என் மலர்
நீங்கள் தேடியது "Suspend"
- கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
- பிஜு ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா சட்டசபை இன்று கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதன்பின், சபையின் மையப்பகுதிக்குள் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எஸ்.டி, எஸ்.சி மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பி.ஜே.டி. எம்.எல்.ஏக்கள் மாநில அரசிடம் உத்தரவாதம் கோரினர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பியும், பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் பல முறை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ராமச்சந்திர கடாம், சாகர் சரண் தாஸ், சத்யஜித் கோமாங்கோ, அசோக் குமார் தாஸ் உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
- அரக்கோணம் கோட்டாட்சியர் உத்தரவு
- நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலுார், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில், அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
இங்கு, நெல் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.இந்த நிலையில் வேலூர் வ சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அரக்கோணம் அடுத்த சிறுகரும்பூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் குமரவேல் பாண்டியன் மேல்பாக்கம் நிர்வாக கிராம அலுவலர் குமரவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர். குமரவேல் பாண்டியன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்ததாக
போலியாக அடங்கல் சீட்டு கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் வழங்கியுள்ளார்.
இதனால் அவர்கள் கைத செய்யப்பட் டுள்ளனர். இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குமரவேலை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்வதாக அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா உத்தரவிட்டுள்ளார்.
- நடத்தை விதிகளை மீறி அரசியல் பேரணியில் கலந்து கொண்டதாக கூறி பாஜக அரசு நடவடிக்கை.
- அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார்
பர்வானி:
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
- காவல் உதவி ஆய்வாளர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது.
- உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.
நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, நாமக்கல்லை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் சேரில் அமர்ந்து செல்போனில் பேசியபடி இருந்தார். போனில் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக எழுந்து நின்றார். இதனை வீடியோ பதிவு செய்தவர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோர் வைரலானது.
காவல் உதவி ஆய்வாளர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.
- கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- கஞ்சா கடத்திய வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையை அடுத்த கத்தக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயரவிவர்மா. இவர் ஆலங்குடி வட்டத்தில் உள்ள கோவிலூரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயரவிவர்மா மற்றும் இருவர் பயணம் செய்த சொகுசுக்காரை வல்லத்திராக்கோட்டை பகுதியில் போலீசார் சோதனை யிட்டபோது அவரது காரில் 1.700 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஜெயரவிவர்மா உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வரும் சூழலில், துறை ரீதியான நடவடிக்கையாக, ஜெயரவிவர்மாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- கூடுதல் கலெக்டர் உத்தரவு
- வீடுகள் கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டமடவு ஊராட்சியில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடுதல் கலெக்டர் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ள திடீரென சென்றார். அப்போது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 வீடுகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டதும் சில வீடுகளுக்கு கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கட்டமடுவு ஊராட்சி செயலாளர் முருகன், பணி மேற்பார்வையாளர் வாசு உள்ளிட்டவர்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அனுமதி இன்றி மின் இணைப்பு கொடுத்தார்
- விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் நிலையில் மோசடி
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது வீட்டிற்கு மின்சார இணைப்பு வசதி கோரி அப்பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் பரிசீலனை நிலையில் இருந்ததால், உரிய அனுமதி வழங்கப்படமல் இருந்து வந்தது. இந்நிலையில் வடிவேலுவின் வீட்டிற்கு மின் வாரிய ஊழியர் முருகேசன் மின்சார இணைப்பு வழங்கியிருக்கிறார்.இதற்காக அவரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வின் போது, அந்த மின்சார இணைப்புக்கு உரிய அனுமதி இல்லாமல் பெறப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- கரூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்
- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
கரூர்,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கழகத்தின் கொள்ளை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கரூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சி.சுப்பிரமணியன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவராக கே.கனகராஜ் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓடினார்
- பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி.உத்தரவு
பெரம்பலூர்,
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் பிரபாகரனை நேற்று முன்தினம் சேலம் மாவட்டம், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் இடையே பிரபாகரன் தப்பி ஓடி விட்டார். பின்னர் அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக, அவரை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டாா்.
- நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.
- போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது.
மதுரை:
மதுரையைச் சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் 'வீடு ஒத்திக்கு விடப்படும்' என்று விளம்பரம் கொடுத்தார். இதனை நம்பி பலர் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்களிடம் ஸ்ரீபுகழ் இந்திரா பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு ஒத்திக்கு வீடுகள் தரப்பட வில்லை.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ புகழ் இந்திரா குத்தகை என்ற பெயரில் பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்காக ஸ்ரீபுகழ் இந்திராவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கைதி ஒருவர் செல்போனில் பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
- கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்(37). சமூக ஆர்வலர். இவர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று இருந்தார்.
இந்த மோதலில் கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த, பேரூராட்சி கவுன்சிலர் தவுலத்பீ, அவரது மகன் பாரூக் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலையாளிகளுக்கு உடந்தையாக போலீஸ் நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தகவல்களை பரிமாறியதாக திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலைய நீதிமன்ற பொறுப்பு காவலர் பிரசாந்த்(32) என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரதீப் பிறப்பித்து உள்ளார்.
இது தொடர்பாக மேலும் ஒரு போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
கொலையாளிகளுக்கு தகவலை பரிமாறியதாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
- கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள்.
மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.