search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்
    X

    சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

    சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்

    • ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை உடன் அமல் படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை மத்தியஅரசு வழங்கிய நாளிலிருந்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடன் வழங்க வேண்டும், ஓய்வூதியர் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லாசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்கர் விருதாளர் பாண்டுரங்கன், மாவட்ட நிர்வாகிகள் மகாராஜன், வை.சிற்றரசு, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனி, வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். ஜெயபாலு நன்றி கூறினார்.

    Next Story
    ×