search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "started fasting"

    • கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
    • சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் எங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

    கோவை,

    தமிழ் மாதங்களில் முக்கிய மாதங்களில் ஒன்றாக கார்த்திகை மாதம் இன்று தொடங்கியது. இந்த நாளில் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம்.

    அதேபோல் இன்று கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதையொட்டி இன்று அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    கோவை சித்தாபுதூரில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில் இன்று காலையே பக்தர்கள் திரண்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மாலையும் அணியும் பக்தர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்ததால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மண்டல பூஜை விழாவும் இன்று தொடங்கியது. இன்று முதல் 12-ந் தேதி வரை ஆலயத்தின் தந்திரி பிரம்மஸ்ரீ சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சனி தோஷ சாந்தி ஜெபமும் நடத்தப்படுகிறது.

    அடுத்த மாதம் 13-ந்தேதி அய்யப்ப சாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும். மண்டல விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 17-ந் தேதி அகண்ட நாம பஜனையும், 18 -ந் தேதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், பொது மக்களும் பங்குபெறும் அன்னதானம் நடைபெற உள்ளது.

    இதேபோல கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அய்யப்பன் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்கள் குவிந்து மாலை அணிந்தனர்.

    இதனால் சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் எங்கும் ஒலிக்கத் தொடங்கியது. இன்று முதல் மகர விளக்கு பூஜை முடியும் வரை பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிந்து சபரிமலை செல்வதை காணலாம்.

    ×