search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள்"

    • தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.
    • ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது

    உடுமலை:

    ஊஞ்சல் என்பது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்கு நாட்டார் இதனை கூலி என்றும் சூரிய என்றும் அழைக்கின்றனர். சிறுவர்கள் விழுதுகளை பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடுவர் .மரக்கலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுமியரும் ஊஞ்சலாடு வார்கள். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.இந்தநிலையில் ஆடிப்பெருக்கையொட்டி ஜல்லிப்பட்டி, தளி உள்ளிட்ட இடங்களில் சிறுவர் சிறுமிகள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்.

    ஊஞ்சல் கொண்டாட்டம் குறித்து இப்பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கூறியதாவது:- ஆடி 18ஐ நோன்பு என்று தான் அழைப்போம். ஒரு நாள் முன்பே ஜல்லிப்பட்டி கிராமத்திற்குசென்று விடுவோம். எப்பொழுது விடியும் என காத்திருப்போம். எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்பு குழந்தைகள் உடன் கதைகள் பேசி தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணி ஆகிவிடும். காலையில் பொம்மையன் கோவில் முன்பு பெரிய மரங்கள் நட்டு பெரிய அகலமான மரப்பலகையை உட்காருவதற்கான வசதியாக அமைப்பார்கள். அதற்கு சந்தனம் குங்குமம் மாவிலை கட்டி மஞ்சள் துணியில் நவதானியங்கள் உள்ளே வைத்து அந்த ஊஞ்சலுக்கு கோவில் பூஜை செய்வர்.

    குழந்தைகளுடன் முதல்முறையாக ஊஞ்சல் ஆடும் போது ரோல் கோஸ்டர் ஜெயின்ட் வீல் எல்லாம் தோற்றுவிடும். பெரியவர்கள் தோட்டத்து வேலைக்கு சென்று வந்த பின்பு இரவில் ஊஞ்சலாடி பாட்டுப்பாடி தங்களின் களைப்பை போக்கிக் கொள்வார்கள். முப்பது வருடங்களுக்கு முன்பாக கூட ஆடி 18 தினத்திற்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரிஆடிய துண்டு. ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம் .வீட்டில் இருக்கும் உபகரணங்களிலேயே அதிக மகிழ்ச்சி தரக்கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாக அது குறைந்து காணாமல் போய்விட்டது .இந்த ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

    இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களின் வாழ்க்கைச் சக்கரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். நம் தலைமுறைக்கு குழந்தைக ளுக்கு இதை மறக்காமல் கொண்டு போக வேண்டியது நமது கடமை.

    னஇதை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

    • மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி நீண்ட காலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலை அடுத்த ஆனைமலை காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகு தியில் சின்னாற்றின் கரையில் பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது.

    இங்கு மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி நீண்ட காலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோவிலில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் காலங்காலமாக கோவிலில் பூஜைகளை செய்து வருகின்றனர். கோவிலுக்கு உடுமலை பகுதியில் மட்டுமின்றி வெளி மாவட்ட ங்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையை யொட்டி பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். பின்னர் அவர்கள் கோடந்தூர் சுற்றுச்சூழல்குழு மற்றும் வனத்துறை இணைந்து செயல்படுத்தி வரும் வாகனங்களில் ஏறிச்சென்று கோவிலை அடைந்தனர்.அதைத் தொடர்ந்து ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்து மாரியம்மனை சாமி தரிசனம் செய்தனர்.மேலும் மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த நெல்லிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், சாம்பிராணி, வடுமாங்காய், எலுமிச்சை மற்றும் தேன், தைலம் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இயற்கையில் விளைந்த பொருட்கள் என்பதால் அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.

    கோடை காலத்தில் வருமானத்தை இழந்து தவித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு இந்த பொருட்கள் கைகொடுத்து உதவுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் சாகுபடி பணிகளுக்கு மழைவாழ் மக்கள் விளை நிலங்களை தயார் செய்து வருகின்றனர்.

    • ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர்.
    • ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி ஊரில் புகுந்துள்ள பேயை விரட்ட முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர். ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பின் கிராம தெய்வங்களுடன் கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர்.

    பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன் தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

    • கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன.
    • வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றனா்.

    அவிநாசி :

    அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் புதுக்காலனி பகுதியில் உள்ள கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக முயல் வேட்டைக்கு செல்வதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல் 50க்கும் மேற்பட்டவா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்டனா்.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த வன அலுவலா் ம.சுரேஷ் கிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்ட மக்களை தடுத்து நிறுத்தினா். மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி முயல்களை வேட்டையாடுவது குற்றம் என்றும், வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றனா். 

    வெள்ளமலையில் சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் அம்பலக்காரன்பட்டி அருகே உள்ளது வெள்ள மலை. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிட்கோஅமைப்பதற்காக அரசு அதிகாரிகள் இடத்தை பார்வையிட வந்த போது அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புதெரிவித்தனர்.

    இதுகுறித்து மேலூர் தாலுகா அலுவலகத்தில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 66 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் இன்று காலை சென்னையிலிருந்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், செயற்பொறியாளர் இணை இயக்குனர் மற்றும் உயரதிகாரிகள் அவ்விடத்தில் சமத்துவபுரம் அமைப்பதற்காக இடத்தை பார்வையிட வந்தனர்.
     
    அப்போது அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இப்பகுதியில் அதிகளவு மான்கள் வாழ்கின்றது. மற்றும் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. எனவே இங்கு சமத்துவ புரம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதையடுத்து அதிகாரிகள் உங்கள் கருத்தை அரசுக்கு தெரிவிப்பதாக கூறி அங்கி ருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அவருடன் மேலூர் வட்டார வளர்ச்சி அலு வலர் பாலச்சந்தர், அம்பலக்காரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி ராமையா மற்றும் யூனியன் அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.
    • 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது, 15 முதல் 18 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டோா் என மொத்தம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 2, 681 மையங்களில் 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 18, 831 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×