search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sterlite copper"

    • நிலக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் அக்கட்சியின் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார்.
    • வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசினார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் அக்கட்சியின் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எங்கள் கட்சிக்கு சீட் கொடுக்க விடாமல் தடுத்த ஓ.பி.எஸ். நிலை தற்போது பரிதாபமாக உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் சேர்ந்து தான், 7 உட் பிரிவுகளை உள்ளடக்கி, தேவேந்திரகுல வேளாளர் என அரசு ஆணையை பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்பேரில் சான்று வழங்கப்பட்டுள்ளது.

    அதற்கு நாங்கள் எல்லோரும் விசுவாசமாக இருப்போம். தமிழக அரசியல் செயல்பாடுகள் இப்போது சுமாராக தான் உள்ளது. யாருக்கும் தொந்தரவு கிடையாது. அதே சமயம் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மீண்டும் மக்களுக்கு பணியாற்ற வேண்டுகிறேன்.

    தொழிலாளர்கள் முன்னேறுவதற்கு தொழி ற்சாலைகள் தேவைப்படு கிறது. அதனால், வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை இங்கிருந்து விற்கப்பட்டால், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

    அந்த நிறுவனம் விற்க ப்படகூடாது. மீண்டும் தொழி ற்சாலையை திற க்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வேண்டுகோள். இப்பகுதியில் எங்களது கட்சி சார்பில் ஒட்டப்பட்டி ருந்த போஸ்டர்களை மர்மநபர்கள் கிழித்துள்ள னர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. #KeralaFloodRelief
    தூத்துக்குடி:

    கேரள மாநிலத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழைக்கு சுமார் 380 பேர் பலியானார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் சார்பில் கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காய்கறிகள், எண்ணை, தேங்காய், அரிசி மற்றும் உணவு பொருட்கள், பிஸ்கட்கள், பழங்கள், சுத்தம் செய்வதற்கு பயன்படும் பொருட்கள், மீட்புக்கருவிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இவை அனைத்தும் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு ஒரு கண்டெய்னர் லாரியில் நிரப்பப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாகனத்தை ஸ்டெர்லைட் நிறுவன பொது மேலாளர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இவை கேரளா பத்தனம் திட்டா பகுதி தாசில்தாரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. #KeralaFloodRelief
    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என கூறியுள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteKillings #CollectorsReport

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். 



    இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும். மே 24-ம் தேதி அதிகாலை ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொழிற்சாலை எந்த விதத்திலும் தான் தன்னிச்சையாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பயன்படுத்த முடியாது. ஆலை பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுவந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. 

    2013-ம் ஆண்டிலேயே ஆலைக்கான மின் இணைப்பை துண்டிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தை அணுகி அனுமதி பெறப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.

    ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்குவதற்கான இசைவாணை மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலை இயங்க ஏப்ரல் 9-ம் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்தது. அதன்பின் ஆலை இயங்கவில்லை. 

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings #CollectorsReport
    துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது தொடர்பாக நாளைக்குள் ஆய்வு செய்து முடிவுவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings #Internetservicescutdown

    மதுரை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க இணையதளச் சேவைகளை முடக்கிவைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. எனினும், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணையச்சேவைக்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது தொடர்பாக நாளைக்குள் ஆய்வு செய்து முடிவுவெடுக்க மறுசீராய்வு ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் எனவும் அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை சட்ட உதவிக்குழு நேரில் ஆய்வு செய்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings #Internetservicescutdown 
    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பேருந்துக்கு தீவைக்கப்பட்டதை அடுத்து அனைத்து பஸ்களும் பணிமனைக்கு திரும்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிறிய வாகனங்கள் கூட ஓடாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.

    தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. தூத்துக்குடியில் மட்டும் இன்னும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாலை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அரசுப்பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றனர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா கருங்குளத்திற்கு விரைந்தார். கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து அரசுப் பேருந்துகள் பணிமனைகளுக்கு திரும்ப அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடியில் இயங்கும் அரசுப்பேருந்துகள் அந்தந்த பணிமனைகளுக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.  #ThoothukudiPoliceFiring #SterliteKillings
    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் ஒரு அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு தப்பியோடினர். #ThoothukudiPoliceFiring #SterliteKillings

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிறிய வாகனங்கள் கூட ஓடாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் படை வர வழைக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் ரோந்து வந்து கண்காணித்தனர். தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.
     
    தற்போது அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு இன்று ஒரளவு அமைதி திரும்பி உள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. தூத்துக்குடியில் மட்டும் இன்னும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் ஒரு அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு தப்பியோடினர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting #SterliteKillings

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.

    மனுதாரர் வாதிடுகையில், ‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முழங்காலுக்கு கீழே சுட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை’ என கூறினார். மேலும், தூத்துக்குடி சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மக்களுடனே அரசு உள்ளது. மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடாத கோரிக்கைகளை வைக்கிறார்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்பதால் உடனடியாக உடல்களை அவர்களிடம் ஒப்படைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

    அந்த மனு மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். #SterliteProtest  #ThoothukudiShooting #SterliteKillings
    தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை தெரிவித்துள்ளது. #SterliteProtest #ThoothukudiPoliceFiring

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர். 

    ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  

    சில மணிநேரங்களுக்கு பின்னர் மீண்டும் அண்ணாநகர் 6-வது தெரு பகுதியில் போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை தெரிவித்துள்ளது. #SterliteProtest #ThoothukudiPoliceFiring
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring #MKStalin

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். 

    இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர். 



    ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று பிற்பகல் 3 மணியளவில் தூத்துக்குடி நகருக்கு வந்தார். அண்ணாநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சாதித்து ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, தமிழக முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்தனர். #SterliteProtest #ThoothukudiPoliceFiring #MKStalin
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், ஆலையைச் சுற்றியுள்ள பகுதிக்கு 144 தடை உத்தரவு விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #BanSterlite #SterliteCopper #TalkAboutSterlite

    தூத்துக்குடி:

    மக்கள் கூட்டமைப்பு, வணிகர் சங்கம், மீனவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகள் இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர். 

    இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையப் பகுதிகளில் நேற்று (22-ம் தேதி) இரவு பத்து மணி முதல் நாளை (23-ம் தேதி) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பாக 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளதால் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 21.05.2018 இரவு 10.00 மணி முதல் 23.05.2018 காலை 08.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    அதன்படி ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், சைக்கிள், இரு சக்கரவாகனம், நான்கு சக்கரவாகனம் மூலம் பேரணியாக, வாள், கத்தி, கம்பு, கற்கள், அரசியல் மற்றும் சாதி கொடிக் கம்புகள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள பொதுமக்களை; அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    இத்தடைஉத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கும், காவல்துறை அனுமதி பெற்ற இனங்களுக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #BanSterlite #SterliteCopper #TalkAboutSterlite
    ×