என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகிகள்"

    • கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் மேயர் மகேஷ் பாரதிய ஜனதா கட்சியினரை விமர்சித்து பேசியதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேயர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ், மாநில செயலாளர் மீனாதேவ்,மாநகராட்சி கவுன்சி லர்கள் அய்யப்பன், சுனில் அரசு, வீரசூர பெருமாள்,ரோசிட்டாள், ரமேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை விமர்சித்து பேசிய மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாளை 10-ந்தேதி நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட தலைவர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர்.

    • அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
    • சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேளாங்கண்ணி குடும்ப சமுதாய கூடத்தில் நடைபெ ற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.

    வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், தி.மு.க. செயலாளர் மரிய சார்லஸ், தமிழ்நாடு காதுகேளாளர் கூட்டமைப்புதலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செய லாளர் மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் மகளிர் சங்கம் தலைவர் ரிஸ்கில்லா, பொதுச் செயலாளர் தேவ்தா சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியினை தமிழ்நாடு கலை பண்பாட்டு காது கேளாதோர் சங்க சைகை மொழி பெயர்ப்பாளர் கேசவன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காது கேளாதோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நாகை மாவட்ட காதுகே ளாதோர் முன்னேற்ற சங்க தலைவராகசுகுமாரன், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக வைரமூ ர்த்தி, துணைத் தலைவராக லட்சுமணன், துணைச் செயலாளராக ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள் பதவி யேற்பு செய்து வைத்தனர்.

    • 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் அ.தி.ம.மு.க. நிர்வாகிகள் ஈரோட்டில் ஆலோசனை நடத்தினர்.
    • ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.

     மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள், உயர்மட்டசெயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலைய செயலா ளர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி ஈரோட்டில் நடக்கிறது.கூட்டத்துக்கு அவைத்தலைவர் தாஜீதீன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் பூங்கா பி.கே.மாரி முன்னிலை வகிக்கிறார். துணைப் பொதுச்செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர்

    நெல்லை முத்துக்குமார் வரவேற்று பேசுகிறார்.

    கழக வளர்ச்சிகப்பணிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, தமிழக கவர்னரின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொ ன்பாண்டியன் பேசுகிறார்.

    ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது‌.

    • நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கயத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான, அனைத்து பூத்களிலும் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

    கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள், கட்சியின் 18 வார்டு செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்தல் நடை பெற்றது.
    • தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை மாநில காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டனர்

    கன்னியாகுமரி:

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிபுதிய நிர்வாகிகள் தேர்தல் நடை பெற்றது. இதில் தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை மாநில காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டனர்.

    நகர தலைவர்களாக ஹனுகுமார் (பத்மநாப புரம்), வக்கீல் சுரேஷ்(குழித்துறை), வட்டார தலைவர்களாக வினுட்ராய் (திருவட்டார்மேற்கு), ராஜசேகர் (கிள்ளியூர் கிழக்கு), ரகுபதி (முஞ்சிறை கிழக்கு), விஜயகுமார் (முஞ்சிறை மேற்கு), கிங்ஸிலி சாலமன் (மேல்புறம் கிழக்கு), ரவிசங்கர்(மேல்புறம் மேற்கு),பிரேம்குமார் ( தக்கலை) ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.

    • புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
    • கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம் : 

    காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைப்பது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும், புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதே போல் காங்கயம் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். பொருளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிரந்தர வருமானத்துக்கான வழிகள், வங்கிகடன் பெறுவது, அதனை திரும்ப செலுத்துவது எப்படி.
    • 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, கோவி ல்தேவராயன்பேட்டையில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு பயிற்சி மற்றும் பள்ளிக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடராஜா அரசு உதவிபெறும்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விவேகானந்தா சமூக கல்வி சங்க தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமொழிதமிழ்வாணன், தலைமை ஆசிரியர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உறுப்பினர் புனிதா அனைவரையும் வரவேற்றார்.

