என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதிமொழி"

    • உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.
    • விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடலோர காவல் குழுமம் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் குளச்சல் மரைன் காவல் நிலையம் சார்பில் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக இணைய தள விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.

    மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் மாணவிகளுக்கு சமூக இணைய தளத்தில் வரும் ஆபாச படங்களை ஷேர் செய்யக்கூடாது, அறிமுகமில்லாத பெண்களிடம் பழக கூடாது, குறிப்பாக காதல் வசப்படக்கூடாது. எவரேனும் காதல் கடிதம் தந்தால் அல்லது காதலிக்கிறேன் என மெசேஜ் அனுப்பினால் வீட்டில் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளியில் ஆசிரியர்களிடம் கூற வேண்டும்.தாய் தந்தையை தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது, படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் எதிர்க்காலத்தை பெற்றோர் அமைத்து தருவர். மாணவர்கள் கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கக்கூடாது.விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் கடன் வாங்கி உங்களை படிக்க வைக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகுவது, பெற்றோரை கொலை செய்வதற்கு சமம்.தினமும் நீங்கள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்.அதில் வரும் குற்றச்செய்திகளை தெரிந்து கொண்டு, நீங்கள் குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். ஸ்கூட்டி ஓட்டும்போது அதிக வேகத்தில் செல்லக்கூடாது.

    திருப்பம், வளைவுகளில் செல்லும்போது போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விபத்துக்களில் சிக்க கூடாது என அறிவுரை கூறினார். பின்னர் மாணவர்கள் அனைவரும் 'போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம்'என போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர் கெஜின், உடற்கல்வி ஆசிரியர் ஜூடின் மற்றும் மரைன் போலீசார் கலந்து கொண்டனர்.

    • நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகர்கோவில்:

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 26-ந் தேதி அன்று உள்ளாட்சி அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உறுதிமொழி எடுக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவக்குமார், செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, லூயிஸ், பரமேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    • நாடார் மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
    • தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.

    மதுரை

    நாடார் மகாஜன சங்கம், நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை மற்றும் நா.ம.ச. காமராஜ் தொழில்நுட்ப கல்லூரி பரிபாலன சபை ஆகிய சங்கங்களுக்கு செயற்குழு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மதுரை நாகமலை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் நடந்தது.

    இதில் நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டு மரங்களில் பல்வேறு வகை இருந்தாலும் அதில் பனைமரம் மட்டுமே மிகப்பெரிய புயல், மழையை யும் தாங்கி உறுதிப்பிடிப்பு டன் நிலைத்து நிற்கும் தன்மை உடையது. அதுபோலவே நாடார் மகாஜன சங்கமானது தனிச்சிறப்புடன், தரத்துடன் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடு கிறது என்றார்.

    நிகழ்ச்சிக்கு மதுரை வேளாண் உணவு வர்த்தக மைய தலைவர்

    மற்றும் மேலாண்மை இயக்குநர் ரத்தினவேலு, நீதிபதி வணங்காமுடி, சிவகாசி காளீஸ்வரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பி.செல்வராஜன், தூத்துக்குடி டைமண்ட் சீ புட்ஸ் நிர் வாக இயக்குநர் பால்பாண்டி, மதுரை

    கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நிறுவனர் தனுஷ்கரன் முன்னிலை வகித்தனர்.

    நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தலைவர் வி.எஸ்.பி.குருசாமி, பொரு ளாளர் ஏ.சி.சி.பாண்டியன், செயலாளர்(மேன்சன்கள்) மாரிமுத்து, செயலாளர் (அச்சகம்) கிப்ட்சன், செயலாளர் (பள்ளிகள்)ஐசக் முத்துராஜ், மண்டல செயலாளர்கள் சேகர் பாண்டியன், சுப்பிரம ணியன், கனகரத்தினம், ஈஸ்வரன், பிரபாகரன், முருகேசபாண்டியன் மற்றும் பலர் பேசினர்.

    இதில் நாடார் வெள்ளைச்சாமி கல்லூ ரியின் தலைவர் ஏ.எம்.எஸ். ஜி.அசோகன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் பொன்னு சாமி, செயலாளர் சுந்தர், பொருளாளர் நல்லதம்பி, இணைசெயலாளர் ஆனந்த குமார், காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி பரி பாலன சபையின் தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் வனராஜன், செயலாளர் சுரேந்திரகுமார், பொருளா ளர் வஞ்சிக்கோ, இணைச் செயலாளர் விவேகானந்தன் மற்றும் மாவட்ட, மாநக ராட்சி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்டிசம்பர் 10-ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழியான "இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனை வரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்பதை வாசிக்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, தனித்துனை ஆட்சியர் (சபாதி) சாந்தி, உட்பட அரசுத்துறை அலவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • தேவகோட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகில் ஓ.பி.எஸ்.அணி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தலைமை தாங்கினார்.

    திருச்சி-ராமேசுவரம் சாலையில் சங்கரபதி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்பு செயலா ளர் மருதுஅழகுராஜ் தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டனர்.

    திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.

