என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Street lighting"
- தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த மாணவி வீட்டுக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்பட்டது.
- ஏழை, எளிய மாணவ, மாணவியின் நிலை பற்றி தகவலறிந்த தனியார் அறக் கட்டளையினர் மின் இணைப்பு வழங்க முடிவு செய்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சமய–நல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த–வர் சின்னையா (வயது 56), சமையல் உதவியாளர். இவரது மனைவி சுதா (41). தற்காலிக டெங்கு ஒழிப்பு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு ஜனனி (15) என்ற மகளும், கபிலேஷ் (11) என்ற மகனும் உள்ளனர். இதில் ஜனனி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பும், கபிலேஷ் 7-ம் வகுப்பும் படித்து வரு–கின்றனர். இவர்கள் சொந்த இடத்தில் மண் மதில் வீடு கட்டி ஓடுகளால் மேற்கூரை அமைத்து வசித்து வருகின்ற–னர்.
இவர்களது வீட்டிற்கு நேற்று வரை மின்சார இணைப்பு இல்லை. கார–ணம், இவர்கள் வீட்டின் அருகில் மின்சார லைன்கள் எதுவும் செல்ல வில்லை. அதற்கு தனியாக மின் கம்பம் அமைத்தால்தான் மின் இணைப்பு வழங்கமுடி–யும் என்று மின்வாரியத்தினர் தெரிவித்து விட்டனர். அதற்கு ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் செலவு ஏற்படும் என்பதாலும், பணவசதி இல்லாததால் மின் இணைப்பு பெற முடியாம–லும் அவதிப்பட்டு வந்த–னர்.
அதனால் தெருவிளக்கு வெளிச்சத்தில் ஜனனி, கபிலேஷ் இருவரும் இரவு நேரங்களில் வீட்டு பாடங் கள் எழுதி, படித்து வந்தனர். இந்த ஏழை, எளிய மாணவ, மாணவியின் நிலை பற்றி தகவலறிந்த தனியார் அறக் கட்டளையினர் தங்களது சொந்த செலவில் மின்கம் பம் அமைத்து மின் இணைப்பு வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று மின் இணைப்பு வழங்கி மின் விளக்கு வசதி ஏற்ப–டுத்தி தரப்பட்டது.
இந்த மின்இணைப்பு பெற்றுத்தந்த தலைமை நிர்வாக அலுவலர் பால–கிருஷ்ணன், அசோக்குமார், சமூக பொறுப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் மற்றும் அறக்கட்டளையினருக்கு சின்னையா, சுதா, ஜனனி, கபிலேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜீவானந்தம் மனோகரன், கருணாநிதி பொன்னுத்தாய், உமா மகேஸ்வரன் உறவினர்க–ளும், நண்பர்கள், பொது–மக்களும் நன்றி தெரிவித்த–னர்.
- உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர் வார்டு சுப்புராயப் பிள்ளை சத்திரம் கென்னடிநகர் பகுதியில் உள்ள லயன்ஸ்கிளப் வீதி மற்றும் கரிமேடு வீதி ஆகிய வீதிகளில் கடந்த காலங்களில் இருந்து தெரு விளக்குகள் இல்லாமல் அப்பகுதி இருள் சூழ்ந்த நிலையில் இருந்து வந்தது.
- விழாவில் மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மின்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர் வார்டு சுப்புராயப் பிள்ளை சத்திரம் கென்னடிநகர் பகுதியில் உள்ள லயன்ஸ்கிளப் வீதி மற்றும் கரிமேடு வீதி ஆகிய வீதிகளில் கடந்த காலங்களில் இருந்து தெரு விளக்குகள் இல்லாமல் அப்பகுதி இருள் சூழ்ந்த நிலையில் இருந்து வந்தது.
புதுவை அரசு மின்துறை மூலம் இங்கு மின்கம்பங்கள் அமைத்து தெரு விளக்குகள் அமைப்பதற்கான பூமி பூஜை லயன்ஸ் கிளப் வீதியில் நடந்தது. நேரு எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கினார்.
விழாவில் மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மின்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்