என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேகம்"

    • நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள்.
    • ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான்.

    சபரிமலைக்கு சென்றதும் கோவிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும்.

    அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.

    மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.

    ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள்.

    அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் மீதி வரும் நெய்யை நூற்றுக்கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

    • குழந்தைப்பேறுவேண்டி கன்னிகா பூஜை நடந்தது.
    • சாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

    திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் சுமார் 1,200 ஆண்டு மிகப் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக விளங்கும் காமாட்சி அம்மன் உடனாய ஏகாம்பரேசுவரர் கோவில் உள்ளது. கோவிலில் எஸ்.பி.பட்டினம், சோழகன் பேட்டை, ரெகுநாத சமுத்திரம் மற்றும் 10 கிராம மண்டக படிதார்கள், மதுரை ஆலவாய் அருட்பணி மன்றம் சார்பில் சுவாமி, அம்மனுக்கு 108 மூலிகை பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் நடராஜர் சுவாமியுடன் திருமுறை வேத பாராயணங்கள் முழங்க வீதி உலா சென்று வந்தனர். ருத்ர ஜெப வேத பாராயணங்கள் முழங்க சிறப்பு யாக வேள்விகள் நடை பெற்றது. தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு 108 மூலிகை பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கோ பூஜையும் குழந்தை பேறு கிடைக்க வேண்டி கன்னிகா பூஜையும் நடைபெற்றது.

    அப்போது குழந்தை பேறு வேண்டுதல்களுக்காக திருமணமான பெண்கள் கன்னிப் பெண்களுக்கு பாத பூஜை செய்து மஞ்சள், குங்குமம், போன்ற பொருட்களை வழங்கி வழிபட்டனர். தொடர்ந்து சாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் சாமி-அம்பாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமி சன்னதியில் சிவனடியார்களுக்கு கிராமத்தார்களின் மரியாதை வழங்கும் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. பூஜைகளை ஆலய குருக்கள் சபரிகிரீஸ்வர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    நிகழ்ச்சியில் திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் மற்றும் சுற்றுவட்டார கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மதுரை ஆலவாயர் அருட்பணி மன்றத்தினர் சுந்தரபாண்டிய பட்டினம், சோழகன் பேட்டை, ரெகுநாத சமுத்திரம் மற்றும் 10 கிராம மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
    • சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி திருக்கோலக்காவில் ஓசை நாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரர் சாமி கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவில் தீர்த்த குளத்தில் நீராடி சூரிய பகவான் சுவாமியுடன் எழுந்தருளும் நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது ஞாயிறு சூரிய புஷ்கரணி விழாவாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி நிகழாண்டு சூரிய புஷ்கரணி விழாவையொட்டி விநாயகர், தாளபுரீஸ்வரர் சுவாமி, ஓசை நாயகி அம்மன், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர்கள் அலங்காரத்தில் மூஞ்சூர், காமதேனு, ரிஷப, மயில் வாகனங்களில் சூரிய புஸ்கரணிக்கு எழுந்தருளினர்.

    அங்கு சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
    • பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பிஸ்கட், நாட்டு வெல்லம், எண்ணைய், பூக்கள், தேங்காய் ஆகியவற்றை நேர்த்தி கடனாக வந்து செலுத்தினர். மேலும் பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கார்த்திகை மாதம் 3-வது சோமவாரத்தை முன்னிட்டு நடந்தது
    • திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிரெயில் நிலையசந்திப்பில் குகநாதீஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமையான இன்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி இன்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 6.30மணிக்கு அபிஷேகமும் 8மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் காலை 10.30 மணிக்கு மூலவரான குகநாதீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாபொடி, களபம், பால், தயிர் பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு அலங்கார தீபாராதனைநடந்தது.

    பின்னர் மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3முறை வலம் வரும்நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து பள்ளியறை நிகழ்ச்சி நடக்கிறது.பல்லக்கில் சுவாமியின் திருப்பாதமும் அம்பாளின் சக்கரமும் வைத்து கோவிலின் வெளிப் பிரகாரத்தை சுற்றி 3முறை சங்குஒலிநாதம் மற்றும் மணி ஓசை முழங்க வலம் வரசெய்கின்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம்வழங்கப் படுகி றது. இதற்கான ஏற்பா டுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்துவருகின்றனர்.

    • புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
    • விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்க ப்பட்டன.

    பூதலூர்:

    பூதலூர் அருகே கோவில்பத்து சிவன் கோவில் தெருவில் உள்ள மழை தரும் வேம்பரசு விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சிறப்பாக நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    இரண்டு கால யாகசாலை பூஜைகளை திருப்பூர் திருநாமலிங்கேஸ்வர சிவம் தலைமையில் ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் பட்டாச்சாரியார், சந்தோஷ் சிவம் ஆகியோர் நிகழ்த்தினர்.

