search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St.Michael's School"

    • பிரதம மந்திரி இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந் தேதி நடைபெற்றது.
    • தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தென்காசி:

    இந்தியா முழுவதும் தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் பிரதம மந்திரி இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந் தேதி நடைபெற்றது.

    தமிழ்நாடு அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 26-ந் தேதி வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வில் 9-ம் வகுப்பு மாணவிகள் 164 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் 33 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.1½ லட்சம் மத்திய அரசால் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

    இதைப்போலவே தமிழ்நாடு அளவில் 11-ம் வகுப்பு மாணவிகள் மொத்தம் 232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு 11 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வீதம் 2 வருடங்களுக்கு மொத்தம் ரூ.2½ லட்சம் மத்திய அரசால் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

    சாதனை படைத்த 56 மாணவிகள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர், பள்ளியின் தாளாளர், அமலவை அருட் சகோதரிகள் மற்றும் அமலவை நிர்வாகத்தினர் அனைவருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தென்காசி பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் சாதனை படைத்த மாணவிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    ×