    மாநில மாணவரணி செயலாளர் ஆசைத்தம்பி, நகர் செயலாளர்கள் ரவிக்குமார், பாலா, ஒன்றிய செயலாளர்கள் மருத்தாணி வினோத், தியாகராஜன், ராமசந்திரன், பாவாசி கருப்பையா, கண்ணங்குடி ஒன்றிய செயலாளர்கள் உலக்குடி பாலசுப்பிர மணியன், பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு போட்டி நடைபெற்றது.
    • நகராட்சி ஆணையர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் நம்ம ஊரு திருவிழாபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 8 கி.மீமாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆண் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் தொடங்கிய மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்

    வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பெண்கள் கான மாரத்தான் ஒட்ட பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்பு ஆண்களுக்கான 8 கி.மீ ஓட்டப்பந்தயத்தை டிஎஸ்பி முருகவேல் துவக்கி வைத்தார். ஒட்டபந்தயதில் 1500-க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் கலந்துகொண்டனர்

    நிகழ்ச்சியில்நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில்கோடியக்கரை வணச்சரகர் அயூப் கான் நகராட்சி பொறியாளர் முகமது இப்ரஹீம் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள்கலந்து கொண்டனர்வெற்றி பெற்ற வீரர்களுக்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி பரிசுகளை வழங்கினர்.

    • கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே வேலங்குடி ஊராட்சியில் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    குடியரசு தினத்தை யொட்டி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்திட வேண்டும்.

    இதன்மூலம் கிராம ங்களின் வளர்ச்சிக்கு தேவை யான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும். வேலங்குடி ஊராட்சியில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு மற்றும் இதர தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் பெண் குழந்தை காப்போம் ஆகிய உறுதிமொழிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் அனைவரும் எடுத்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றி யக்குழுத்தலைவர் புலிவலம் தேவா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திட்ட இயக்குநர் மகளிர்திட்டம் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொன்னியின்செல்வன், வேளாண்மை இணை இயக்குநர் ஆசீர் கனகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உண்மையுடன் பணியாற்றுவது எனது கடமையாகும்.
    • மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    தஞ்சாவூர்:

    மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அப்போது இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்ப டைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையு டனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மூன்னதாக மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இதேபோல் தொழுநோய் ஒழிப்பு குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
    • தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணை யர் மணிகண்ட பிரபு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    குமரி மாவட்ட கலெக் டர் பி.என். ஸ்ரீதரின் அறிவு ரையின்படி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அய்யப்பா மகளிர் கல்லூரியில் கொத்த டிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கிராமிய கலைஞர் பழனியாப்பிள்ளை குழுவி னர் கலைநிகழ்ச்சிகள் மூலம் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் வடசேரி பஸ் நிலையம், செண்பக ராமன்புதூர், ஆரல்வாய் மொழி அரசு பள்ளி மற்றும் தோவாளை பகுதி களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சி யில் தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரேசன், உதவி ஆய்வாளர்கள் மன்னன் பெருமாள், ஈவ்லின் சர்மி, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் கொத்தடிமை தொழி லாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப் பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலு மாக தடை செய்யப்பட் டுள்ளது. இதனை மீறி தொழிலாளர்களை கொத்த டிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

    எனவே, தொழிலாளர் களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • சாத்தான்குளம் நீதிமன்றங்களில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நீதிபதிகள் கோபால் அரசி,கலையரசி ரீனா ஆகியோர் உறுதிமொழி வாசித்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்றம் ஆகிய 2 நீதிமன்றங்களிலும் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால் அரசி குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா ஆகியோர் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தனர்.

    இதில் வக்கீல்கள் ஜோ ஜெகதீஷ், அமல்ராஜ், பஞ்சாப் சேகர், வேணுகோபால், ராமச்சந்திரன், கோபால், ஷீபா ஐரின், பிருந்தா, ராஜேஸ்வரி, செல்வமீனா, கவுசல்யா, குமரகுருபரன், ராஜன், சுபாஷ், சஷ்டி குமரன், செல்வ மகாராஜா, முத்துராஜ், ஈஸ்டர், கமல், குமரேசன், சுரேஷ், மைக்கேல் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் சத்தியபாமா, சுந்தரி, முத்துலட்சுமி, பாண்டியம்மா, அனிதா முத்துலட்சுமி, விஜய், வட்ட சட்ட பணிக்குழு மகேந்திரன், ஆறுமுகம், ஜெயராஜ், ஜேலட், சந்தனராஜ், கசமுத்து, ரஸ்டில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
    • அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.

    முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

    1 மற்றும் 2 வயதுடையோருக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுடையோருக்கு ஒரு மாத்திரையும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.

    இந்த மாத்திரைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி- கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் என்றார்.

    பின்னர், தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மாணவிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, வட்டார மருத்துவர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகள் ஆசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வனச்சரகத்தின் மூலம் ஆற்காட்டுதுறை மீனவர் கிராமத்தில், வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில், கடல் ஆமை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில்முனைவர் சிவகணேசன் கடலாமை முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர், நடேசன் ராஜா கடலோர காவல்துறை குழும போலீசார், ஆற்காட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள், முனைவர் அறிவு கிராம மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசியர்கள் மற்றும் வனத்துறையினர்கள் கலந்து கொண்டனர்.

    கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டார்.

    முடிவில் வனவர் ராமதாஸ் நன்றி கூறினர்.

    ×