என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆலயம்"
- தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.
- திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.
தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.
இத்தலத்தில் மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாம்புப் புற்றுக்கு பக்தர்கள்
பால், முட்டை ஆகியவற்றை வைத்து வணங்குகின்றனர்.
12 அடிக்குமேல் நீளம் உள்ள பாம்பு ஒன்று 6-4-1988-ல் இங்கு சட்டை உரித்து விட்டுச் சென்றிருக்கிறது.
அதை பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழி பட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
சங்கரன்கோவில்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.
நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர்.
இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரைவில் நடைபெறும்.
- காஸ்யபருக்கும் கத்ரு என்பவருக்கும் பிறந்தவர் நாகர்.
- தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.
ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாகபஞ்சமி விரதத்தை தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் விரதத்தை பின்பற்ற வேண்டும்.
நாக பஞ்சமி விரதம் ஏற்பட்டதற்கான புராண நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:
காஸ்யபருக்கும் கத்ரு என்பவருக்கும் பிறந்தவர் நாகர்.
தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.
இதனால் கோபம் கொண்ட தாயர் கர்து, தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து இறந்து போகும்படி மகனுக்கு சாபம் கொடுத்தாள்.
ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் எப்படி நிறைவேறியது என்பதை பார்க்கலாம்.
பரிசட்த்து மன்னன் பாம்புகளின் தலைவனாக விளங்கிய "தட்சகன்" என்ற கொடிய நாகத்தால் கடிக்கப்பட்டு இறந்தான்.
தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இணத்தையே அழிக்க உறுதி பூண்டான் பரிசட்த்தின் மகன் ஜனமேஜயன்.
அதற்காக "சர்ப்பயக்ஞம்" என்ற வேள்வியை நடத்தினான்.
பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன.
அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்க்கு சாப நிவர்த்தி கொடுத்தார்.
அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் ஒரு பஞ்சமி தினமாகும்.
எனவே இந்த நாக பஞ்சமி விரதம் ஆனி மாத சுக்லபஷ பஞ்சமியில் கொண்டாடும் வழக்கம் உள்ளது.
இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும்.
புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
விரதமுறை
நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள்.
பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள்.
பால், முட்டை முதலியவற்றை நிவேதன பொருளாக வைத்து வழிபடுவார்கள்.
மூன்று அல்லது ஒன்பது முறை கோவிலை சுற்றி வலம் வருவார்கள்.
- நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள்.
- மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.
நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள்.
இந்த நாகராஜ விரத பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த சர்ப்பதோஷங்கள் விலகி,
சத்புத்திர சந்ததிகள் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று கூறுகிறது சர்ப்ப தோஷ பரிகார நூல்.
இந்த விரதத்தையும் பூஜையையும் பெண்களே செய்ய வேண்டும்.
ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டி அன்று செய்ய வேண்டும். இதற்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, செம்பிலோ, நாகவடிவம்
செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சுக்ல பஷ சஷ்டியன்று அதிகாலையில் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விநாயகரை வழிபட வேண்டும்.
பூஜை அறையிலோ கூடத்திலோ கலசம் அமைத்து அலங்கரித்து, நாகவடிவத்தை வைத்து சந்தனம் மற்றும் கும்குமம்
திலகமிட்டு பசும்பால், தேன், கல்கண்டு, கனி வகைகள், வைத்து நிவேதினம், செய்து தூபதீபம் காட்டுப் பிராத்தனை செய்ய வேண்டும்.
பிரார்த்தனை முடிந்ததும் பசும் பாலில் தேனைக் கலந்து பிறருக்கு பிரசாகமாக தந்துவிட்டு, விரதமிருப்பவர்களும் சாப்பிடலாம்.
காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப் பொருட்களை சாப்பிட்டு விட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்கவேண்டும்.
மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.
அதன்பிறகு இரவு பலகாரம் சாப்பிடலாம். நாகராஜ விரதமிருப்பவர்கள் முறைப்படி இதைக் கடைப்பிடித்தால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.
அதற்கு அடையாளமாக நேரிலோ கனவிலோ சர்ப்பம் படம் விரித்து ஆடுவதைக் காணலாம் என சர்ப்ப தோஷபரிகார நூல் கூறுகிறது.
- கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.
- பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.
கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.
அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாக உருவத்தை சிலையாக செய்து
தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார்.
ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது.
அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சரும வியாதி குணமாகவில்லை.
நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளின் அருகில் இருந்த தீபத்தின் ஒளியில் இருந்து வரும் கரும்புகை,
சிலைகள் மேல் பதிந்ததால் சிலைகள் கருமையாக காட்சி கொடுத்தது.
அதை சுத்தம் செய்வதற்காக நம்பூதிரி, தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார்.
அந்த கருப்பு மை நம்பூதிரியின் கைகளில் பட்டு அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாக பரவியது.
தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார்.
அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்த தோல் நோய் நல்லவிதமாக குணம் அடைந்தது.
இந்த விஷயம் தெரிந்து பாண்டிய நாட்டின் மன்னர், "எனக்கு பல வருடங்களாக பாடாய்படுத்தி வரும்
இந்த சருமவியாதியை தீர்க்க, கேரளாவில் உள்ள அந்த நம்பூதிரியை அழைத்து வாருங்கள்" என்றார்.
மதுரை வந்த நம்பூதிரியும் அரசரின் சருமவியாதியை தீர்க்க, தான் வழிபடும் நாகர் சிலைகளின் மீது
பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.
மன்னரின் உடலில் இதுநாள் வரை இருந்த சருமவியாதி நீங்கியது.
இதை கண்டு அரசர் மகிழ்ந்து அந்த நம்பூதிரிக்கு பொன்னும் பொருட்களும் அள்ளி கொடுத்து அத்துடன்
பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை துணை அனுப்பி நம்பூதிரியை சகல மரியாதையுடன்
கேரள தேசத்திற்கு திரும்ப அனுப்பி வைத்தார்.
- பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.
- சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆச்சாரத்துடன் செய்ய வேண்டும்.
பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.
சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆச்சாரத்துடன் செய்ய வேண்டும்.
சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும்.
பிக்னிக் செல்லது போல் செல்லாமல், பக்தி யாத்திரையாக மேற்கொள்ள வேண்டும்.
தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
* காளஹஸ்தி
திருப்பதிக்கு மிக அருகில் உள்ளது. சென்னை-திருப்பதி சாலையில் உள்ளது.
ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் காளஹஸ்தி செல்லலாம்.
* திருநாகேஸ்வரம்
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு நாகருக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.
* திருமணஞ்சேரி
இது கும்பகோணத்திலிருந்து குத்தாலம் சென்று, அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.
* திருப்பாம்புரம்
கும்பகோணத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம் - காரைக்கால் சாலையில் உள்ளது.
* வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்
திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் மங்கலம் கிராமத்துக்கு அருகில் உள்ளது. அங்குள்ள புற்றுமண் சர்வரோக நிவாரணியாகும்.
* கீழ்பெரும்பள்ளம்
கேது சேஷத்திரம் - இங்கும் பரிகாரம் செய்து வைக்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.
* மன்னார்சாலா - கேரளா
எர்ணாகுளம் அடுத்த ஆலப்புழையிலிருந்து ஒரு மணி நேரம் பயணத்தில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் ஹரிபாடு என்னுமிடத்தில், 5 கி.மீ தொலைவில் மன்னார்சாலா உள்ளது.
* பாம்பு மெய்காட்டு அம்பலம்
திருச்சூரிலிருந்து மாலா என்னும் ஊரில் உள்ளது.
- பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.
- தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன்.
கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது நாக தோஷத்தினால் ஏற்படுவது என்று இன்றும் கிராம மக்கள் கருதுகிறார்கள்.
ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம்.
ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள்காமாலை நோயுடன் பிறக்கின்றன. இதற்கும் கிரகண பாதிப்புதான் காரணம்.
லக்னத்தில் ராகு இருந்து சந்திரனுடன் கேது சேர்ந்தால் குழந்தை நீலமாகப் பிறக்கும்.
ராகு - கேது சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் அதனை சர்ப தோஷம் என்று கூறுவார்கள்.
லக்னம், லக்னத்தில் இருந்து முதல் இரண்டு இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, லக்னாதிபதியை பாவ கிரகங்கள் பார்த்தாலோ பாலாதிர்ஷ்ட தோஷம் என்று கூறுவர்.
பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.
