search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swayambu Lingaswamy Temple"

    • 11 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன் திருவோடு கன்றுகளை நட்டார்.
    • திருவோடு மரத்தை ஆர்வத்துடன் பார்த்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவில் முன்பு 9 நிலை கொண்ட முழுவதும் கருங்கற்களால் ஆன 108 அடி உயர ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

    11 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன் திருவோடு கன்றுகளை நட்டார். இந்த வகை மரங்கள் குளிர்ச்சியான பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. அட்சய பாத்திரம் என அழைக்கப்படும். திருவோடு சிவபெருமானுக்கு உகந்தது என்பதால் சிவ ஆலயமான சுயம்பு லிங்கசுவாமி கோவிலில் வளர்த்து வருவதாக கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் கூறினார்.

    தற்போது இந்த மரம் காய்த்து குலுங்குகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்த்து குலுங்கும் திருவோடு மரத்தை ஆர்வத்துடன் பார்த்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.

    ×