என் மலர்
நீங்கள் தேடியது "மரக்கன்றுகள்"
- பிறந்தநாளை முன்னிட்டு வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
வேலூர்:
காட்பாடியில் உள்ள அன்பு உலகம் தொண்டு நிறுவனம் சார்பில் வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அன்பு உலகம் தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் தலைமை தாங்கினார்.
வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் கலந்துகொண்டு சுற்று சூழலின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.
முன்னதாக நேற்று முன்தினம் வி.ஐ.டி.துணை தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு வெலாசிட்டி மால் வளாகத்தில் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் பி.வி.ஆர்.திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் காலை முதல் இரவு வரை மரக்கன்றுகளையும், இனிப்புகளையும் அன்பு உலக தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பி.வி.ஆர். திரையரங்க மேலாளர் கலாநிதி, மாறன் அசோசியேட்ஸ் மேலாளர் மணிமாறன் மற்றும் அன்பு உலக தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
வாழப்பாடி:
தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை தொடங்கப்பட்டு 100-ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தமிழகத்தின் அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், ஆத்தூர் சுகாதாரப் பணிகள் (பொறுப்பு) துணை இயக்குனர் வித்யா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பனை விதைகள் உள்பட 100 மரக்கன்றுகளை சுகாதார நிலைய வளாகத்தில் நட்டு, முறையாக பராமரித்து வளர்ப்பதென உறுதிமொழி ஏற்றனர். இறுதியில் சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
- மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இம்மாதத்திற்குள் மகோகனி, செம்மரம், வேங்கை, தேக்கு , ரோஸ்வுட் ஆகிய மரக்கன்றுகள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது.
மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தேவைப்படும் மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.
- பாவூர்சத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
- கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
தென்காசி:
தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாள் விழா கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், விஜயன், ஒன்றிய கவுன்சிலர்கள் வளன் ராஜா, ராஜேஸ்வரி மற்றும் மதிச்செல்வன், ஷாலி மேரி, ஜெகன், டேனியல், குருசிங், செந்தூர் உள்ளிட்ட தி.மு.க. பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
- மரக்கன்றுகள் நட்டு அதனை முறையாக பராமரிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
- ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் நிர்வாகம், மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினமான 22-4-22 அன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் முதல் மரக்கன்றை நட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டு வந்தார்.
இந்த நிலையில் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது. அதன்படி இன்று தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 லட்சமாவது மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி 1 லட்சமாவது மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது இந்த திட்டம் வெற்றிகரமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிவடைந்ததை முன்னிட்டு அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் இன்று 1 லட்சமாவது மரக்கன்று நடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பசுமை பரப்பு மற்றும் வனப்பரப்பினை அதிகப்படுத்துவது , பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொது மக்களிடம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதனால் வரை வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோவில் வளாகங்கள், மருத்துவமனை வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்று படுகைகள், மற்றும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், பள்ளிகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், கல்லூரிகள் சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும், இதர அரசுத்துறைகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் நடப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி இணை செயல்பாடுகளின் பொறுப்பாளர்களும் , அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இசைவனம், அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய வனம், சமுத்திரம் ஏரியில் பறவைகள் வனம், மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆழி வனம் ஆகவே சிறப்புக்குரியதாகும்.
மரக்கன்றுகள் நடுவதோடு அதனை முறையாக பராமரிப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இயற்கையை பராமரித்து மேம்படுத்த வேண்டும். 99 சதவீத மரங்கள் நல்ல உயிர்ப்புடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், டாக்டர் சிங்காரவேல், ரெட் கிராஸ் டாக்டர் வரதராஜன், பொறியாளர் முத்துக்குமார், மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சங்கரநாராயணன், தாசில்தார் சக்திவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
- தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் யோகம் பொது சுகாதார மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் 1,610 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்தமிழ்ச்செல்விபோஸ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயா, தொண்டு நிறுவன இயக்குநர் தமயந்தி முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.
