என் மலர்
நீங்கள் தேடியது "புகையிலை"
- பசுவந்தனை போலீசார் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- 3 பேரையும் போலீசார் கைது செய்து, 36 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்
புதியம்புத்தூர்:
பசுவந்தனை இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் பசுவந்தனை -கோவில்பட்டி ரோட்டில் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது29), மேல முடிமன் வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் (42), துரைசாமி புரம் தெற்கு தெருவை சேர்ந்த அழகுராஜ் (35) ஆகியோர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகை யிலையை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.13,200 மதிப்புள்ள 36 கிலோ புகையிலை பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
- செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
- இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை -திருச்சி சாலையில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டு வந்து கொண்டிருப்பதாக செங்கிப்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன் மேற்பார்வையில், செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி மற்றும் போலீசார் தஞ்சை -திருச்சி சாலையில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தினர்.
இந்நிலையில் செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து போலீஸாரை பார்த்ததும் காரில் இருந்த இரண்டு பேர் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து காரை போலீஸார் சோதனை மேற்கொண்ட போது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
கார் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர்.
- குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின.
அவினாசி :
அவினாசி அருகேயுள்ள உப்பளிப்பாளையத்தில் மதியழகன் (வயது38) என்பவர் மளிகை கடத்தி வருகிறார். இவர் கடையில் வைத்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகையிலை தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்பிரிவு டி.எஸ்.பி நரசிம்மன் தலைமையிலான போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதியழகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த வண்டியின் ஓட்டுநர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
- ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.3.84 லட்சம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் புலிக்காரத் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 57). இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது.
இதையடுத்து தினமும் பாரிவள்ளல் பள்ளி அருகே பான் மசாலா விற்பனை செய்வரிடம் வாங்கி உபயோகித்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் புகையிலை போட்டதும் திடீரென சண்முகத்திற்கு மயக்கம் ஏற்பட்டு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று புகையிலை விற்பனை செய்தவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரது தகவலின் பேரில் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த கணேஷ் புகையிலை 396 கிலோ, கூல் லிப் புகையிலை 35 கிலோ, விமல் புகையிலை 61 கிலோ ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,84,004. இது தொடர்பாக ராமநாதபுரம் பாசிப்பட்டரை தெருவை சேர்ந்த ஆதில் அமீன் (40), வைகை நகரைச் சேர்ந்த பாசித் ராஜா, தெற்கு தெரு நிஷார் அகமத் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஆதில் அமீனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- லீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், விஜயகுமார் ஆகியோர் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர்.
- பையை போலீசார் பிரித்து பார்த்ததில் அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
திருப்பூர் :
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், விஜயகுமார் மற்றும் போலீசார் சவுந்தராஜன், சையது முகமது ஆகியோர் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 1-வது பிளாட்பா ரத்தில் வந்து நின்ற ரெயிலின் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அந்த பையை போலீசார் பிரித்து பார்த்ததில் அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் புகையிலை பொருளை யார் கடத்தி வந்தனர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் கடத்தியவர் கைது
- தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று அரசு நடவடிக்கை
கன்னியாகுமரி:
தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அதிரடி நட வடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து வருகிறார். அவரது நடவடிக்கையின் மூலம் பல பகுதிகளில் இருந்தும் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தினமும் வாகன சோதனை, கடைகளில் அதிரடி சோதனை என தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் குட்டக் குழி பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திரு வட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமை யிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாலிபர் கொடுத்த தகவ லின் பேரில், குட்டக்குழி பகுதியில் மறைத்து வைத்து இருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வட்டவிளை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என தெரியவந்தது.
- மதுரையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்.
- புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீ சார் சுப்பிரமணியபுரம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அங்கு டாட்டா சுமோ வாகனம் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 240 கிராம் மதிப்புடைய 70 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜேஷ் (32), காசி விஸ்வநாதன் (31) என்பது தெரியவந்தது. காசிநாதன் மீது புகையிலை பொருட்கள் கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- நல்லாத்தூர் சாலை யில், பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீ சாருக்கு ரகசியத்தகவல் வந்தது.
- குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனைச் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலை யில், பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீ சாருக்கு ரகசியத்தகவல் வந்தது. அந்தன்பேரில், போலீசார் குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனைச் செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா உள்ளிட்ட ரூ.600 மதிப்பிலான பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் கலந்தர் ராஷித் (வயது34) என்பவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொட்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் பகுதியில் வடக்கு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் (வயது 60) என்பவரை பிடித்தனர். அவர் பதுக்கி வைத்தி–ருந்த 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து காளிதாசை கைது செய்தனர்.
- சரக்கு வேனை பல்லட ம்போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
- ஓட்டுநர் அனந்த நாராயணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை யிலான போலீ சார்,வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிறிய ரக சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் அரசால் தடை செய்யப்பட்ட 650 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த சரக்கு வேனை பல்லட ம்போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து,விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதில் வந்தவர் கோவை கணபதியை சேர்ந்தஅனந்த நாராயணன் (வயது 52) என்பதும், கோவையிலிருந்து புகையிலை பொருட்களை கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுநர் அனந்த நாராயணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அட்டை பெட்டியுடன் வந்தார்.
- . அவரை அழைத்து சோதனை செய்தபோது அந்த அட்டை பெட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போன்ற புகையிலை இருப்பது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் தலைமையிலான் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அட்டை பெட்டியுடன் வந்தார். அவரை அழைத்து சோதனை செய்தபோது அந்த அட்டை பெட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போன்ற புகையிலை இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அந்த வாலிபர் விழுப்புரத்தை சேர்ந்த சங்கர் (வயது 36) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.