என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Stamping Camp"
- எடை அளவைகளுக்கான முத்திரையிடும் முகாம் தொடங்குகிறது.
- ரூ.5 ஆயிரம் வீதம் அபதாரம் கட்ட நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள வணிகர்கள் நலன் கருதி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் எடை அளவுகள் முகாம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வணிகர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நகரில் உள்ள முத்து வடுகநாதர் சித்தர் கோவில் வளாகத்தில் நடைபெறும் முகாமில் தாங்கள் பயன்படுத்தி வரும் மின்னணு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள், விட்ட தராசுகள், எடை கற்கள், நீட்டல் அளவைகளை ஆய்வாளர் முன்பு மறு பரிசீலனை செய்து அவற்றிற்கு முத்திரை வைத்து பயன்பெறலாம். மேலும் வணிகர்கள் முத்திரை வைக்க தவறும் பட்சத்தில் எடை அளவு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபதாரம் கட்ட நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க திருமண மண்டபத்தில் படி, அளவைகள், தராசுகளுக்கு முத்திரையிடும் முகாம் நேற்று தொடங்கியது.
- இந்த முகாம் வருகிற 17-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க திருமண மண்டபத்தில் படி, அளவைகள், தராசுகளுக்கு முத்திரையிடும் முகாம் நேற்று தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் தாமோதரன், பொருளாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் முத்திரை ஆய்வாளர் ராம் மோகன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டில் வியாபாரிகளின் படிக்கற்கள் மற்றும் தராசுகளுக்கு முத்திரைகள் இடப்பட்டன. இந்த முகாம் வருகிற 17-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய முறையிலான தராசு, படிக்கற்கள், அளவைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், எலக்ட்ரானிக் தராசுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் முத்திரை பதிக்கப்பட வேண்டும் என்றும், இந்த வாய்ப்பை ஆறுமுகநேரி, மூலக்கரை, சோனகன்விளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்