என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sweeper worker suicide
நீங்கள் தேடியது "sweeper worker suicide"
ராஜபாளையத்தில் மது பழக்கத்தை கைவிட முடியாததால் விஷம் குடித்து துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 30). ‘செப்டிக் டேங்க்‘ சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார்.
இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது சித்ரா, 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இசக்கிமுத்து கடந்த சில நாட்களாக அதிகமாக மது அருந்தினார்.
இதனை மனைவி சித்ரா கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த இசக்கிமுத்து, விஷம் (குருணை மருந்து) குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவருடைய தந்தை சித்ராயா, ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

×

X