    மண்டபார்ச்சனை, வேதிகா சார்ச்சனை, பூர்ணாகுதி, உபசார பூஜைகள், வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாடி சந்தானம், ஸ்பரிசாகுதி, த்ரவ்யாகுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.

    பின்னர், கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் ஐயப்ப குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பூதலூர் கோவில்பத்து கிராம மக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழா நடந்த சில‌ நொடிகளில் பலத்த மழை பெய்தது பக்தர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    • முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.
    • அன்னதானம் நடைபெறுகிறது.

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வருகிற 12-ந்தேதி கார்த்திகை சோமவாரத்தன்று பாலாபிஷேக விழா நடைபெறுகிறது.

    இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையைச் சுற்றி கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பகல் 12 மணியளவில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.

    அதை தொடர்ந்து உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கழுகுமலை ஈஸ்ட் இந்தியா மேச் கோபாலகிருஷ்ணன் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் வள்ளிநாயகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • பவுர்ணமி தினத்தன்று சிறப்பாக வேள்வியும், அபிஷேகமும் நடைபெற்றது.
    • மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேய சித்தர் ஜீவப்பீடத்தில் மாதம் தோறும் பௌர்ணமி யாகமானது தமிழ் முறைப்படி சித்தர் பீடத்தை நிர்வகித்து வரும் நாகூர் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    இந்த பௌர்ணமி தினத்தன்று மிகச் சிறப்பாக வேள்வியும், அபிஷேக ஆராதனை களும் நடைபெற்றது.நாகூர், காரைக்கால் திருத்துறைப்பூண்டியை சார்ந்த பக்தர்கள் இந்த வேள்வியில் கலந்து கொண்டார்கள் அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது

    இந்த வேள்வியினை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், டாக்டர் அனிதா, குமார், பழனிவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

    இந்த பூஜையினை கும்பகோணத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் காங்கேய சித்தர் பீடத்தின் அர்ச்சகர் வெங்கட்ராமன் ஆகியோர் பூஜையை செய்தார்கள். வருகின்ற மார்கழி மாதம் முழுவதும் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் அதிகாலையில் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கின்றது.

    • செந்தூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
    • மூலவர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, சிறப்புப்பூஜைகள் நடந்தது.

    தமிழ் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து செந்தூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, சிறப்புப்பூஜைகள் நடந்தது.

    அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வாஞ்சிநாதர் மங்காளம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்மராஜா மற்றும் வாஞ்சிநாதரை தரிசித்தனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதர் சமேத மங்களாம்பிகை திருக்கோவிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு வள்ளி தேவசேனா முருகப்பெருமான் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் தீபாரணை நடைபெற்ற பின்னர் ஆலயத்தின் வெளியே நான்கு வீதிகளில் நடன வாகனத்தில் எழுந்துருள் செய்யப்பட்டு ஆலயத்தில் உள்ள குப்த கங்கையில் அசுர தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாலாளையம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் தற்போது புனரமைக்க வருகிறது.

    இந்த நிலையில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தினத்தை முன்னிட்டு வாஞ்சிநாதர் மங்காளம்பிகை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அசுர தேவர் சுவாமி குப்த கந்தையில் வைத்து அபிஷேகம் செய்தனர்.

    ஆனால் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்ம ராஜா மற்றும் வாஞ்சிநாதர் சாமியை தரிசித்து செல்கின்றனர். மேலும் காவல் துறை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
    • சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு முன் மண்டபத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது.
    • கோபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வள்ளலார் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் கடைசியாக 2004-ஆம் ஆண்டு 26-வது குரு மகா சன்னிதானத்தின் அருளாட்சி காலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று பாலாலய விழா நடைபெற்றது.

    தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அடிக்கல் எடுத்து வைத்து திருப்பணிகளை தொடக்கி வைத்தார்.

    முன்னதாக, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. பின்னர், கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு மகா பூர்ணாகுதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோபூஜை செய்து வழிபாடு நடத்தினர். பூஜைகளை கோயில் அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார் செய்து வைத்தார்.

    இதில் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத கட்டளை விசாரனை தம்பிரான் சுவாமிகள் வள்ளலார் கோயில் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், செந்தில்குமார், ரங்கராஜன், வாஞ்சிநாதன், தர்மபுரம்‌ கல்லூரி செயலர் செல்வநாயகம், முதல்வர் சுவாமிநாதன், திருக்கோயில் சிப்பந்திகள் மற்றும் நகர முகவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×