என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள்"

    • ராஜபாளையம் அருகே தென்னந்தோப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்கின்றன.
    • யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

     ராஜபாளையம் 

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியையொட்டி செல்ல பிள்ளை ஊரணி அருகே ராமகிருஷ்ண ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்குள் நேற்றிரவு காட்டு யானைகள் புகுந்தன.

    அவை அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை அடியோடு பிடுங்கி சேதப்படுத்தியது. அதே போல் அந்த பகுதியில் இருந்த பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    காய்ப்பு பருவத்திற்கு வந்த பாதி மரங்களும், 2 வருடங்கள் வளர்த்த தென்னங்கன்று களும் யானைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவது வழக்கம்.
    • போடிச்சி ப்பள்ளி, ஜக்கேரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    தேன்கனிகோட்டை,

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவது வழக்கம்.

    ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரும் இந்த யானைகள் 4 மாதங்கள் இந்த பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதேபோல இந்த ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்தன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் முகாமிட்டிருந்த யானைகள் 2 குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் சானமாவு காட்டிற்கு வந்தன.

    குட்டிகளுடன் 56 யானைகள் சானமாவு காட்டில் முகாமிட்டு பகல் நேரத்தில் வனப்பகுதிக்கு ள்ளும், இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களு க்குள் சென்று பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சானமாவு காட்டில் முகாமிட்டு இரு ந்த யானைகளையும் ஓசூர் வனச்சரகர் ரவி தலைமை யில் வன ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் தேன்கனி க்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து யானைகள் போடிச்சி ப்பள்ளி, ஜக்கேரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த யானைகள் குட்டி களுடன் அடர்ந்த வனப்பகு திக்குள் சென்றன. தற்போது ஓசூர் சானமாவு காட்டில் ஒரு யானை மட்டும் உள்ளது.

    அந்த யானையையும் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஓசூர் சானமாவு காட்டில் ஒரு யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் வனப்ப குதிக்குள் ஆடு, மாடுகளை மேய்க்க செல்ல வேண்டாம் என்றும், விறகுகளை எடுக்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • விளை நிலங்களில் இருந்து யானைகள் வெளியேறி விட்டாலும், இன்னும் வனப்பகுதிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
    • பலாப்பழத்திற்கு அடிமையான யானைகள் அவற்றை தேடி விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காட்டு யானைகள் அடிக்கடி எஸ்டேட் பகுதிக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக இடுக்கியில் உள்ள சந்தன்பாறை மற்றும் சின்னக்கனல் கிராம பஞ்சாயத்து எல்லையோர வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊர்ப்பகுதிக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மீண்டும் யானைகளின் அட்டகாசம் தொடங்கி உள்ளது. தேவிகுளம் தாலுகாவில் உள்ள பி.எல்.ராம் கிராமத்தில் சுற்றித் திரிந்த யானைகள் கூட்டம் அங்குள்ள வீட்டை கடுமையாக தாக்கி சேதப்படுத்தி உள்ளது.

    பலாப்பழத்திற்கு அடிமையான அரிகொம்பன் மற்றும் சாக்க கொம்பன் யானைகள் தான் தற்போது விளை நிலங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த யானைகள் மிகவும் ஆபத்தானவை என கூறும் அவர்கள், யானைகளை காட்டுக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    விளை நிலங்களில் இருந்து யானைகள் வெளியேறி விட்டாலும், இன்னும் வனப்பகுதிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து சந்தன்பாறை பஞ்சாயத்து தலைவர் லிஜூ வர்கீஸ் கூறுகையில், 2 முரட்டு யானைகளால், எங்கள் கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இரவில் கூட அவர்கள் தூங்காமல் உள்ளனர். யானைகளுக்கு பயந்து விவசாய நிலங்களில், பலாப்பழங்கள் பயிரிடுவதை நிறுத்தி விட்டனர். இருப்பினும் பலாப்பழத்திற்கு அடிமையான யானைகள் அவற்றை தேடி விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது என்றார்.

