்தை சேர்ந்த சந்தியா சதீஷ் (வயது 30) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல்பகு தியில் மீன்பிடித்ததாக கூறி, அந்த படகில் இருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த எபிரோன், காட்ரு, டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, பயாஸ், சேசு, மண்டபம் காந்தி நகரைச் சேர்ந்த ரவி ஆகிய 10 பேரையும் சிறைபிடித்து இலங்கையில் உள்ள தாழ்வுப்பாடு துறைமு கத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகி றார்கள்.
முன்னதாக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த நண்டு, இறால் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்களையும், அவர்களுக்கு சொந்தமான ஜி.பி.எஸ். கருவி மற்றும் மீன்பிடி உபகரணங்களை யும் கைப்பற்றினர்.
கடந்த மாதம் ஒரே நாளில் ராமேசுவரம் மீன வர்கள் 34 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலை யில் மீண்டும் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்ப வம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர்.
- தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே பாரம்பரிய இடத்தில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் பதட்டம் அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்த போதிலும் அதில் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளையும் விரட்டியடித்தனர்.
இது எங்கள் நாட்டு எல்லை, இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறிய அவர்கள் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), நிகிதன் (16), ஜேசு பூங்காவனம் (42), அந்தோணி சந்தியா (19), கார்லோஸ் (21), நிஷாந்த் (38), டூவிஸ்டன் (21), அய்யாவு அந்தோணி டிமக் (34),
மற்றும் சுதன் என்பவரது படகில் இருந்த அருளானந்தம் (43), கெலஸ்டின் (55), அந்தோணி ஆரோன் (38) என மொத்தம் 14 மீனவர்களையும் சிறைபிடித்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இரணத்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லைதாண்டி மீன் பிடித்ததாகவும் இலங்கை நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 70-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதிலும் கடந்த மாதம் 25-ந்தேதி ஒரே நாளில் 34 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த 34 பேரில் 32 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் அவர்களுக்கு பல லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கைது நடவடிக்கை சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசு ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.
இதில் ஏராளமான படகுகள் இயக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ளது. மேலும் அந்த படகுகளை தங்களது வாழ்வாதாரம் கருதி விடுவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. அதற்கு மாறாக தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் 29-ந்தேதி எல்லைதாண்டியதாக கைதான 4 மீனவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகு, அதில் இருந்த வலைகள், ஜி.பி.எஸ். கருவி, எந்திரங்கள், நங்கூரம் உள்ளிட்ட உபகரணங்களை ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்திற்கு இலங்கை அரசு நேற்று ஏலம் விட்டுள்ளது. இந்த தகவல் தமிழக மீனவர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.
- மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இலங்கை கடற்படை அத்துமீறல்
- மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக உள்ளது
சென்னை:
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3-7-2022) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இன்று (4-7-2022) கடிதம் எழுதியுள்ளார்.
15-6-2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 5 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை நேற்று இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், இன்று மேலும் 5 பேரை கைது செய்துள்ளது. #FishermenArrested
