என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "T20 World Cup cricket"
- இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது.
- காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.
டி-20 உலககோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் செய்த பிரார்த்தனை தொடர்பான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பாட்னாவில் உள்ள வேதா வித்யாலயா மாணவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு, இந்திய அணி வெற்றி பெற வேண்டி அனுமன் பாடல் பாடிய காட்சிகள் உள்ளது.
அந்த வீடியோவில், மாணவர்கள் தங்கள் கைகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, குல்திப் யாதவ், பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்து கொண்டு அனுமன் மந்திரம் பாடும் காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.
- அமெரிக்காவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது.
- மனமுடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட் பிரேரி ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது.
இதனால் மனமுடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்தனர். இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர் தோனியைப் போல காட்சியளித்த ஒரு ரசிகர் இந்த ஆட்டத்தை நீளமான தாடி, வெள்ளை குர்தாவுடன் கண்டுகளித்தார். அவரது இந்த தோற்றத்தை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் தோனிதான் மாறுவேடத்தில் அமெரிக்கா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்ததாக சமூகவலைதளங்களில் வைரலாக்கினர்.
Ms Dhoni spotted in stadium!!? Pak Vs USA!!
— Error??? (@Breakin07971929) June 6, 2024
Follow Cricket live#PakvsUSA pic.twitter.com/A1Z8BYIVTU
- இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற நாடுகளில் நாங்களும் உள்ளோம்.
- டி20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இம்முறை எங்களிடம் மிக மிக நல்ல அணி உள்ளது. நாங்கள் பேசும்போது, அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஆன்டிகுவாவில் உள்ள ஒரு முகாமில் டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் பயிற்சிகளை தொடங்கவுள்ளனர். இத்தொடரில் எங்கள் அணி வீரர்கள் சீரான மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாரான கிரிக்கெட்டை விளையாடியனால் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்.
இது எளிதானது அல்ல என்று தெரியும். ஆனால் இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற நாடுகளில் நாங்களும் உள்ளோம். எனவே இம்முறை அதனை நாங்கள் 3-வது கோப்பையாக மாற்ற முயற்சிப்போம். மேலும் டி20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை. ஏனவே நாங்கள் சிறப்பாக செயப்பட்டு அதனை மாற்ற முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு ஆம்ரோஸ் கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது.
- இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜெர்சி ஹெலிகாப்டரில் தொங்க விட்டு தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் வருவது போல வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை ரோகித் சர்மா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்திய ஜெர்சியிலேயும் காவியை கொண்டு வந்து விட்டீர்களா என ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதலில் இந்திய அணியின் பயிற்சி ஜெர்சியை காவி நிறமாக மாற்றினர். பின்னர் இந்திய ஜெர்சியை மாற்றி விட்டார்கள் எனவும் எதற்கு கொஞ்சம் கொஞ்சமாக காவியாக மாற்ற வேண்டும் முழுவதுமாக மாற்ற வேண்டியது தானே எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
- கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,
புதுடெல்லி:
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.
இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.
மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-
ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.
அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
- கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது.
- டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் சேர்க்கபட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் நிரந்தரமானது என்பதற்கு சான்றாகும். ஃபார்ம் தற்காலிகமானது. மேலும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம் பெற வேண்டும். ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவரை வளர்த்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.
- குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
- இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முல்லாப்பூர்:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை போராடியது.
இறுதியில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த பாதகையில் ரோகித் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. மேலும் அதில் எங்களுக்கு ஐபிஎல் கோப்பை வேண்டாம் டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கடைசி பந்து வரை சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம்.
- நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்சுகளை தவர விட்டோம்.
கேப்டவுன்:
8-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை.
பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52ரன்), ரோட்ரிக்ஸ் (43 ரன்) ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதனால் இந்திய அணி வெற்றியை நெருங்கியது.
ஆனால் இருவரும் அவுட் ஆன பிறகு நெருக்கடி ஏற்படுத்தியது. ஹர்மன்பிரீத் கவுரின் ரன் அவுட் திருப்புமுனையாக அமைந்தது.
இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்னே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா போராடி தோற்று வெளியேறியது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறியதாவது:-
இதை விட துரதிருஷ்டவசமாக உணர முடியாது. ரோட்ரிக்ஸ் ஆட்டத்தில் மீண்டும் வேகத்தை பெற்றோம். நான் ரன்-அவுட் ஆன விதம் துரதிருஷ்டவசமானது. இங்கிருந்து தான் தோற்றோம். இதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை.
கடைசி பந்து வரை சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம். தொடக்கத்தில் முதல் 2 விக்கெட் இழந்தாலும் எங்களிடம் ஒரு நல்ல பேட்டிங் வரிசை உள்ளது என்று எங்களுக்கு தெரியும். ரோட்ரிக்சை பாராட்ட வேண்டும். அவர் எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தார். ஒட்டு மொத்தமாக நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாடினோம். எங்களின் இயல்பான ஆட்டத்தை விளையாட விரும்பினோம். அதை எங்களில் சிலர் செய்தோம்.
நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்சுகளை தவர விட்டோம். வெற்றி பெற வேண்டு மென்றால் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று நடைபெறும் 2-வது அரை இறுதியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
- சர்வதேச 2டி0 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- 20 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தமட்டில் இரு அணிகளும் 5 தடவை மோதியதில் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
கெபேஹா:
10 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) கெபேஹா நகரில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்தை (பி பிரிவு) எதிர்கொள்கிறது.
இந்திய அணி முந்தைய லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகளை துவம்சம் செய்தது. இதேபோல் இங்கிலாந்து அணி தனது முதல் 2 ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அயர்லாந்தை தோற்கடித்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கும் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான இந்த மோதல் இந்தியாவுக்கு நிச்சயம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்ய இரு அணியினரும் வரிந்துகட்டுவதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில் 19-ல் இங்கிலாந்தும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 20 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தமட்டில் இரு அணிகளும் 5 தடவை மோதியதில் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றதும் இதில் அடங்கும். இரவு 10.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் மெக் லானிங் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை (ஏ பிரிவு) சந்திக்கிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன்.
- ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார்.
மெல்போர்ன்:
இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது.
மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்துக்கு 138 ரன் இலக்காக இருந்தது.
ஷான் மசூத் 28 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பாபர் ஆசம் 28 பந்தில் 32 ரன்னும் எடுத்தனர். சாம்கரன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது.
பென் ஸ்டோக்ஸ் 49 பந்தில் 52 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் பட்லர் 17 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டும், சதாப் கான், முகமது வாசிம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து அணி 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை 2 முறை வென்ற வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) இங்கிலாந்து இணைந்தது.
இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரே லியா (2021) ஆகிய நாடுகள் தலா ஒரு முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளன.
இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வேகப்பந்து வீரர் சாம்கரன் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட் கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார். இது குறித்து சாம்கரன் கூறியதாவது:-
உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடி வருகிறோம். பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் அபாரமாக இருந்தது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் உதவியாக இருந்தது. அதில் நிறைய கற்றுக் கொண்டேன். பல போட்டிகளில் ஆடிய வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது அற்புதமான தருணம். நான் எப்போதும் கற்று வருகிறேன்.
என்னை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் விளையாட வருவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சாம்கரன் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
- இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி ரூ.7.40 கோடியை பரிசாக பெறுகிறது.
20 ஓவர் உலக கோப்பையை போட்டிகளில் மொத்த 16 நாடுகள் பெங்கு பெற்றது அந்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம் புதுடெல்லி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இங்கிலாந்து அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக ரூ.13.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி ரூ.7.40 கோடியை பரிசாக பெறுகிறது. அதே சமயம் அரை இறுதியில் தோல்வி அடைந்த மற்ற அணிகளுக்கு ரூ.4.19 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.
இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை விட கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், இந்திய அணிக்கு ரூ.4.50 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருபது ஓவர் உலக கோபை போட்டியில் பங்கு பெற்ற அணிகள் பெற்ற பரிசு தொகை விவரம் வருமாறு:-
இங்கிலாந்து ரூ.13.84 கோடி பாகிஸ்தான் ரூ.7.40 கோடி இந்தியா ரூ.4.50 கோடி நியூசிலாந்து ரூ.4.19 கோடி ஆஸ்திரேலியா ரூ.1.53 கோடி தென்னாப்பிரிக்கா ரூ.1.20 கோடி வங்காள தேசம் ரூ.1.20 கோடி இலங்கை ரூ.1.85 கோடி ஆப்கானிஸ்தான் ரூ.56.35 லட்சம் நெதர்லாந்து ரூ.1.85 கோடி ஜிம்பாப்வே ரூ.88.50 லட்சம் அயர்லாந்து ரூ.1.53 கோடி வெஸ்ட் இண்டீஸ் ரூ.64.40 லட்சம் ஸ்காட்லாந்து ரூ.64.40 லட்சம் நமீபியா ரூ.64.40 லட்சம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.64.40 லட்சம்
- குரூப் 12 சுற்றில் வாழ்வா? சாவா? போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
- அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.
டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்றது. கத்துக்குட்டி அணிகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை? என்பது கடைசி லீக் ஆட்டம் வரை பரபரப்பாகவே சென்றது.
ஒன்றிரண்டு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் சில அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. குறிப்பாக குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தால் அரையிறுதி போட்டிக்கு முன்னேற கடும் போட்டி நிலவியது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியது, ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றின் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்குள் போட்டி நிலவியது.
மேலும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் இங்கிலாந்து வெற்றி பறிக்கப்பட்டது. இது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால், ஆஸ்திரேலியா போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஒரு புள்ளி கிடைத்ததால் சற்று மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
குரூப் 1-ன் கடைசி லீக்கில் இங்கிலாந்து இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை 141 ரன்கள் சேர்த்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அலேக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் அடிக்க 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பட்லர் மீண்டும் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்தது, பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், ஹேல்ஸ 47 பந்தில் 86 ரன்களும் சேர்த்தனர்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் பட்லர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானால் 137 ரன்களே அடித்தது. பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 19 ஓவரில் இலக்கை எட்டி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
கடைசி மூன்று வாழ்வா? சாவா? ஆட்டங்களில் ஆசிய அணிகள் துவம்சம் செய்து இங்கிலாந்து கம்பீரமாக கோப்பையை வென்று சொந்த நாடு திரும்பியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்