    • மீண்டும் வனத்திற்குள் சொல்ல வழி தெரியாமல் தவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.
    • சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    வடவள்ளி,

    கோவை வனச்சரகம் அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை 4 யானைகள் ஒரு குட்டியுடன் கெம்பனூர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்தது.

    அதிகாலை 6 மணிக்கு தோட்ட வேலைக்கு சென்றவர்கள் யானை இருப்பதை கண்டு வனத்து றையினருக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் வரவில்லை. கதிரேசன் என்பவரது விளைநிலங்களில் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்த யானைக்கூட்டத்தை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் யானைகள் வனத்தை நோக்கி செல்லாமல் போக்கு காட்டி நின்றது. ஒரு வழியாக 3 மணி நேரம் கழித்து சுமார் 9 மணி அளவில் யானை அட்டுக்கல் வனத்தை நோக்கி நகர்ந்து சென்றது. கடந்து இரு வாரங்களுக்கு முன்பு அருகில் உள்ள தாளியூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்த யானைக்கூ ட்டம் வனத்திற்குள் செல்லாமல் இருந்தது குறிப்பிட தக்கது. தொடர்ந்து வனப்பகு தியை விட்டு வெளியே வரும் யானைக்கூ ட்டம், மீண்டும் வனத்திற்குள் சொல்ல வழி தெரியாமல் தவித்து வருவது வாடிக்கை யாக உள்ளது.

    கெம்பனூர், தாளியூர் , ஓணாப்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து உள்ளது. மதில் சுவர்கள் கட்டி யானை வழித்தடத்தை சிலர் மறித்து இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரி வித்து உள்ளனர். எனவே யானையின் வழித்தடத்தை மீட்டு எடுக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வ லர்களின் கோரிக்கையாக உள்ளது.  

    • வனப்பகுதியில் இருந்து யானைகள் தண்ணீரை தேடி வெளியேறி கூட்டமாக பவானிசாகர் அணைக்கு வந்தது.
    • இந்த யானைகள் கூட்டமாக வந்ததை கண்ட அந்த பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், பண்ணாரி மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானைகள் உள்பட பல வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வெளியேறி அடிக்கடி கூட்டமாக ரோட்டில் உலாவி வருகிறது. மேலும் அருகே உள்ள கிராம பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.

    இதே போல் பவானி சாகருக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் யானைகள் பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு தண்ணீரை தேடி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த யானைகள் கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீரை தேடி வெளியேறி கூட்டமாக பவானிசாகர் அணைக்கு வந்தது. அந்த யானைகள் அணை பகுதி யில் சிறுது நேரம் உலாவி கொண்டே இருந்தது.

    இந்த யானைகள் கூட்ட மாக வந்ததை கண்ட அந்த பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அருகே உள்ள பூங்கார் கிராம குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுமோ என ஒரு வித அச்சத்துடன் இருந்தனர்.

    யானைகள் ஊருக்குள் புகாதவாறு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானைகளை பவானிசாகர் வனப்பகுதிக்கு விரட்டுமாறு பவானிசாகர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது.
    • வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,

    ஊட்டி,

    கூடலூர், முதுமலை, மசினகுடி சுற்று வட்டார பகுதிகளில் வறட்சியான காலநிலை தொடங்கியுள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது

    கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தேன் வயல் பழங்குடி கிராம மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதிக்கு வந்த யானைகள் பாகற்காய் தோட்டம் மற்றும் வாழைதோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகள் இரவு முழுவதும் அங்கு நடமாடியதால் விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்

    எனவே வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது.இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.  

    • யானைகள் தருமபுரி மாவட்டத்துக்குள் அடிக்கடி புகுந்து வருகின்றன.
    • கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

    பாலக்கோடு,

    கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் தருமபுரி மாவட்டத்துக்குள் அடிக்கடி புகுந்து வருகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரிகளில் தண்ணீர் அதிகமாக உள்ளது. இதனால் கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து நீர்நிலைகளில் முகாமிட்டு வருகின்றன.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த 2 மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

    இந்தநிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து இடம்பெயந்த குட்டி யானை உள்பட 5 யானைகள் பாலக்கோடு அருகே உள்ள நல்லூர் கிராமத்துக்குள் புகுந்தன. அவை கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.

