search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stray dog"

    • ஜவஹர்நகர் நகரில் நவம்பர் 12 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • படுகாயமடைந்த நாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

    தெலுங்கானாவில் 4 தெரு நாய்களை 3 பேர் சேர்ந்து கொடூரமாக அடித்து கொலை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்நகர் நகரில் நவம்பர் 12 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 நாய்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நாய் ஒன்று தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொல்லப்பட்ட 3 நாய்களில் ஒரு நாய் கர்ப்பமாக இருந்துள்ளது. இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கோவத்தை தூண்டியுள்ளது.

    இதனையடுத்து ஜவஹர்நகர் போலீசார் நாய்களை அடித்துக் கொன்ற 4 பேரை கைது செய்தனர்.

    • நாய் இறந்த பிறகு, உடலை பக்கத்தில் உள்ள அவரது வயலில் புதைத்துள்ளார்.
    • விலங்குகள் நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு.

    தெலுங்கானாவில் தெருநாயை ஒருவர் கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ப்ரீத்தி தனது புகாரில், குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு தெருநாயை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். பின்பு நாய் இறந்த பிறகு, உடலை பக்கத்தில் உள்ள அவரது வயலில் புதைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    • படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு.
    • உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை.

    கடலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து கொன்றுள்ளது.

    குழந்தையின் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்து குழந்தையை நாய் கடித்து குதறியுள்ளது.

    இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
    • கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.

    கேரளா மாநிலம் கொச்சி அருகே மூவாட்டுப்புழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    இதில், சிறுவன், பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    9 பேரை கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.

    மேலும், கோழிக்கோடு அருகே ராதாபுரத்தில் முதியவர்கள் இருவரை கடித்துவிட்டு தெருநாய் ஓடியுள்ளது.

    • காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்று வட்டாரத்தில் தெருநாய் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் கும்பலாக சுற்றித்திரிந்த தெருநாய்கள் அவ்வழியாக வருவோர், செல்வோரை எல்லாம் கடித்து குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், வெறிநாய் பொதுமக்களை கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்களை அனுப்பி வைத்து நாய்கள் பிடிக்கப்பட்டன. நகரில் உள்ள நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.

    • பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது.
    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது. அதை விரட்ட சென்ற தாயாரையும் கடிக்க வந்த போது அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் நாயை விரட்டினர். கடந்த மாதத்தில் மட்டும் கீழக்கரையில் 9 நபர் களை வெறி நாய்கள் கடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களை அச்சு றுத்தும் வெறி நாய் களை பிடிக்க கீழக் கரை நகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாவட்ட கலெக்டர், நகராட்சி அதிகா ரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர் தலைவர் அபுதாஹிர் கூறுகையில்,

    கீழக்கரையில் தொடர்ச்சியாக வெறி நாய்கள் பொது மக்களையும் குழந்தை களையும் கடித்துக் கொண்டி ருக்கிறது. இதனை எஸ்.டிபி.ஐ. கட்சி வன்மையாக கண்டிப்ப தோடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கீழக்கரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    • தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94, 95-வது வார்டு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. திருநகர் பகுதியில் பொதுமக்கள், நடைபயிற்சி செல்வோர், மாணவ-மாணவிகள், பெண்கள் அதிகளவில் சென்று வரும் சாலைகளில் நாய்கள் கூட்டமாக திரிகின்றன.இவைகள் வாகனங்களில் செல்ப வர்களையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

    மேலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழி, ஆடு, வாத்து போன்ற வளர்ப்பு பிராணிகளை நாய்கள் தூக்கிச்செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துட னேயே வெளியே சென்று வருகின்றனர்.

    நாய்களுக்கு கருத்தடை செய்யப் பட்டு அவற்றின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதாக மாநக ராட்சி சார்பில் கூறப்பட்டா லும், தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே கூட்டமாக திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது.
    • நேற்று ஒரே நாளில் மட்டும் 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது.

    கோவை,

    கோவையின் மைய பகுதியில் ரேஸ்கோர்ஸ் அமைந்துள்ளது. இங்கு 2 அரை கிலோ மீட்டரில் நடைபயிற்சி செல்லும் மைதானம் உள்ளது. இங்கு தினசரி ஆயிரகணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ரேஸ்கோர்சில் குழந்தைகள் விளையாடும் பூங்கா, உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அடைந்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் இடங்கள் அரசு அதிகாரிகளின் குடியிருப்பு, ஆலயம், கோவில் ஆகியவையும் அமைந்துள்ளது. எனவே இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை விரட்டி விரட்டி காலில் கடித்தது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த வெறிபிடித்த நாய் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது. இதனால் அந்த வழியாக சென்ற வர்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். மேலும் சிலர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

    இதுபற்றி ரேஸ்கோர்சில் தினசரி நடை பயிற்சி செல்லும் வாலிபர் ஒருவர் கூறியதாவது:-

    ரேஸ்கோர்சில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் நாய்களை பிடித்து செல்கிறார்கள். பின்னர் கருத்தடை செய்த பின்பு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விடுகின்றனர். சில நேரங்களில் வேறு பகுதிகளில் பிடித்த நாய்களையும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இதன் காரணமாகவும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பலர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு தினசரி வந்து நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் உணவு பொருட்களை அளிக்கின்றனர். இதனால் ஈர்க்கப்பட்ட நாய்கள் அங்கே தங்கி விடுகின்றன. இப்படி நாய்களுக்கு உணவு அளிக்க விரும்புபவர்கள் நாய்களை அவர்களது வீடுகளுக்கு எடுத்து சென்று உணவு வழங்க வேண்டியது தானே. எனவே அதிகாரிகள் நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு, சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருகின்றனர்.

    இதனால் அந்த நாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பள்ளி சிறுவர்களை கடிப்பதற்கு துரத்தி சென்று அவர்களை அச்சுறுத்தி வருகின்றன.

    நேற்று இரவு கோத்தகிரி பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.

    அங்கிருந்தவர்கள் அந்த தெரு நாய்களை துரத்த முற்பட்டபோது அங்கிருந்த சிற்றுண்டி கடை உரிமையாளரை கடிக்க சென்றதால் அவர் பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    எனவே இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    • பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
    • இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கோத்தகிரி பேருந்துநிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருவதால் தெருநாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று இரவு கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குன்னூர் செல்வதற்காக பயணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரை 7 தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்க முயன்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தெருநாய்களை துரத்திவிட்டதால் அந்த பயணி தெருநாய்களிடம் தப்பித்து சென்றார். இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளாவில் தெருநாய்களின் தொந்தரவு குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
    • தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன.

    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவும், ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் பள்ளிக் குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பள்ளிக்குச் செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். குழந்தைகளைப் பாதுகாக்கவே இந்த ஏர் கன் துப்பாக்கியை ஏந்தியபடி மாணவியரை அழைத்துச் செல்கிறேன் என தெரிவித்தார்.

    ×