search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டு"

    • வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    • அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கண்டனம்

    இதையொட்டி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், வக்கீல் கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் மேலும் அந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதுபோல சம்பவங்கள் மேலும் நடக்காமல் வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    • குழந்தையை பராமரித்து வரும் தாயாரால் பெயர் வைக்க முடியாமல் போனது.
    • பெயர் இல்லாததால் பள்ளியில் சேர்க்க முடியவில்லை.

    திருவனந்தபுரம்:

    குடும்ப சண்டை, விவாகரத்து வழக்கு காரணமாக மகளுக்கு பெயர் வைப்பதில் தாய், தந்தைக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்த கேரள ஐகோர்ட்டு அந்த குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளது.

    கேரள மாநிலம், ஆலுவா பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மகள் பிறந்த பிறகு, குடும்பச் சண்டை காரணமாக இருவரும் பிரிந்து விவகாரத்து செய்ய முயன்றனர். இதனால், குழந்தையை பராமரித்து வரும் தாயாரால் பெயர் வைக்க முடியாமல் போனது. குழந்தையின் தாயார், புண்யா என்ற பெயரையும், குழந்தையின் தந்தை, பத்மா நாயர் என்ற பெயரையும் வைப்பதாக இருந்தது.

    குழந்தைக்கு பெயர் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், பெயர் இல்லாததால் பள்ளியில் சேர்க்க முடியவில்லை. இதையடுத்து, தனது மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தனது கணவருக்கு உத்தரவிடுமாறு கேரள ஐகோர்ட்டில் குழந்தையின் தாய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பெற்றோருக்கு இடையேயான தகராறைத் தீர்த்து வைத்த பிறகு பெயர் வைப்பது கால தாமதத்துக்கு வழி வகுக்கும் என்பதால், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தந்தை பரிந்துரைத்த பெயரையும், தாயார் பரிந்துரைத்த பெயரையும் சேர்த்து, புண்யா பி. நாயர் என்று பெயர் வைத்தார்.

    • கர்நாடக முதல்-மந்திரி மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி கிராமத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயி கள் சங்கம் சார்பில் காவிரி டெல்டாவில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ரெயில் மறியல் போராட்டம் குறித்து ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலா ளர் குடவாசல் சரவணன், மாநில துணை செயலாளர் செந்தில் குமார் உள்பட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக முதல்-மந்திரி தொடர்ந்து 2 மாத காலமாக அனைத்து கட்சிகளையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது எனவும், மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளார்.

    இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பான மத்திய அரசுக்கு எதிராக வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள காவிரி டெல்டா ரெயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்க ணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக போராட்டம் குறித்த பிரசுரங்களை நிர்வாகிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கினார்.

    • 1933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
    • காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். முதன்மை குற்றவியல் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், சார்பு நீதிபதி அசான் முகமது, நீதிபதிகள் விஜயலட்சுமி, தாயுமானவர், மணிமேகலை வழக்கறிஞர் சங்க தலைவர் பால ஜனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவிலில் 6 பெஞ்சுகளில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து தொடர்பான வழக்குகள், விபத்து காப்பீடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    மோட்டார் காப்பீடு இன்சூரன்ஸ் மற்றும் காசோலை வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது. காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.68 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தக்கலை, பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1933 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டு உள்ளது.

    ராஜபாளையம் அருகே கோர்ட்டில் சாட்சி சொல்ல வற்புறுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே செட்டியாப்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 57). இவரது பேத்தியுடன் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் 
    (வயது 30) என்பவர் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்துள்ளனர். அப்போது கங்காதரன் சுப்புலட்சுமியின் பேத்தியுடன் உல்லாசமாக இருந்ததில் அவர் கர்ப்பிணி ஆகிவிட்டார்.

    இதுபற்றி கடந்த 2021-ம் ஆண்டு தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் கங்காதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

    இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கங்காதரன் சுப்புலட்சுமியை சந்தித்து உங்களது பேத்தியை திருமணம் செய்து கொள்கிறேன். எனக்கு சாதகமாக நீங்கள் சாட்சி சொல்ல வேண்டும். இதற்கு உடன்பாடாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

    இதுபற்றி சுப்புலட்சுமி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை தேடி வருகின்றனர்.

    ×