என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர்"

    • உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் விஷமருந்தி இருப்பதாக கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் ஜாண் பரிதாபமாக இறந்தார்.

    குழித்துறை, அக்.27-

    மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பழைய கடை பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ஜாண் (வயது 53), இவருக்கு பெல்ஸ் மேரி (43) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். மைக்கேல் ஜாண் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் வீட்டில் வந்ததும் வயிறு வலிப்பதாக துடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் விஷமருந்தி இருப்பதாக கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் ஜாண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு
    • கொலைமிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி:

    நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 48). இவர் குழித்துறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிகிறார்.

    சம்பவ தினம் மார்த்தா ண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணம் துறைமுகம் வழியாக செல்லும் பஸ்ஸில் பணிபுரிந்துள்ளார். அப்போது தேங்காப்பட்டணம் பஸ்நிறுத்ததில் இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த பெல்லஸ்பர் என்பவர் பஸ்சில் ஏறி முள்ளூர்துறை என்ற இடத்துக்கு டிக்கட் எடுத்துள்ளார்.

    பஸ் அரையன்தோப்பு பகுதியில் செல்லும்போது பஸ்ஸை நிறுத்த கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பெல்லஸ்பர் ஓட்டுநர் இருக்கை சென்று அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ராஜன் தேங்காப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின்பேரில் அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

    இது போன்று பெல்லஸ்பர் அளித்துள்ள புகாரில் பஸ்ஸில் ஏறி, தேங்காப்பட்டணம் துறைமுகப்பகுதியில் இறங்க வேண்டும் என டிக்கட் எடுத்ததாகவும், குறிப்பிட்ட இடம் வந்ததும் நடத்துனர் விசில் அடித்தும், டிரைவர் நிறுத்தாமல் சென்றதாகவும், இதை கேட்டதால் டிரைவர், நடத்துனர் இருவரும் சேர்ந்து பெல்லஸ்பரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார். இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆட்டோ டிரைவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதய கோளாறு ஏற்பட்டு உள்ளது.
    • போதகரும் 28-ந் தேதி காலையில் இருந்து மாயமான தகவல் கிடைத்துள்ளது. எனவே இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, போதகருடன் தனது மனைவி சென்று இருக்கலாம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்ச தோப்பு காலனி பகுதியை சேர்ந்த 47 வயதான ஆட்டோ டிரைவர், தனது 45 வயது மனைவி யுடன் வசித்து வருகிறார்.

    இவரது மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் வெளிநாட்டில் உள்ளார். ஆட்டோ டிரைவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதய கோளாறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ததேயுபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 45 வயது உடைய ஒரு நபர் தன்னை போதகர் என கூறிக் கொண்டு ஆட்டோ டிரைவருக்கு அறிமுகமாகி உள்ளார்.

    அதன்பின்னர் பிரா ர்த்தனை செய்வதற்காக ஆட்டோ டிரைவர் வீட்டி ற்கு அவர் அடிக்கடி வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காலையில் சவாரி சென்று விட்டு ஆட்டோ டிரைவர் வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவரது மனைவியையும் காணவில்லை.அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது.

    உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் மனைவி பற்றி தகவல் கிடைக்காததால் ஆட்டோ டிரைவர் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் வழக்கமாக பிரார்த்தனைக்கு வரும் போதகரும் வராமல் இருந்ததால் ததேயுபுரம் சென்று அவரது வீட்டில் ஆட்டோ டிரைவர் விசாரித்துள்ளார்.

    அப்போது போதகரும் 28-ந் தேதி காலையில் இருந்து மாயமான தகவல் கிடைத்துள்ளது. எனவே இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, போதகருடன் தனது மனைவி சென்று இருக்கலாம் என ஆட்டோ டிரைவர் கருதினார்.

    இந்த நிலையில் ஆட்டோ டிரைவரின் மனைவி, திருமணமான தனது மகளுக்கு போன் செய்து, தான் போதகருடன் தேங்காப்பட்டணம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

    இது குறித்து ஆட்டோ டிரைவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சி. எஸ். ஆர். பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை போதகருடன், ஆட்டோ டிரைவர் மனைவி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    முதிர்ந்த கள்ளக்காதல் ஜோடியிடம் போலீசார் விசாரித்த போது, போலீஸ் தங்களை தேடியதால் தஞ்சம் அடைந்ததாக போதகர் தெரிவித்தார்.

    ஆட்டோ டிரைவரின் மனைவி, போலீசில் கூறுகையில்,கணவர் தன்னை அடித்து துன்புறுத்து வதாகவும் அதனால், தான் கணவர் வீட்டிற்கு செல்ல வில்லை என்று தெரிவித்ததார். பின்னர் அதை இருவரும் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு சென்றனர்.

    முதிர்ந்த கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அறிந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் போலீஸ் நிலையத்தில் வந்து குவிந்தனர். கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது/

    • தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
    • இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அன்னதானப்பட்டி:

     சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் சேகர் என்பவரும் நண்பர்கள் எனக் சொல்லப்படுகிறது.

    இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ராஜ்குமாரை திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீ சார் , அடிதடி வழக்கில், தாதகாப்பட்டி சண்முக நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (47), அவரது மகன் அரவிந்த் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

    • ரோட்டை கடப்பதற்கு செல்ல முயன்ற போது களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுமுத்து மீது மோதியது
    • போலீசார் அரசு பஸ் ஓட்டி வந்த காட்டுகடை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ஷாஜி என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை

    கன்னியாகுமரி

    தக்கலை அருகே பரைக்கோடு ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுமுத்து (வயது 79). இவருக்கு பேபி என்ற மனைவியும், 3 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இன்று காலை பொன்னுமுத்து டீ குடிப்பதற்கு பரைக்கோடு பகுதிக்கு வந்தார். அப்போது ரோட்டை கடப்பதற்கு செல்ல முயன்ற போது களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுமுத்து மீது மோதியது. இதில் பொன்னுமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது சம்பந்தமாக இவரது மகன் சுபாஷ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அரசு பஸ் ஓட்டி வந்த காட்டுகடை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ஷாஜி என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்து போன பொன்னு முத்து உடலை போலீசார் கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • படுகாயம் அடைந்த அவரை சிகிச் சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • அர்ஜுனன் இறந்ததை யடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருகே பாலோடு மணலி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 58).

    இவர் சூழல் பகுதியில் உள்ள சிமெண்ட் கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் கேரளா காரோடு தேவர்புரத்தைச் சேர்ந்த வினு (40) என்பவர் டிரை வராக வேலை பார்த்தார். சம்பவத்தன்று வினு வண்டி யில் சிமெண்ட் மூட்டை களை ஏற்றினார்.

    இது குறித்து பணியில் இருந்த காவலாளி அர்ஜுனன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வினு காவலாளி அர்ஜுனனை பிடித்து கீழே தள்ளினார்.கீழே விழுந்ததில் அர்ஜு னனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச் சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் அனீஸ் கொல்லங் கோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். வினு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அர்ஜுனன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அர்ஜுனன் இறந்ததை யடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.

    தலைமறைவாகியுள்ள வினுவையில் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ள. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வினு கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந் துள்ளனர்.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பணி வழங்காததை கண்டித்து தொடர் போராட்டம்
    • அஜித்குமார் மீது தற்கொலைக்கு முயன்றதாக நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே சுங்கான் கடை பரசேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 49). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பணி வழங்காததை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்தனர்.பிடிபட்ட அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜித்குமார் மீது தற்கொலைக்கு முயன்றதாக நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் . தனியார் பஸ் டிரைவர்.
    • முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). தனியார் பஸ் டிரைவர்.

    தகராறு

    இவர் நேற்று இரவு பாளை சமாதானபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணி களை ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மற்றொரு தனியார் பஸ் டிரைவரான சேரன்மகா தேவி பட்டன்காடு பகுதியை சேர்ந்த முத்துவேல்(34) மற்றும் அதே பஸ் கண்டக்டரான மேலசெவலை சேர்ந்த முத்துமாரியப்பன்(34) ஆகியோருக்கும் இடையே பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தி யதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த பாளை சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    • 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • கடந்த 23-ம் தேதி நடந்த சாலை விபத்தில் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் சித்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51). இவரது மனைவி கோமதி (40). இவருக்கு லட்சுமி, ஷாலினி, சிவானி என்கிற மூன்று மகள்கள் உள்ளனர்.

    செந்தில்குமார் கடந்த 2013 ஆண்டு முதல் 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அங்கு சாலை விபத்தில் செந்தில்குமார் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறந்த செந்தில்குமாரின் மனைவி உடல்நிலை பாதி க்கப்பட்டு இருப்பதாலும், அவருக்கு மூன்று பெண் குழந்தைகளாக இருப்பதாலும் அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    செந்தில்குமாரின் மனைவி கையெழுத்திட்ட மனுவை உறவினர் நவநீதகி ருஷ்ணன், சேமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு உள்ளிட்டோர் திருவாரூர் மாவட்ட கலெக்ட ரிடம் அளித்தனர்.மனுவை பெற்றுக்கொ ண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்வ தாக தெரிவித்தார்.

    • திருமணம் ஆகாத விரக்தியில் பரிதாபம்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள செல்வன்புதூரைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மது போதையில் தனது வீட்டுக்கு வந்து உள்ளார்.இரவுஅவர் தனது வீட்டில்படுத்து தூங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்றுஅவர் வெகு நேரமாகியும் எழும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கி பாராட்டு
    • ஆட்டோ டிரைவர் சரவணன் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.

    இவர் நாகர்கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 28-ந் தேதி இவரது ஆட்டோவில் 2 பவுன் தங்க செயின் ஒன்று கிடந்தது. இதை பார்த்த சரவணன் அந்த நகையை எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.சாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் சரவணன் ஆட்டோவில் நகையைதவற விட்டது திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் குமரி மாவட்டம் வில்லுகுறி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.

    அப்போது சரவணன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் பிரமோத் 2 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரமோத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்த பிரமோத் நகையின் அடையாளங்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் 2 பவுன் நகை ஒப்படைத்தனர். நகையை எடுத்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவு பரிசையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழங்கினார். ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு பவுன் நகையை எடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை போலீசார் மட்டுமின்றி சக ஆட்டோ டிரைவர்களும் பாராட்டினார்கள்.

    • துரைமணி வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
    • சாவியை எடுத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றுவிட்டார்.

    பீளமேடு,

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் துரைமணி (வயது 30). டிரைவர். இவரது சகோதரர் சபாரத்தினம் (32). இவர் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் துரைமணி வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வீட்டுக்கு சென்ற போது, அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் மற்றும் 8 பவுன் தங்க நகையை காணவில்லை.

    வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டனர். அவர் தனது தாய் வீட்டுக்கு சென்ற போது அவரது சகோதரரும் வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

    இதனையடுத்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவர் தன்னுடைய சகோதரர் சபாரத்தினம் தனது வீட்டு சாவியை எடுத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றுவிட்டார் என தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சபாரத்தினம் எங்கு சென்றார்? அவர்தான் பணத்தை திருடி சென்றாரா? அல்லது வேறு யாராவதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×