என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்"

    • சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார்.

    அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இதையடுத்து 17 வயது சிறுமி, அந்த வாலிபரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் பரமக்குடி போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது.

    அதன்பிறகும், சந்தோசினால் பிரச்சனை வந்ததால் சிறுமியை அவரது தாயார் எட்டையபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் வந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்ததாக கூறினார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
    • போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மூலக்குளம்-வில்லியனூர் மெயின்ரோட் டைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 64). இவரது கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டதால், உறவுக்கார பெண் ஒருவரின் துணையுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2016 டிசம்பர் 26-ந் தேதி சாந்தாவுடன் தங்கியிருந்த உறவுக்கார பெண் வெளியே சென்ற நிலையில் மறுநாள் காலை சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி எழில் என்ற எழிலரசன் (30) போலீசுக்கு புகார் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் எழிலரசன் நகைக்காக மூதாட்டி சாந்தாவை கொலை செய்து விட்டு போலீசாரிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.

    போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரங்கநாதன் ஆஜரானார்.

    • தன்னை கடித்த பாம்புடன் விவேக் போடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
    • சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததால் விவேக்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிகாபுரத்தைச் சேர்ந்தவர் விவேக் (வயது 25). இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். இன்று தேவாரம் அருகே உள்ள திருக்கோட்டை பகுதியில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

    அங்குள்ள சிமெண்ட் கற்களை அகற்றிக்கொண்டு இருந்தபோது உள்ளே பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு சீறிப்பாய்ந்து அவரது வலது கையில் கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த விவேக்கை அருகில் இருந்தவர்கள் ஆறுதல்படுத்தினர்.

    உடனடியாக அவரை கடித்த பாம்பையும் உயிருடன் பிடித்தனர். தன்னை கடித்த பாம்புடன் விவேக் போடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். இதை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததால் விவேக்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அவர் தெரிவிக்கையில், தன்னை கடித்த பாம்பு எந்த வகை என டாக்டரிடம் தெரிவிக்கவே அதை கையில் பிடித்து வந்தேன். வலியால் நான் துடித்தபோது பாம்பை அருகில் இருந்தவர்கள் உயிருடன் பிடித்தனர் என்றார். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • அந்த வாலிபரை தள்ளி விட்டு விட்டு ரெயில் பெட்டியை விட்டு கீழே இறங்கி சத்தம் போட்டார்.
    • பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு காலை, மதியம், மாலை நேரங்களில் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில்களில் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்களும், கேரளாவில் பணிபுரியும் ஊழியர்களும், பொதுமக்கள் ஏராளமா னோர் பயணம் செய்து வருகிறார்கள். நேற்று மாலையில் பாசஞ்சர் ரெயில் திருவனந்தபுரத் திற்கு செல்வதற்காக பிளாட்பாரம் 1-ஏ-யில் தயாராக நின்றது.

    மகளிர் என ஒதுக்கப் பட்ட பெட்டியில் பெண் வங்கி மேலாளர் ஒருவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அமர்ந்தி ருந்தார். அப்போது ரெயில் பெட்டிக்குள் ஏறிய வாலிபர் ஒருவர் திடீரென அந்த பெண் மேலாளரிடம் சில்மிஷத்தில் ஈடு பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மேலாளர் கூச்ச லிட்டார்.

    அந்த வாலிபரை தள்ளி விட்டு விட்டு ரெயில் பெட்டியை விட்டு கீழே இறங்கி சத்தம் போட்டார். உடனே அங்கிருந்த பொது மக்கள் திரண்டனர்.அதற்குள் அந்த வாலிபர் ரெயில் பெட்டியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அனைத்து பிளாட் பாரங்களிலும் கூடுதல் போலீசாரை நியமனம் செய்து ரோந்து பணியை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பவானி ஆற்றின் கரையோரம் அருகே இருந்த வேப்பமரத்தில் சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தது.
    • இதுகுறித்து கவுந்தபாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்தலையூர் மகிழீஸ்வரன் கோவில் பின்புறம் பவானி ஆற்றின் கரையோரம் அருகே இருந்த வேப்பமரத்தில் சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தது.

    இதுகுறித்து பெருந்தலையூர் கிராம நிர்வாக அலுவலர் பஞ்சநாதன் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூக்கு மாட்டி இறந்த கிடந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த சிக்கண்ணன் (30) என தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை .

    இதுகுறித்து கவுந்தபாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்தார்.
    • தற்கொலை செய்து கொண்ட வாலிபர் அலெக்சாண்டருக்கு திருமணமாகி மனைவி லீலா உள்ளார்.

