என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    • 28 ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது
    • ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தகவல்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சாதாரண ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், 28 ஊராட்சிகளுக்கான ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்தனர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் பதிலளித்தனர்.

    கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான பரணி கார்த்திகேயன் கூறுகையில்,

    மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 28 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம், கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட முதல்வர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். பெருமருதூர் வெள்ளாற்றுப் படுகையிலிருந்து மும்பாலை வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 28 ஊராட்சிக்கும் தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்தார்.

    மேலும் இப்பகுதியில் போதிய பருவமழை இல்லாததால் விவசாயம் பொய்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கெடுத்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று ஆவுடையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் மக்கள் குறைகள் விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டது.

    • திடீரென பணிகளை செய்து வந்த சப் கான்ட்ராக்டர் கலவை எந்திரம் மற்றும் காங்கிரிட் சட்டர்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
    • தண்ணீர் தொட்டி பணி முடிந்து குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பணி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் 7,8,10,11 ஆகிய வார்டுகளின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் விதமாக பவுண்டு தொழு சந்திப்பில் உள்ள ஊராட்சி இடத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள வாட்டர் டேங்க் கட்டும் பணி துரிதமாக நடந்து வந்தது. தண்ணீர் தொட்டியின் தூண் 15 அடி உயரத்திற்குகட்டப்பட்ட நிலையில் திடீரென இப்பணியை செய்து வந்த சப் கான்ட்ராக்டர் கலவை எந்திரம் மற்றும் காங்கிரிட் சட்டர்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

    விரைவில் தண்ணீர் தொட்டி பணி முடிந்து குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பணி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீண்டும் வாட்டர் டேங்க் பணியை தொடங்க வேண்டுமென இவ் வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தில் நாளை 13-ந் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பில்லூா், அத்திக்கடவு, வெள்ளியங்காடு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளதால் ஒரு நாள் மட்டும் பல்லடம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொண்டை வலி, தடிப்புகள், வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் இருக்கும்.
    • குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். கைகளில் அழுக்கு படிந்து அதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

    திருப்பூர்:

    டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து திருப்பூர்அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-டைபாய்டு காய்ச்சல் பொதுவாக மழைக்காலத்தில் பரவுகிறது. மாசுபட்ட நீர் முக்கிய காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம்.டைபாய்டு காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சோர்வு, அதிக காய்ச்சல், பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், மயக்கம், தொண்டை வலி, தடிப்புகள், வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் இருக்கும்.இரு நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். கவனிக்காமல் விட்டால் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படலாம். குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். கைகளில் அழுக்கு படிந்து அதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றனர். 

    • கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்டபணிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 21 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிதண்ணீர் பிரச்சனை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் லாரியில் விற்பனை செய்யப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தீவிர முயற்சியால், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா நிருபர் களிடம் கூறியதாவது:-

    கீழக்கரை நகராட்சியில் நாள்தோறும் 53.20 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப் படுகிற சூழ்நிலையில் தற்போது 8 லட்சம் லிட்டர் அளவுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். தமிழக மக்களின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதில் தன்னிகரற்று விளங்கும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூபாய் 2883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தி னை செயல்படுத்த ஆணை யிட்டுள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலா ளரும், சட்டமன்ற உறுப்பினரு மான காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் மேற்கொண்ட தீவிர முயற்சியால் கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்ட பணிக்காக 211. 32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் 12,10,5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்படு கிறது.

    கீழக்கரை நகரில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதலாக குடிநீர் பைப்லைன் வசதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்பட தொடங்கினால் மக்களுக்கு தேவையான அளவை விட கூடுதலாக குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது, இதற்கான திட்ட மதிப்பீடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கீழக்கரையில் குடிநீர் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெ க்டர் முத்துலட்சுமி தலைமையில் ஆய்வு நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நகராட்சி பொறியாளர் அருள், நகர்மன்ற கவுன்சிலர்கள் ஷேக் உசேன், நசுருதீன், எஸ்.கே.வி.சுகைபு தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆணையர் ஆனந்த்மோகன் ஆய்வு
    • பொதுமக்கள் 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக குடிநீர் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்பொழுது ஒரு சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்ப டுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். வடிவீஸ்வரம் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கூறினார்கள்.தொடர்ந்து பொதுமக்களும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் வடிவீஸ்வரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று எத்த னை நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார்.

    அப்போது பொதுமக்கள் 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவ தாக தெரிவித்தனர். உடனடியாக பொதுமக்க ளுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய ஆனந்த்மோகன் உத்தர விட்டார்.

    இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    • பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நாவினிப்பட்டியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினையால் அந்தப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    இதை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    இதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயன்பாண்டியன், ஏட்டுகள் முருகேசன், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடம் ஆய்வு.
    • பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி குறித்து கேட்டறிந்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவின் நான்கு புறமுள்ள நடைப்பாதைகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடத்தையும், மேலும், தர்காவிற்கு வரும் பக்தர்களின் பயன்பா ட்டிற்காக உள்ள கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்தும், பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி குறித்தும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாரிமுத்து எம்.எல்.ஏ., மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட சிறுபான்மையினர் அலுவலர் பாலசந்தர், தாசில்தார் மலர்கொடி மற்றும் தர்கா டிரஸ்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இதில் தர்கா கமிட்டி சார்பில் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், எஸ்.பி.டி. ஐ. தலைவர் பகுருதீன் ஆகியோர் அமைச்சரிடம் மனு கொடுத்தனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

    • மருதூர் கடைத்தெருவில் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, செல்லக்கோன் வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.
    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்திலிருந்து அண்ணாட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக வேதாரண்யத்திற்கு கூட்டு குடிநீர் திட்ட குழாய் சென்றடைகிறது.

    இந்நிலையில், மருதூர் கடைத்தெருவில் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள செல்லக்கோன் வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.

    இதேபோல், பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.

    கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் போர்வெல் அமைக்க ப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி மேலத்தெரு மற்றும் கீழத்தெரு பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மூலம் போர்வெல் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அங்கிருந்து குடிநீர் மேலத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போ ர்வெல் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு போதிய மின் வசதி இல்லாத காரணத்தால் போர்வெல் பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    இதனால் ஊராட்சி பகுதிகளில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இருப்பினும் கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்க எதுவாக மாவட்ட ஊராட்சி சார்பாக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் போர்வெல் அமைக்க ப்பட்டு உள்ளது.

    இந்த இடத்தில் போதிய மின் வசதி இல்லாததால் மின் இணைப்பு வழங்கப்படாமல் போர்வெல் இயங்காமல் உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேல தெருவில் இருந்து மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சடையங்குப்பம் பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
    • கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது கனரக வாகனங்களால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்ததாக தெரிகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தது. மேலும் மாண்டஸ் புயல் காரணமாகவும் நல்ல மழை கொட்டியது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் குடிநீர் வழங்கும் ஏரி, குளங்களும் முழுவதும் நிரம்பின.

    இந்நிலையில் திருவொற்றியூர் அருகே கடந்த 15 நாட்களாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். மணலி மண்டலம் 16-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் இந்த நிலை நீடித்து வருகிறது.

    திருவொற்றியூர் அருகே சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தடி நீரை அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் தெருக்குழாய்களில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் கடைகளில் கூடுதல் விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தெருக்குழாய்களில் தண்ணீருக்காக காலிகுடங்கள் குவிந்து கிடக்கின்றன. அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது கனரக வாகனங்களால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சடையங்குப்பம் பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது குறித்து சடையங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் கூறியதாவது:- எங்கள் பகுதியில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் தண்ணீர் தட்டுப்பாடு வரும். ஆனால் பருவமழை முடிந்து ஒரு மாதத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. டேங்கர் லாரி மூலம் வினியோகிக்கும் தண்ணீர் சுகாதாரமாக இல்லை. அதில் பாசி மற்றும் சிறு மீன்கள், பூச்சிகள் வருகிறது. இதனால் அதை குடிக்க பயன்படுத்த முடியவில்லை. கேன் வாட்டர் வாங்கி குடிக்க இங்குள்ள மக்களுக்கு போதிய வசதி இல்லை. உடைந்த குழாய்களை கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக குடிநீர் குழாய்களை சரி செய்து சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    நைனியப்பன் (கிராம செயலாளர்):

    எங்கள் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது, மிகவும் பின்தங்கிய எங்கள் கிராமத்தில் அடிக்கடி குடிநீர் வருவது தடைபடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டபடுகிறோம். சடைங்குப்பம் ஏரியை தூர்வாரி கொடுத்தாலே அந்த தண்ணீரை நாங்கள் துணி துவைப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்திக் கொள்வோம்.

    தொடர்ந்து இதேபோன்று பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலை வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் குடிநீர் வசதி செய்து தரவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம்.
    • பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை, சொத்து வரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது குறைகளையும் மனுக்களையும் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த புதிய செயலியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடியே குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம்.

    குப்பைகள் இருந்தாலோ, கழிவு நீர் தேங்கி இருந்தாலோ, கால்நடைகளால் தொல்லை ஏற்பட்டாலோ புகைப்படங்களுடன் தெரிவி த்தால் உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

    செயலியில் பதிவான குறைகளை அனைத்து பிரிவு அதிகாரிகளும் கண்காணிப்பதால் உடனடியாக பிரச்சனையை தீர்வு செய்ய முடியும்.

    தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் தான் இந்த புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த செயலி மூலம் பொது மக்களுக்கு தேவையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையையும் கொண்டு வந்துள்ளோம்.

    விரைவில் இந்த செயலி மூலம் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை, சொத்து வரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்த புதிய செயலி மூலம் குறைகள், மனுக்களை எவ்வாறு தெரிவிப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×