என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "supply water to"
- கலெக்டர் அலுவலகத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- தற்போது 600 குளங்களுக்கு நீர் செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிள் குறித்து தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். அந்த வகையிலே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டுள்ளார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய்பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மொத்தமாக 958 கி.மீ நீளம் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது 600 குளங்களுக்கு நீர் செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 445 குளங்களுக்கு நீர் செல்ல குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவாக பணிகள் முடிக்கப்படும்.
இந்த திட்டத்தில் மெயின் குழாயின் நீளம் 106.8 கி.மீ. அதன் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு விட்டது. இதில் 6 நீரூந்து நிலையங்கள் வருகிறது.
பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் பவானி, நல்லக்கவுண்டன்பா ளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் என ஆறு நீர்உந்து நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சுமார் 267.1 கி.மீ. அளவு ஆளு குழாய் (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் 780.8 கி.மீ. அளவு குழாய் (மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மின்மாற்றிகள், பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.
மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 61.35 கி.மீ. அளவு (மொத்த நீளம் 63.15 கி.மீ) பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
நிலம் பயன்பாட்டு உரிமை பெறும்பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது. சுமார் 1036 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் - 1045 எண்கள்). இத்திட்டமானது கொரோனா பெருந்தொற்றால் 2020-2021-ம் ஆண்டுகளில் பணிகளில் தாமதம் ஏற்பட்டு தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1603.66 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, செயற்பொறியாளர் மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு-அவிநாசி திட்டம்), உதவி செயற்பொறியாளர்கள் சங்கர் (பவானி), ஜெ.வெங்டாஜலம் (பவானி), சண்முகராஜா (பெருந்துறை), விஜயகுமார் (நம்பியூர்) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்