    மேலும் அங்குள்ள ஏரியில் முகாமிட்டன. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே ஏரியில் இறங்கிய யானைகள், தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன. தொடர்ந்து நல்லூர் கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கோடைக்காலத்தில் மட்டுமே உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி, கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். ஆனால் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதாலும், வனப்பகுதியில் வறட்சி நிலவுவதாலும் யானைகள் மட்டுமின்றி, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட மற்ற வன விலங்குகளும் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயிர்களை சேதப்படுத்தி வருவது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதிகளில் காட்டு யானைகள் விளைநிலங்களை நோக்கி படையெடுப்பது மற்றும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வது தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக இருக்கிறது.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியிலிருந்து வெளியேறிய யானை விளைநிலங்களில் தஞ்சம் அடைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பின்னிக்கல் கிராமத்திற்குள் நுழைந்து தக்காளி, பீன்ஸ், கோஸ் உள்ளிட்ட பயிர்களை யானை சேதப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர்.

    • பண்ணாரி அருகே குட்டிகளுடன் வந்த யானைகள் பஸ்சை வழி மறித்து நின்றது.
    • இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் அருகே தாள வாடி, ஆசனூர், பண்ணாரி வனப்பகுதி உள்ளது. மேலும் இந்த பகுதியில் புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, மான் மற்றும் கரடிகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகி றது.

    இந்த வனப் பகுதி வழியாக திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் தினமும் பஸ், கார், இரு சக்கர வாக னங்கள், லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் கர்நாடகாவுக்கும், அங்கு இருந்து தமிழகத்துக்கும் வந்து சென்றது.

    இந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் உள்பட வன வன விலங்குகள் அடி க்கடி வெளியேறி ரோட்டில் உலா வந்து கடந்து செல்கி றது.

    அப்படி வெளியேறும் யானைகள் அந்த வழியாக வரும் லாரிகளை வழி மறித்து அதில் இருந்து கரும்புகளை பறித்து திண்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    மேலும் உணவுக்காக யானைகள் அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அதே போல் அந்த வழியாக செல்லும் பஸ்களின் கண்ணாடிகளை யானைகள் ஒரு சில நேரங்களில் உடை த்தும் வருகிறது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரி கோவில் அருகே உணவு தேடி யானைகள் குட்டி களுடன் கூட்டமாக வனப்பகு தியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து உலாவி கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் பண்ணாரி அருகே வந்த போது திடீரென குட்டிகளுடன் வந்த யானைகள் அந்த பஸ்சை வழி மறித்து நின்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மேலும் பஸ்சில் வந்தவர்கள் அதிர்ச்சியில் செய்வது அறியாமல் யானைகளை விரட்ட சத்தம் போட்டனர். ஆனால் யானைகள் செல்லாமல் அங்கேயே நின்றது.

    இதை யடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்த ப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    இதை தொடர்ந்து சிறிது நேரம் அங்கே சுற்றி திரிந்த யானைகள் அதன் பிறகு தானாகவே வனப்பகுதி க்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை நிலவியது.

    தாளவாடி, மற்றும் பண்ணாரி வனப்பகுதி களில் இருந்து யானைகள் அடி க்கடி வெளியேறி வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையு டனும், எச்சரி க்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறை யினர் கேட்டு கொண்டனர்.

    • மின்வேலி அமைத்த விவசாயி முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சென்னை ஐகோர்ட்டு அவசர அவசரமாக விசாரணை செய்து வருகிறது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு பகுதியில் கடந்த மாதம் மக்னா யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை நாசம் செய்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த யானை விரட்டி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் வனத்துறையினர் அந்த மக்னா யானையை பிடித்து முதுமலை காட்டிற்கு கொண்டு சென்றனர்.

    பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பாப்பாரப்பட்டி பகுதிகளில் குட்டிகளுடன் 5 யானைகள் சுற்றித்தி ரிந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் இரவில் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்து வந்தது.

    இந்த நிலையில் மாரண்டஅள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார்.

    இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வயர்கள் அமைத்து உள்ளார்.

    இந்த மின் வயர்கள் நேரடியாக மின்சார கம்பத்தில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தில் விட்டுள்ளார்.

    நேற்றிரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த 5 காட்டு யானைகள் தண்ணீர், உணவு தேடி முருகேசன் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது விளைநிலத்தில் இருந்த மின்சார கம்பியில் சிக்கிய 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை, ஒரு ஆண் யானை என 3 காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியது.

    இதனை இன்று காலை அந்த வழியாக விவசாய விளைநிலத்திற்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பாலக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த யானைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக பாலக்கோடு வனத்து றையினர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையடுத்து அந்த 3 யானைகளை உடற்கூராய்வு செய்ய மருத்துவக்குழுவினர் வந்தனர். அப்போது அந்த 3 யானைகளுடன் வந்த 2 குட்டியானைகள் தாயை விட்டு பிரிய முடியாமல் அங்கேயே சோர்ந்து போய் திகைத்து நின்றது. இதனால் வனத்துறையினர் அந்த குட்டி யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 3 காட்டுயானைகள் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் உயிர்தப்பிய 2 குட்டியானைகளை பாதுகாக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.

    • தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • ஒகேனக்கல் வனப்பகுதி கோடுபட்டி பகுதியில் இரண்டு யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் மக்னா யானை என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தது.

    இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள், தாய் உயிரிழந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பி பரிதாபமாக அதே பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வருகிறது. இந்த இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக மீட்டு முதுமலை சரணாலயத்திலும், யானைகள் கூட்டத்திலும் விடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட வனத் துறையினர் மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு, மண்டல வன கோட்ட அலுவலர் வின்சென்ட், மருத்துவர் பிரகாஷ், பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானை குட்டிகளை பாதுகாப்பாக மீட்பதற்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் யானைக்கு முலாம்பழம், பலாப்பழம், கோசாப் பழம், குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை ஆங்காங்கே வைத்து, வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த குட்டி யானைகள் உணவை எடுப்பதற்கு வந்தால், பாதுகாப்பாக யானையை பிடிப்பதற்கு வலையோடு வனத் துறையினர் காத்திருகின்றனர்.

    ஆனால் தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைவதும், மீண்டும் தனது தாய் இருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும் என சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

    யானை உயிரிழந்த பகுதிக்கு அருகில் உள்ள கல்லாகரம் பகுதியில் உள்ள உப்பு பள்ளம் ஓடை பகுதியில் இரண்டு குட்டி யானைகளும் முகாமிட்டுள்ளது.

    இதனை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் இரண்டு குழுக்கள் அருகில் உள்ள பாலக்கோடு வன சரக்கத்திற்குட்பட்ட பெட்ட முகிழாலம், ஒகேனக்கல் வனப்பகுதி கோடுபட்டி பகுதியில் இரண்டு யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ளது.

    அதனை கண்காணிக்க இரண்டு வனக்குழு சென்றுள்ளது. மேலும் அந்த யானை கூட்டத்தில் குட்டி யானைகள் ஏதாவது இருக்கின்றதா என்ன கண்காணித்து இந்த யானை குட்டிகளைகொண்டு சேர்க்கும் பணியில் வனத்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஒரு வயது குட்டி யானை உணவு அருந்தாமல் ஆக்ரோசமாக தாயைத் தேடி அலைந்து வருகிறது. இரண்டு வயது யானை குட்டி அதற்கு துணையாக பின் தொடர்ந்து சுற்றி வருகிறது. இந்த இரண்டு யானை குட்டிகளின் பரிதாப நிலையை பார்த்து அப்பகுதி விவசாயிகள் பிடித்து உடனடியாக யானை கூட்டத்தோடு சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன.
    • 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது:

    இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளன.

    கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    ×