என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 211688
நீங்கள் தேடியது "பாடம்"
நாளை மறுநாள் பிளஸ்-2 தொழில் பாடம் தேர்வு (28-ந்தேதி) நடக்கிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் கடந்த (5-ந்தேதி) வியாழக்கிழமை பிளஸ்-2 பொதுத்–தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும் நடைபெற்று வருகின்றன.
கடந்த 23-ந்தேதி (திங்கட்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக நிர்வாகம் மற்றும் செயலக பதவி உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றன.
இதனால் 12-ம் வகுப்பு ெதாழில் பாட பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் அன்றைய தேதியில் தேர்வு முடிவடைந்து விட்டது . இதனால் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 23-ந்தேதி அன்று மகிழ்ச்சியுடன் ஒருவருக்ெகாருவர் வாழ்த்து ெதரிவித்தபடி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (28-ந்தேதி) பிளஸ்-2 தொழில் பாட பிரிவுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுடன் பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவடைகிறது.
சேலத்தில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெறும்.
சேலம்:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 182 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.
அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர்.
சமூக அறிவியல் தேர்வு இதனைதொடர்ந்து நாளை (30-ந்தேதி) சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது. மாணவ- மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தை படிக்கும் விதமாக கடந்த 27-ந்தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள சமூக அறிவியல் பாடத்துடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகின்றன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X