நாக தோஷம் வலுவாக இருக்கும் பிள்ளைகளுக்கு பாம்பு போலவே மச்சம் இருக்கும்.
தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன்.
அதற்கேற்ற பலன்களை அது கொடுக்கும்.
நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று
கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
- ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.
- மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.
ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும்.
சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும்.
ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.
புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.
இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியை செய்து கொள்ள நன்மை உண்டாகும்.
மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.
மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.
- கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.
- ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
கால சர்ப்ப தோஷம் மற்ற தோஷங்களைப் போலவே ஜாதகத்தின் லக்கினம், பூர்வ புண்ணியம்
ஜெனன காலத்தின் மற்றைய கிரக நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, தீய பலன்களை விளைவிக்கும்.
ஆதலால், கால சர்ப்ப தோஷம் உள்பட அனைத்து தோஷங்களையும், அவற்றின் தன்மை, அளவு, ஏற்படும் காலம்
இவற்றைத் தக்க ஜோதிடரைக் கொண்டு ஆராய்ந்து, அறிந்து கொள்ளாமல் கலங்க வேண்டிய அவசியமில்லை.
பாதிப்பின் கடுமையைத் தக்க பரிகாரத்தினால் குறைக்க முடியும்.
ஆயினும் அந்தப் பரிகாரத்தை, சாந்தியை அதிகப் பொருட் செலவில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை.
சாதாரணமாக, சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம்,
ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும்.
ஆனால் கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.
இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில்,
சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த
புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் பரிகார சேஷ்த்திரங்களில் ஒன்றாகும்.
சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால்
பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும்
கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.
"ஆனந்த ப்ரதம்ம ரூபம் திரேதாயோம் பலபத்ரச்ச கலியுகே கசதி பவிஷ்யதி" - ஸ்ரீவிஷ்ணுபுராண ஸ்லோகம்.
ஸ்ரீஆதிசேஷனே, ஸ்ரீராமனுஜராக அவதரித்தது உலகறிந்த உண்மையாகும்.
ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் கால சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும்
ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால்
அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும். (ஆதிசேஷனுக்கு அனந்த சர்ப்ப என்ற பெயர் உண்டு).
இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, கால சர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.
- கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம்.
- பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும்.
கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம்.
அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை
நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும்.
கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.
சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம்.
தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.
- வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.
- கேது ஞானம், மோட்சம் தருபவர்.
ராகுவின் உடல் பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது.
கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும்.
கேது ஞானம், மோட்சம் தருபவர்.
ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு,
வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.
கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு(கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி,
பல வண்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும்.
வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.
- ராகு கால பௌர்ணமி பூஜை பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
- ராகு கால ஏகாதசி பூஜை பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
கிரக சர்ப்ப சாந்தி
பாம்பினை அடிப்பதால் வரும் தோசம் மற்றும் முன்னோர்களினால் வந்த நாக தோசம் நீங்க செம்பு அல்லது
வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.
பிறகு அதை வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் வைத்து ஓடுகின்ற தண்ணீரில் போட வேண்டும்.
அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
1. ராகு கால பௌர்ணமி பூஜை பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
2. ராகு கால கிருத்திகை பூஜை புகழ் தரும்.
3. ராகு கால சஷ்டி பூஜை புத்திரப்பேறு கிடைக்கும்.
4. ராகு கால ஏகாதசி பூஜை பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
5. ராகு கால சதுர்த்தி பூஜை துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து
தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
- இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பை சூடியிருந்தனர்.
- அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு.
பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர்.
இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர்.
இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பை சூடியிருந்தனர்.
கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர்.
இதே போன்று நாகலோகம் என்ற ஒன்று இருந்ததாகவும், அங்கு நாகங்களின் தலைவன் நாகராஜன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கருவுற்று, மழைநீரால் நனைந்தும், இடருற்ற தவளைக்கு, படமெடுத்த நல்ல பாம்பு குடைபிடித்த புனித இடம் சிருங்கேரி.
அந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அங்கே சாரதா பீடத்தை நிறுவினார்.
அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு.
இதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டானது.
இவ்வாறு நாக வழிபாடு பழமை வாய்ந்த வழிபாடாகத் திகழ்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்