search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு"

    பரமத்திவேலூர் அருகே சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு அருகே வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தண்ணீர்பந்தல் மேட்டிலிருந்து பரமத்தி நோக்கி அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி வாகன சோதனை செய்ய முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அதில் வந்த மற்றொருவரும் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சாவியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

    இதனையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 40 மணல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக அனுமதியின்றி காவிரி ஆற்றில் இருந்து கடத்தி வந்த மணல், சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

    பின்னர் வழக்குப்பதிவு செய்து, மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய  2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    குமாரபாளையத்தில் கடைகளில் சரக்கு இறக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள கடைகளுக்கு தினமும் சரக்குகள் கொண்டு வரும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

    இதனால் வாகன போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. சில சமயங்களில் கடைகளில் பொருட்கள் இறக்கும் வரை பல வாகனங்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. 

    இது போன்ற வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வந்து சரக்குகள் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×