என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "srilanka tourist"
- கொரோனா காலத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளை காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும்.
- இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
இலங்கையில் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பின்பு இலங்கையில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. விலைவாசி உயர்வு, வேலையின்மை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
இலங்கையின் முக்கிய தொழிலான சுற்றுலா தொழிலும் முடங்கி போனது. இதனால் அங்கு பொருளாதார வளர்ச்சிக்கு வழி இல்லாமல் போனது.
இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. கொரோனா பிரச்சினையும் குறைந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளும் செல்ல தொடங்கி உள்ளனர்.
2022-ம் ஆண்டு இலங்கைக்கு 7.2 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இது கொரோனா காலத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளை காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும்.
இலங்கையின் காலே பகுதிக்கு தான் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வார்கள். அங்குள்ள கடை வீதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இப்போது அங்கு முன்பு போல மக்கள் கூட்டம் வருவதில்லை. இதுபற்றி அங்குள்ள வியாபாரிகள் கூறும்போது, "இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.