இதில் வேம்பு உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த யோகேஷ்மணிராஜ், ஷியாம் பரணிதரன், வனச்சரக அதிகாரி பால்பாண்டியன் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 116-வது கட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி காங்கயம் சங்கரண்டாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி, டி.இ.ஓ., பக்தவச்சலம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் தனலட்சுமி, இளைய பட்டக்காரர்கள் எஸ்.கே.கணேஷ், நரேந்திரன், கனரா வங்கி மேலாளர் சதீஷ்குமார், கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தனர்.
சங்கரண்டாம்பாளையம் தென்கரை நாடு மும்முடி பட்டம் பட்டக்காரர் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாவுடையார் மற்றும்சிறுகிணர் கிராமபசுமை குழு மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 20,850 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
- மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் விவசாய துறையினரை அணுக வேண்டும்.
- மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
வேதாரண்யம் பகுதியில் தற்போது பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் விவசாய துறையினர அணுக வேண்டும் வேளாண்மை துறையினர் அழைப்புவிடுத்துள்ளனர்
விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசின் பசுமைக்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் மரக்கன்றுகளை இலவசமாக பெற கீழ்க்கண்ட ஆவணங்களோடு நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கணினி சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பேங்க் பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் வர வேண்டும் எனவும்மரக்கன்று வளர்ப்புக்கு பராமரிப்பு செலவுத்தொகையும் வழங்கப்படும்.
விவசாயிகள் தங்களிடம் உள்ளபராமரிப்பற்று கிடக்கும் திடல்கள், வயல் வரப்புகள், வீட்டைச்சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றை மரக்கன்றுகள் வளர்க்க பயன்படுத்தலாம். மரங்களை வளர்த்து வருங்கால நம் சந்ததியை காப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு சிவகிரி ராஜ் நியூ நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- மரக்கன்றுகளின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகிரி:
உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு சிவகிரி ராஜ் நியூ நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அஜித்குமார் ஆகியோர் மரக்கன்று களை நட்டனர். மேலும் மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். நிகழ்ச்சியில் வனப்பணியாளர்கள், பள்ளியின் முதல்வர் ராமர், துணை முதல்வர் ராஜம்மாள், ஆசிரி யர்கள், மாணவ - மாண விகள் கலந்து கொண்டனர்.
- கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர்
- 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லடம் :
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி கருப்பாத்தாள் ஆகியோர் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர். சாவிலும் இணைபிரியாத அந்த தம்பதியருக்கு, காரணம்பே ட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை ,திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். கோடாங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிசாமி,விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மகிழ்வனம் அமைப்பின் செயலர் சோமு என்ற பாலசுப்பிர மணியம், தாவரவியல் அறிஞர் மாணிக்கம், கூப்பிடு பிள்ளையார் கோயில் கமிட்டி தலைவர் சின்னசாமி, ஊராட்சி செயலர் கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
- திருப்பூர் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்க வேண்டும்.
திருப்பூர் :
தேசிய திருநங்கைகள் தினத்தையொட்டி திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் தேசிய திருநங்கைகள் தின விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. பின்னர் திருநங்கைகள் சார்பில்தயார் செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளை பொதுமக்களுக்கு வழங்கி யும் நாதஸ்வரம் வாசித்து ஊர்வலமாக வந்து 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.தொடர்ந்து நடந்த விழாவில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவி திவ்யா பேசியதாவது:- உலகமெங்கும் வாழும்அனைத்து திருநங்கைகளுக்கும் தேசிய திருநங்கைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் ஏற்பாடு செய்யும் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பதற்கு ஏதுவாக திருப்பூர் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் லட்சுமி, பொருளாளர் தர்ஷனா,துணைத் தலைவர் சித்ரா, துணைச் செயலாளர் தர்ஷினி ,செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகா, ரூபினி, துர்கா, மோனிகா, சௌந்தர்யா, பவானி,கௌரி உள்ளிட்ட நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது.
- மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் பேசினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுடன் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். இதேபோல் மற்ற பள்ளிகளிலும் இந்த மாணவ-மாணவிகளை போல் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
இதில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், பள்ளிச் செயலாளர் ஜீவலதா, முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.