    இதில் விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர் தங்க.கண்ணதாசன், கலந்து கொண்டு மகளிர் சுய உதவிகுழு நிர்வாகிகளுக்கு ஆளுமை திறன், நிதிமேலாண்மை நிர்வாகம், மக்கள் தொடர்பு, தொழில் வேலைவாய்ப்பு , நிரந்தர வருமானத்துக்கான வழிகள், வங்கிகடன் பெறுவது, அதனை திரும்ப செலுத்துவது எப்படி , இன்சுரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு, வீடு,வாகனம்.

    கால்நடைகள், தனிநபர் காப்பீடு செய்வது எப்படி என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் முன்னோடி குழு நிர்வாகிகள் விஜி, வளர்மதி, கவிதேவி, தமிழரசி, சிவகாமசுந்தரி, கலா, ரமணி உள்பட 50 -க்கும் மேற்பட்ட மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நிகழ்ச்சியில் நடராஜா உதவிபெறும்பள்ளி வளர்ச்சிக்கு விவேகானந்தா சமூக கல்விசங்கம் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்கள் காசிராமன்,ராஜாங்கம்,களப்பணியாளர்கள் புனிதா, செல்வி,மணி. ராதிகா, லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • கே. பி. முனுசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
    • 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர பொருளாளர் சரவண வேல் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க நிர்வாகி அன்பழகன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வின் இணை பொதுச் செயலாளரும், வேப்பனபள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. முனுசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது,மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வேங்கன்,வேடி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், அவைத்தலைவர் கிருஷ்ணன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், நகர செயலாளர் விமல் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது.
    • பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண் ராமநாதன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.

    தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கலையரசன், மாநகர பொருளாளர் காளையார் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

    முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    அப்போது தமிழ்நாடு வாழ்க என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

    பின்னர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது,

    இப்போது தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றத் துடிக்கிறார்கள்.

    தமிழ்நாடு அரசின் இலச்சினை, தமிழ் ஆண்டு ஆகியவற்றை திட்டமிட்டு தவிர்க்கிறார்கள். தமிழர் திருநாள் அன்று 13000 பேர் எஸ்.பி.ஐ வங்கி தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு எம்.பி.க்கள் எவ்வளவோ போராடிய பிறகும் ஒன்றிய அரசு விடாப்பிடியாக தேர்வை நடத்துகிறது.

    இப்படி ஓணம் பண்டிகையின் போதோ, தசரா பண்டிகையின் போதோ நடத்த முடியுமா. அப்படியிருக்க பொங்கல் நாளில் நடத்துகிறார்கள் என்றால் இது தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் நடத்தப்படுகிற தாக்குதலாகும். இதற்கு நாம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    • கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மன்னார்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்எம்பி.துரை வேலன் தலைமை வகித்தார். மன்னார்குடி நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல செயலாளர் சண்முகசுந்தரம், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்றத்துக்கு எதிராக செயல்படுகின்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    • முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழாவை டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார்.
    • ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்-லெட்சுமி ஆகியோரின் மகள் டாக்டர் மு.நிவேதிதாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வேல் மகாராஜன்-சுந்தரி ஆகியோரின் மகன் டாக்டர் வே.முருகனுக்கும் மதுரை கருப்பாயூரணி எம்.பி. மகாலில் திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்

    டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்து பேசும்போது, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. பதினெட்டாம்ப டியான் குடும்பத்தினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசிகள். அவர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர். இந்த திருமணத்தை நடத்தி வைத்த தில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன் என்றார்.

    பின்னர் அவர் அ.ம.மு.க. பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    திருமண விழாவில் முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் ராமையா தேவர். வக்கீல்புலிகேசி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்டாக்டர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கடலாடி வெள்ளத்துரை, கமுதி வி.கே.ஜி. முத்துராமலிங்கம், புளியங்குடி முத்துராம லிங்கம், செல்வநாயகபுரம் முருகன், வெங்கலகுறிச்சி சேதுபதி, முதுகுளத்தூர் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×