என் மலர்
நீங்கள் தேடியது "மனைவி"
- இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
- மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள அங்கித் விரும்பியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் மனைவியின் தங்கையை திருமணம் செய்வதற்காக நண்பனின் உதவியுடன் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித் குமார் என்பவர் கிரண் (30) என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
மார்ச் 8 ஆம் தேதி அங்கித் தனது மனைவியை தனது மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் பெட்ரோல் போடும் நேரத்தில் சாலையோரம் இருந்த கிரண் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக கணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், காரின் உரிமையாளர் அங்கித்தின் நண்பர் சச்சின் என கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, விபத்தில் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், அங்கித் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. ஆகவே தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், இதற்கு மனைவியின் தங்கை மறுப்பு தெரிவித்ததால் மனைவியை கார் ஏற்றி கொன்றேன் என்று அங்கித் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
- லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
- திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம்
கர்நாடகாவில் மாமியாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான லோக்நாத் சிங் பெங்களூரு நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள சிக்கபனாவரா பகுதியில் இருந்த ஒரு காரில் லோக்நாத் சிங்கின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த கொலை தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியார் ஆகியோர் அவரது உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கிய பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்தை மீறிய உறவு, சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் லோக்நாத் சிங் ஈடுபட்டு வந்ததால் அவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
- பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது
உத்தரபிரதேசத்தில் திருமணமான 15 நாட்களில் மனைவி கூலிப்படையினரை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரகதி யாதவ் மற்றும் அனுராக் யாதவ் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலை, அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மார்ச் 19 அன்று, திலீப் வயலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீப் மார்ச் 20 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திலீப்பின் சகோதரர் சஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் திலீப்பின் மனைவி பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது
இருவரும் திலீப்பைக் கொலை செய்ய ராமாஜி சவுத்ரி என்ற காண்டராக்ட் கொலையாளியை நியமித்து, அந்த வேலையைச் செய்ய அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திலீப்பை கொலை செய்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், நான்கு தோட்டாக்கள், ஒரு பைக், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தக் குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார்.
- ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவி எரித்துள்ளனர்.
ராஜஸ்தானின் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவியும் கள்ளகாதலனும் எரித்துள்ளனர்.
மார்ச் 16 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- விவாகரத்து வழங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார்.
- திருமணத்திற்குப் பிறகு மனைவி தனது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் உரையாடலில் ஈடுபட கூடாது.
திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது 'எதிர்பாலின' நண்பர்களுடன் 'ஆபாசமான' முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்தில் கவனத்தில் கொண்டு பலவேறு கருத்துக்களை தெரிவித்தது.
அதாவது, "திருமணத்திற்குப் பிறகு கணவரோ, மனைவியோ தங்களது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட கூடாது. தனது மனைவி மொபைல் மூலம் இத்தகைய மோசமாக பேசுவதை எந்த கணவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல் மற்றும் பிற வழிகளில் உரையாடலாம். ஆனால் அந்த உரையாடல் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
கணவரின் எதிர்ப்பு தெரிவித்தும் மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து மோசமாக உரையாடுவது நிச்சயமாக கணவருக்கு மனரீதியிலான கொடுமையை ஏற்படுத்தும்" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இறுதியில், கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- கமல் கிஷோர் மிஸ்ரா ‘தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.
- போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.
மும்பை:
மும்பை அந்தேரி மேற்கு நியூ லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகன நிறுத்தத்தில் கடந்த 19-ந்தேதி இந்தி சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்தார். காரில் அவருடன் மாடல் அழகி ஒருவரும் இருந்துள்ளார். மாடல் அழகி தயாரிப்பாளரின் கள்ளக்காதலி என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தயாரிப்பாளரை தேடி அவரது மனைவியும், போஜ்புரி நடிகையுமான யாஸ்மின் அங்கு சென்றார். தனது கணவர் வேறு பெண்ணுடன் காரில் இருந்ததை பார்த்து அவர் ஆத்திரமடைந்தார். மேலும் கணவரை தட்டிக்கேட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் தயாரிப்பாளர் மாடல் அழகியுடன் காரில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது மனைவி காரை தடுத்து நிறுத்த முயன்றார். இதில் திடீரென அவர் தவறி விழுந்தார். எனினும் தயாரிப்பாளர் ஈவு இரக்கமின்றி அவா் மீது காரை ஏற்றி விட்டு அங்கு இருந்து தப்பிச்சென்றார்.
கார் ஏறியதில் யாஸ்மினின் கால், கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. வாகன நிறுத்த காவலர்கள் தயாரிப்பாளர் மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே யாஸ்மின் மீது காரை ஏற்றி செல்லும் காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தநிலையில் தயாரிப்பாளரின் மனைவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர். கமல் கிஷோர் மிஸ்ரா இந்தியில் வெளியான 'தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.
- மனைவியை பிரிந்து வாழ்ந்த கொத்தனார் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தார்.
- இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தோப்புபட்டி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 42), கொத்தனார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி கணவரை பிரிந்து மாசிலாபுரம் என்ற இடத்தில் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே கோவையில் கட்டிடவேலைக்கு சென்று வந்த பாண்டியராஜ், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவர் கோவைக்கு செல்லாமல் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் மது குடித்து வந்தார். இதனை கண்ட அவரது தந்தை சண்முகவேல் கண்டித்தார்.
நேற்று வீடு திரும்பாத பாண்டியராஜ், ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள கொண்டனேரி கண்மாய் அருகில் உள்ள பெரியார் சிலை பின்புறம் மது குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டத்தை அடுத்த முளங்குழி, முள்ளஞ்சேரியை சேர்ந்தவர் வினு (வயது 35). நகை கடை நடத்தி வருகிறார்.
வினுவின் மனைவி அனுஷா (30). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றார். அப்போது அங்கே மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென அனுஷா அருகே வந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் அனுஷா கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலி செயினை பறித்தார்.
அனுஷா திருடன்...திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி யோடி தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஷாவிடம் நகைபறித்த வாலிபரை தேடி வருகிறார்கள்.மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பண்டார விளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதால் ஜஸ்டின்ராஜ் துக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் இறந்த 4 நாட்களில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த 11-ந் தேதி வேல்முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவரின் இந்த முடிவால் செல்வி மிகவும் வேதனையடைந்ததாக தெரிகிறது. சோகத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வாரத்தில் கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு தற்கொலை
டி.கல்லுப்பட்டி ராம்முன்னி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). மதுப்பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த பன்னீர்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேரையூர் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த தங்கராஜூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரது மகன் மாசாணம், தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அழைப்பை ஏற்கவில்லை. உடனே வீட்டுக்கு சென்று பார்த்த போது தங்கராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.
- இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம், நவ.23-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்து (73). அவரது மனைவி பானுமதி (66). இவர்களது மகள் ஜெயகீர்த்தி (36).
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயகீர்த்திக்குக்கும், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (35) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணமான 3 மாத த்தில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஜெயகீர்த்தி சத்தியமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். உதயகுமார் எடப்பாடியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இரு வீட்டாரும் சமாதானம் பேசி கணவன்-மனைவியை சேர்த்து வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் கணவன்-மனைவி இருவரும் சமரசம் ஆகவில்லை.
இந்நிலையில் இன்று காலை உதயகுமார் சத்தியமங்கலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு உருட்டுக்கட்டையுடன் வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.எதிர்பாராத இந்த தாக்கு தலால் 3 பேரும் அலறினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உதயகுமார் உருட்டு கட்டையால் தாக்கியதில் முத்து, பானுமதி, ஜெயகிரீத்தி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமனார், மாமியார், மனைவியை மருமகன் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.
மதுரை :
மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.
எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.