என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » supporters arrest
நீங்கள் தேடியது "supporters arrest"
கோவையில் வருகிற 21-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து தினகரன் அணி அமைப்பு செயலாளரும், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை கூறியதாவது:-
எங்கள் கட்சியின் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் நாங்கள் அமைதியான முறையில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க.வினர் எங்கள் காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினார்கள். நிறைய கார்கள் தாக்கப்பட்டது.
இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்து உள்ளனர். எங்கள் காரை உடைத்தவர்களை போலீசார் கைது செய்யாமல் எங்களை கைது செய்து இருப்பது கண்டிக்கத் தக்கது.
அ.திமு.க.வினர் அவர்களாகவே தங்கள் காரை உடைத்து விட்டு நாங்கள் உடைத்ததாக கூறி உள்ளனர். இதில் எங்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வருகிற 21-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

×

X