search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sunshine"

    வெண்ணந்தூர் அருகே கடும் வெயில் காரணமாக ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வெண்ணந்தூர்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ளது கல்கட்டானூர் ஏரி. இந்த ஏரியில் கட்லா, ரோகு, பட்டை, கெளுத்தி போன்ற மீன்கள் குத்தகைதாரர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வருகிறது.

    ஏரியில் நீர்மட்டம் குறைந்ததாலும், வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருப்பதாலும் தண்ணீர் வெப்பமானது. இதனால் அந்த ஏரியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஏரிக்கு சென்று செத்து மிதந்த மீன்களை பார்த்து வேதனை அடைந்தனர்.

    சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர் மணிமுத்தாறு வழியாக ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, ஓ.சவுதாபுரம் சுற்றுவட்டார பகுதி ஏரிகளை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து தண்ணீர் கல்கட்டானூர் ஏரியை வந்து சேருகிறது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரியில் நீர்மட்டம் குறைவாக இருந்தது.

    தற்போது கல்கட்டானூர் சின்ன ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முற்றிலும் வற்றி மீன்கள் அனைத்தும் செத்து போகும் அபாயம் உள்ளது. மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    ×