    மதுரை

    மதுரை மாகாளிப்பட்டி, கோதண்டராம் மில் ரோட்டை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அலெக்சாண்டருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அவர் திண்டுக்கல் மெயின் ரோடு, விளாங்குடி பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட வாலிபர் அலெக்சாண்டருக்கு திருமணமாகி மனைவி லீலா உள்ளார். 

    • தேவகோட்டையில் வாகனம் மோதுவது போல் வந்ததை கண்டித்த வாலிபரை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கினர்.
    • தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் வீரசங்கிலி மடத்தை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மகன் முகம்மது ஆசிப்(23). கூலி தொழிலாளி. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முகமதியர் பட்டணம் பகுதியில் உள்ள தனது உறவினர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் முகமதுஆசிப் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது நகராட்சி சமுதாய கூடம் அருகில் வந்தபோது எதிரே இருசக்கர வாக னத்தில் வந்த ஒருநபர் மோதுவது போல் வந்துள்ளார்.

    இதனை முகமதுஆசிப் கண்டித்தார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் செல்போன் மூலம் சிலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முகமது ஆசிப்பை தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை பொது மக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    10-க்கும் மேற்பட்ட நபர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து 5-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார்.

    • வருமானம் இல்லாததால் மனவிரக்தி
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட கீழ்பம்மம் கொற்ற விளையை சேர்ந்தவர் ரெஜின் (வயது 29) திருமணம் ஆகவில்லை. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.

    அங்கு வேலை சரியாக அமையாததால் சொந்த ஊரான மார்த்தாண்டத்திற்கு வந்து வெல்டிங் தொழில் செய்து வந்தார். அதிலும் போதிய வருமானம் இல்லாததால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து சம்பவத்தன்று இரவு வீட்டில் உணவருந்தி விட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.காலையில் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

    இதனையடுத்து அவரது தந்தை மாடியில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • து போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இரவு பகலாக தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பாரதி (வயது 34).ஜீவாநகர் உமாபாரத் லே அவுட் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.மது போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இரவு பகலாக தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இவருடைய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாரதி அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.அந்த அறை முழுவதும் மெகா சைஸ் குப்பை தொட்டி போல குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தஞ்சை புதிய நீதிமன்றம் அருகே மர்மமான முறையில் சகாயமேரி இறந்து கிடந்தார்.
    • சகாயமேரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கற்பழித்து சகாயமேரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாகோட்டையை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகள் சகாயமேரி (வயது 61 ). திருமணமாகவில்லை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அதன் பின் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சகாயத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சை புதிய நீதிமன்றம் அருகே மர்மமான முறையில் சகாயமேரி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்வையிட்டனர். அதில் சகாயமேரியின் தலையில் ரத்த காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சகாயமேரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கற்பழித்து சகாயமேரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சந்தேகம் மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.அதில் தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி தென்கரையை சேர்ந்த சாஸ்திரி (30) என்பவர் சம்பவத்தன்று புதிய நீதிமன்றம் அருகே நின்று கொண்டிருந்த சகாய மேரியை கற்பழித்து கீழே தள்ளி விட்டுள்ளார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சகாயமேரி சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சாஸ்திரியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‌

    • வாலிபர்கள் கோவை - சிவகாசி அரசு பஸ்ஸில் ஏறி வந்து கொண்டிருந்தார்.
    • வாலிபர்க்குள் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளிப்புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி(வயது 27) .இவர் நேற்று கோவை சென்று விட்டு பல்லடம் வருவதற்காக கோவை - சிவகாசி அரசு பஸ்ஸில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த இரண்டு வாலிபர்கள், இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அருகே வரும்போது இவர்களுக்குள் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் அந்த இரண்டு வாலிபர்களும் கார்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட, பஸ்சிற்குள் அவர் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ் ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு பஸ்சை நிறுத்தினார். காயம் பட்ட கார்த்தியை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் மதுரையைச் சேர்ந்த ராஜேஷ்(19) , சேது (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • 50 கிராம் கஞ்சா பறிமுதல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தலைமை யில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இதற்காக சந்தே கிக்கப்படும் பகுதிகளில் போலீசார் ேராந்து சுற்றி வருகிறார்கள்.

    வேம்பனூர் அரசு உயர் நிலைப்பள்ளி அருகில் கஞ்சாவுடன் இரண்டு வாலி பர்கள் நிற்பதாக வெள்ளிச் சந்தை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் வெள்ளிச்சந்தை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்ற போது சூரப்பள்ளம் அஜித் என்ற அஜித்குமார் மற்றும் தோப்புகளை சுதன் (வயது 23) ஆகிய இரண்டு பேரும் நின்று கொண்டிருந்தனர்.போலீசாரை கண்டவுடன் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை செய்தபோது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக நிற்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை எஸ்.ஐ. ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    ×