search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surplus water outlet"

    • தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் இருந்து 3210 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • அதிக அளவு தண்ணீர் வந்ததால் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் அதிக அளவு வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2840 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியில் முழு கொள்ளளவான 35 அடியில் 34 அடிக்கு தண்ணீர் வந்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் இருந்து3210 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்கிறது.

    இந்த உபரி நீர் மெய்யூர், ராஜபாளையம் தரைப்பா லத்தை முழ்கடித்து தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதிக்கு வந்தது. அதிக அளவு தண்ணீர் வந்ததால் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் திருக்கண்டலம், இருளிப்பட்டி, ஜெகநாதபுரம், வன்னியம்பாக்கம், வல்லூர் அணைக்கட்டு, சுப்பாரட்டி பாளையம், பள்ளிபுரம், வெள்ளிவாயல் நாப்பாளையம் மணலிபுதுநகர், இடையஞ்சாவடி, சடையங்குப்பம் வழியாக சென்று எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலந்து வருகிறது.

    பொன்னேரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில், 90 ஏரிகள் உள்ளன. பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் பொதுப்பணித் துறை பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் தாசில்தார் மதிவாணன் பொதுப்ப ணித்துறை வருவாய்த்துறை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், மற்றும் அதிகாரிகள் , ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் பொன்னேரி அடுத்த திருப்பா லைவனம், ஆண்டார் மடம் பேரிடர் கால புயல் பாதுகாப்பு மையம் கட்டிடத்தினை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா பார்வையிட்டார். ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்தி ஆய்வு செய்து ஊத்து க்கோட்டை பொன்னேரி கவரப்பேட்டை மீஞ்சூர் ஆகிய இடங்களில் பொதுப்பணித்துறையினர் 15 ஆயிரம் மணல் மூட்டைகள் , சவுக்கு கம்புகள் கயிறுகள் 20ஆயிரம் காலி சாக்கு பைகள், ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பருவ மழையை யொட்டி தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக பொன்னேரி உதவி செயற் பொறியாளர் வெற்றிவேலன் கூறினார்.

    ×