search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student Council"

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவா
    • திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவாறு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பேரவை நிர்வாகிகளுக்கு முதல்வர், பேராசிரியர்கள் ரகுபதி, சரவணா தேவி, ரமேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பிளஸ்-2 படித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில வழிகாட்டுதல் களப்பயணம் என்ற அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர். கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவருக்கும் மலர்கள் கொடுத்து வரவேற்றார்.

    அவர்களுக்கு வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை நேரில் அழைத்து சென்று காட்டினர். இது குறித்து முதல்வர் ரேணுகா கூறுகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு கல்லூரியில் உள்ள வசதிகள், கற்றுக்கொடுக்கும் தன்மைகள் குறித்து அறியச்செய்து அவர்களை அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு அரசு உத்திரவின்படி நடத்தப்பட்டது என்றார்.

    • நேர்மையாக வாக்களிப்பது முறையினை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
    • குழுக்களின் தலைவர் மற்றும் துணை தலைவர்கள் பதவியேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாணவர்கள் அனைவரும் கணினி வாயிலாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதன் மூலம் தங்களுடைய வாக்கின் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் எவ்வாறு நேர்மையாக வாக்களிப்பது என்ற முறையினையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

    தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவ பேரவையின் மாணவ தலைவராக 12-ம்வகுப்பு மாணவர் பிரதோஷ் மற்றும் மாணவ தலைவியாக 12-ம்வகுப்பு மாணவி அருந்ததி ஆகியோர் பதவியேற்றனர்.

    நிகழ்ச்சியில் ஹெர்குலிஸ், ஒரையன், லைரா, பெகாசிஸ் ஆகிய குழுக்களின் தலைவர் மற்றும்துணை தலைவர்கள் பதவியேற்றனர். மேலும் பிரஸ் கிளப், கல்ச்சுரல் கிளப், மேட் சயின்ஸ் கிளப், மேஜிக்கல் மேக்ஸ், டெக்னோ கிளப், நேச்சர் கிளப் ஆகிய கிளப்களுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர்களும் பதவியேற்றனர். நிகழ்ச்சியில் மொத்தமாக 27 மாணவ, மாணவிகள் பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் பள்ளி முதல்வர் லாவண்யா, துணை முதல்வர்,தலைமையாசிரியை, ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர். பள்ளியின் இயக்குனர் - செயலாளர் பேசுகையில் , தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழுமாறு அறிவுரை வழங்கினார்.  

    ×