என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போராட்டம்"
- கரைப்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- கிராம ஊராட்சியை இணைத்தால் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் உயர்த்தப்படும்.
பல்லடம்:
திருப்பூர் மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில், அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆறுமுத்தாம்பாளையம், கணபதிபாளையம், கரைப்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அறிவொளி நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி முன்புள்ள சாலையில் இன்று காலை 9 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம் கிராம ஊராட்சியை இணைத்தால் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் உயர்த்தப்படும். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 15- வது நிதிக்குழு மானிய திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை நம்பி ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
எனவே திருப்பூர் மாநகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாக அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வார காலமாக செவிலி யர்களை பொது தளத்திலும், தொலைபேசி உரையாடல்க ளிலும் செவிலியர்களின் தரத்தை குறைக்கும் வகையி லும், ஒட்டுமொத்த செவிலி யர்களை தரக்குறைவாகவும், செவிலியர்கள் சேவையை கொச்சைப்படுத்தும் விதமா கவும் பேசி வருவதாக புகார் எழுந்தது.
இந்த செயலில் கிராம சுகாதார செவிலியர்கள் சங் கத்தின் மாநில தலைவர் இந்திரா ஈடுபடுவதாக கூறி அவரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடை பெற்றது. ஆர்ப்பாட் டத்தை ராமநாதபுரம் மாவட்ட அரசு செவிலியர்கள் கூட்ட மைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
போராட்டத்தில் கிராம சுகாதார செவிலியர் இந் திரா மீது துறை ரீதியான நடவ டிக்கை மற்றும் சட்ட ரீதியான அவதூறு நடவ டிக்கை எடுக்க கோரி செவி லியர்கள் கண்டன முழக்கங் கள் எழுப்பினர். நடவ டிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணி புரியும் செவிலியர்கள் மற் றும் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் செவிலியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
- முறையாக சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு
- அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம்
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே அங்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். எனவே நோயாளிகளை பராமரிக்க ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதனிடையே ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 18 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் குன்னூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதனைகூட முறையாக வழங்காமல் காலதாமதம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இந்த நிலையில் குன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
- ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓசூர்:
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து கன்னட அமைப்பினர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அத்திப்பள்ளியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பின் சார்பில், இன்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநில தலைவர் பிரவீண் ஷெட்டி உத்தரவின் பேரில், அந்த அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடம், மற்றும் பானைகளை உடைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமான சூழ்நிலையும் நிலவியது. இதன் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் இரு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தொழில் நிறுவனங்களுக்கு 430 சதவீதம் உயர்த்திய நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.
- மல்டி இயர் டேரிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பாக திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், பல்லடம் கோவிந்தராஜூ ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சைமா, நிட்மா, டீமா, டெக்பா, சிம்கா, நிட்டிங், காம்பாக்டிங், பிரண்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட சார்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொழில் நிறுவனங்களுக்கு 430 சதவீதம் உயர்த்திய நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். 3பியில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வை தவிர்க்க கோரியும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரியும் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 25-ந் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் தொழில் அமைப்பின் சார்பில் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி துண்டுபிரசுரங்கள், பேனர்கள், விளம்பர பலகைகள் அமைத்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அனைத்து சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு வணிகர்கள், ஓட்டல் சங்க உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 2000 பவர்டேபிள் நிறுவனங்கள் பங்கேற்கும் என பவர்டேபிள் சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுதரக்கோரி போராட்டம் நடந்தது.
- அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிரை காப்பாற்ற தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தரக் கோரி தொடர் முழக்கப் போராட்டம் நடை பெறுகிறது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிம்சன், வீரராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மதியழகன் முன்னிலை வகித்தாார்.
போராட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளான காவிரியில் கர்நாடக வழங்க வேண்டிய சட்டரீ தியான தண்ணீரைஉடனடி யாக திறந்துவிட உச்ச நீதி மன்றம் அவசர வழக்காக எடுத்து உடனே உத்தரவிட வேண்டும், குருவைசாகுபடி யில் பாதிக்க ப்பட்டஅனை த்து விவசாயி களுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரியில் தமிழகத்துக்கு மாத வாரிய தண்ணீர் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக அரசு தர மறுத்தால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தண்ணீர் வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் பெருமாள் தொடங்கி வைத்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொதுச் செயலாளர் மாசிலா மணி, டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் அன்பழகன், காவிரி டெல்டா பாசனக்காரர்கள் முன்னேற்ற சங்கம் தலைவர் குரு கோபி கணேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், உள்ளிட்ட ஏராளமான அனைத்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
- பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார். ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா வரவேற்றார்.மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு செய லாளர் சதாம் ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம்-கீழக்கரை தொடர்வண்டி மேம்பா லத்தை உடனடியாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும். தி.மு.க. அரசு அடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி சிறையில் உள்ள அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். இதனை நிறைவேற்றா விட்டால் பா.ம.க. சிறுபான்மை பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பசுமை தாயத்தின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் கர்ண மகாராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாணவர் சங்கத் தலைவர் சந்தோஷ், மாணவர் சங்க அமைப்பாளர் கார்த்திக், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் கட்டிட பொறியாளர் சரீஃப், மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன்,மற்றும் திரளாக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார்.
- பா.ஜ.க. போராட்டம் நடைபெற்றது
- தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டமும், பிச்சை எடுத்து தி.மு.க. அரசுக்கு நிதி அனுப்பும் போரா ட்டமும் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடைபெற்றது.
போராட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வ ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் சுரேஷ் பரமசிவம் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசி னார்.
தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷமி ட்டனர். பின்னர் பட்டியல் அணி பாஜக நிர்வாகிகள் கையில் ஏந்தி பிச்சை எடு த்து திமுக அரசுக்கு நிதி அனுப்பி வைப்பதற்காக நிதியை திரட்டினர்.
இதில் பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சை முத்து, மாநில பொதுகுழு உறுப்பினர் அசோகன், பொது செயலாளர் முத்த மிழ் செல்வன், நகர தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட பொதுசெயலாளர் ஜெயபால் வரவேற்றார். முடிவில் ஓபிசி மாவட்ட பொதுசெயலாளர் உதயகுமார் நன்றி கூறினார்.
- சொத்துக்களை சகோதரர் அபகரித்து கொண்டதாக கூறி ரோட்டில் இருந்து எழ மறுத்தார்
- மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்த கிரி பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், தினசரி மார்க்கெட், அரசு பள்ளிகள் மற்றும் எல்.ஐ.சி அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் தாசில்தார் அலுவலகம் முன்பாக வந்திருந்தார்.
அப்போது அவர் திடீ ரென நடுரோட்டில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முதியவரிடம் விசாரித்தனர்.
அப்போது எனக்கு சொந்தமான சொத்துக்களை என் சகோ தரர் அபகரித்து கொண்டார். எனவே அவர் மீது போலீ சார் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ரோட்டில் இருந்து எழ மறுத்தார்.
கோத்தகிரி ரோட்டில் முதியவர் படுத்த கிடந்ததால் அந்த வழியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாக னங்கள் செல்ல முடிய வில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வேடிக்கை பார்ப்பதற்காக பொது மக்களும் குவிந்ததால், கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் ரகுமான்கான், எதுவாக இருப்பினும் பேசி தீர்த்து கொள்ளலாம். எழுந்து வாருங்கள் என்று கூறினார். அதற்கு அவர், என் தாத்தாவிற்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை எனது சகோதரன் ஏமாற்றி எடுத்துக் கொண்டார். அதை மீட்டு தரவேண்டும். இல்லையெனில் தரையில் முட்டி மோதிக் கொண்டு காயப்படுத்தி கொள்வேன். அல்லது வருவாய் வட் டாட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள் வேன் என்று மிரட்டினார். கலெக்டர் நேரடியாக வரவேண்டும் எனவும் கூறி, தலையை நிலத்தில் மோதிக் கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நீடித்தது. உடனே போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசாரின் விசார ணையில் அவர் கடை க்கம்பட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் என்ப தும், குடிபோதையில் நிலத் தில் படுத்து போராட்டம் நடத்தியதும், சொத்து அபகரிப்பு தொடர்பாக எந்த அதிகாரிகளிடமும் மனு அளிக்கவில்லை, நீதி மன்றத்தில் வழக்கும் போடவில்லை என்பதும் தெரியவந்தது. எனவே முதியவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
- வட்டாட்சியர்அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டது.
சீர்காழி:
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தை சேர்ந்த வட்டாட்சியரை, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
இதை கண்டித்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு வட்டத் தலைவர் ராஜீவ் காந்தி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் இளவரசன், மத்திய செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட துணை தலைவர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை யில் 39 அலுவலக பணியாளர்கள் வருகை பதிவேட்டில் கையொப்ப மிட்டு பணியை புறக்கணித்து வட்டாட்சியர்அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது கள்ளக்குறிச்சி மாவட்டம் வட்டாட்சியரை பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டி த்தும், அரசியல்வாதிகளுக்கு துணை போகும் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள், பணியா ளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டது.
- சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை உண்ணா விரத போராட்டம் நடக்கிறது .
- இதில் கட்சியினர், மக்கள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சேலம்:
நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தரக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை உண்ணா விரத போராட்டம் நடக்கிறது . இதில் கட்சியினர், மக்கள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வ கணபதி, ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவ படிப்பில் சேருவதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக நீட் எழுதுவதால், அனைத்து மாணவர்களும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆளுநர் பல மாதங்களாக நீட்விலக்கு சட்டமன்ற தீர்மானத்தை குடியரக தலைவருக்கு அனுப்பாமல் காலந்தாழ்த்தி, பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின் அனுப்பி வைத்தார்.
தற்போது அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் நிறை வேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் பெற்றிட வேண்டி நடக்கும் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க கேட்டுக்கொள்கிறோம்.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நாளை( 20-ந் தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள உண்ணா விரத போராட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணியை சார்ந்தோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- புதுக்கோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
- நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.
புதுக்கோட்டை,
நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியையும் இணைக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கமும் இணைந்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதற்காக புதுக்கோட்டை சிறைச்சாலை ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள் கலெக்டர்அலுவலகம் வந்தடைந்தனர். இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோ கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் புதுக்கோட்டை நகரத் தலைவர்நிரஞ்சனாதேவி தலைமை வகித்தார்.
மாதர்சங்க மாநில செயலாளர்பொன்னுத்தாய், விவசாயத் தொழிலாளர்சங்க மாநில செயலாளர்சங்கர்ஆகியோர்சிற ப்புரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர்சங்க மாவட்டச் செயலாளர்சலோமி, மாநிலக்குழு உறுப்பினர் சண்முகம், மாதர்சங்க மாவட்டச் செயலாளர்சுசிலா, தலைவர் பாண்டிசெல்வி, விதொச மாவட்ட துணைச் செயலாளர்சித்திரைவேல் மற்றும் மாதர்சங்க நிர்வாகிகள் காயத்ரி, பரமேஸ்வரி, சித்ரா, புவனேஸ்வரி, மகேஸ்வரி உள்ளிட்டோர்பேசினர். மாதர்சங்க நகர்செயலாளர் முத்துமாரி நன்றி கூறினார். போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேலுவிடம் நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்