என் மலர்
நீங்கள் தேடியது "பணம் பறிப்பு"
- மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் மீன் வியாபாரி லட்சுமி.
- நேற்று லட்சுமி தனது மகளுடன் கடையில் இருந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. மீன் வியாபாரி. இவர் பட்டரை அரசு பள்ளி எதிரே மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று லட்சுமி தனது மகளுடன் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தேவன், பாலாஜி, வெங்கடேசன், வரதராஜன், கவுரிசங்கர் ஆகிய 5 பேரும் லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தி பணம் கேட்டனர்.
- வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கோபி என்ற யூசுப் (வயது 33). வியாபாரி. சம்பவத்தன்று இவர் செந்தமிழ் நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே பாக்கெட்டில் இருந்து ரூ.2,500 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து கோபி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
- மகாலிங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தஞ்சாவூர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.
- உங்களை சோதனையிட வேண்டும் என்று கூறிய அந்த நபர், சோதனையிடுவது போல நடித்து மகாலிங்கம் சட்டை பையில் கையை விட்டு அதிலிருந்த ரூ. 2000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
திருச்சி,
திருச்சி திருவெறும்பூர் ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது68). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தஞ்சாவூர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அருகாமையில் வந்த ஒரு நபர், தான் ஒரு போலீஸ்காரர் என கூறினார். பின்னர் அவரிடம் சில கேள்விகளை கேட்டார். மகாலிங்கமும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அப்போது உன் மீது சந்தேகமாக உள்ளது . உன்னை சோதனையிட வேண்டும் என்று கூறிய அந்த நபர், சோதனையிடுவது போல நடித்து மகாலிங்கம் சட்டை பையில் கையை விட்டு அதிலிருந்த ரூ. 2000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த துணிகர வழிபறி செயலில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம் கிள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சாமுன் (வயது52) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
கோவை,
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). தனியார் வங்கி ஊழியர்.
இவர் சம்பவத்தன்று குறிச்சி எம்.எம்.பி நகரில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்க நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் வாலிபர்கள் 3 பேரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.700 பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து மணிகண்டன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பணம் மற்றும் வெள்ளியை பறித்தது கோவை போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த ஷாரூக்கான்(24), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த ரியாஸ்கான்(28) மற்றும் போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்த காஜா மொய்தீன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், ஷாரூக்கான் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 9 வழக்குகளும், காஜா மொய்தீன் மீது 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அடையாளம் தெரியாத நபர்கள் காதல் வலை வீசினால் நம்பி ஏமாற வேண்டாம்.
- பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள கூடுரை சேர்ந்தவர் சேகர் (வயது 24). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்களுக்கு வலைவீசி பணம் பறிக்க திட்டமிட்டார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேகரை இன்ஸ்டாகிராமில் நண்பராக ஏற்றுக்கொண்டார். இருவரும் அடிக்கடி அதில் தகவல்களை பரிமாறத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் சேகர் இளம்பெண்ணை காதலிக்குமாறு கூறியுள்ளார். அதனை இளம்பெண் ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரும் காதல் மொழிகளை பேச ஆரம்பித்தனர்.
அப்போது இளம்பெண்ணின் போட்டோ மற்றும் வீடியோக்களை சேகர் கேட்டு வாங்கினார். அதனை தனது இணையதளத்தில் பதிவு செய்து கொண்டார்.
சேகர் திட்டமிட்டது போல தனது வேலையை காட்ட ஆரம்பித்தார். இளம்பெண்ணிடம் நான் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் வீடியோ மற்றும் செல்போன் உரையாடல்களை ஆன்லைனில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன இளம்பெண் சேகருக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்டாகிராம் முகவரி மூலம் சேகரை போலீசார் கைது செய்தனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் காதல் வலை வீசினால் நம்பி ஏமாற வேண்டாம். பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர்.
- ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதி மெயின் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் பேச்சுக் கொடுத்த அவர்கள், அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், சம்பவம் குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தார்.
அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவரிடம் 2 பெண்கள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரஷிதாவின் ஆசைவார்த்தையில் மயங்கிய முதியவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிதா வீட்டிற்கு சென்றார்.
- முதியவரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைமாறிய தகவலை அவரது உறவினர்கள் அறிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர், குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் நிஷாத். நிஷாத்தின் மனைவி ரஷிதா (வயது 28). இருவரும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன்மூலம் இருவருக்கும் பலரது தொடர்பு கிடைத்தது.
இதில் பணம் படைத்த முதியவர்கள் யார்-யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு கொண்டார். இதில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அந்த முதியவரை தன் வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் ஆசைவார்த்தை கூறினார்.
ரஷிதாவின் ஆசைவார்த்தையில் மயங்கிய முதியவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிதா வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதனை ரஷிதாவின் கணவர் நிஷாத் செல்போனில் படம் எடுத்தார்.
அதன்பின்பு கணவன்-மனைவி இருவரும் முதியவரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் ரஷிதாவுடன் உல்லாசமாக இருக்கும் படம் இருப்பதாகவும், அதனை சமூகவலைதளத்தில் பதிவிடாமல் இருக்க பணம் தரவேண்டும் எனவும் மிரட்டினர்.
இதனை கேட்டு மிரண்டு போன முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரஷிதா மற்றும் அவரது கணவர் நிஷாத் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பினார்.
இப்படி ரூ.27 லட்சம் வரை இருவரும் பணம் பறித்தனர். அதன்பின்பும் அவர்களின் மிரட்டல் தொடர்ந்தது. இதனால் முதியவர் மிகவும் மன உளச்சலுக்கு ஆளானார்.
இதற்கிடையே முதியவரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைமாறிய தகவலை அவரது உறவினர்கள் அறிந்தனர். அவர்கள் இதுபற்றி முதியவரிடம் கேட்டபோது அவர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கூறி அழுதார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மலப்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமறைவாக இருந்த நிஷாத்-ரஷிதா இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இதுபோல வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பணம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம்அ டுத்த ஹரி ஹரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். (வயது28). இவர் நேற்று முன்தினம் அப்துல்லாபுரம் கிராமம் மின்வாரியம் அருகே எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் திடீரென பிளேடை காட்டி மிரட்டி எம்ஜிஆர் சட்டை பையில் இருந்த 500 ரூபாய் எடுத்து ஓடினார்.
எம்ஜிஆர் கூச்சல் போடவே அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்து தூசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்ட வாலிபர் காஞ்சிபுரம் மேற்கு பகுதி பல்லவன் தெருவை சேர்ந்த தாமோதரன் 19 என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரிடம் இருந்த 500 ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து
தாமோதரனை கைது செய்தனர்.
- ராஜா புலியகுளத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சார்லசை கைது செய்தனர்.
கோவை:
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் புலியகுளத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று ராஜா வேலை செய்து கொண்டு இருந்த போது புலியகுளம் அந்தோணியார் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் (வயது 26) என்பவர் அங்கு வந்தார். அவர் பீர் பாட்டிலை உடைத்து ராஜாவின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.900 ஆயிரம் பணத்தை பறித்து சென்றார். இது குறித்து அவர் ராமநாதபுரம போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சார்லசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மேலும் ஒருவர் தலைமறைவு
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 24).
இவர் கருங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள வேன் ஸ்டாண்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அஸ்வின் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது போலீஸ் வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அஸ்வினை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றது.
இந்த கும்பல் மீது அஸ்வினுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அஸ்வின் போலீஸ் வாகனத்தையும் அதிலிருந்த கும்பலையும் செல்போனில் படம்பிடித்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் தப்பி சென்று விட்டது. நடந்த சம்பவம் குறித்து அஸ்வின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அஸ்வின் செல்போனில் பதிவு செய்திருந்த அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அஸ்வினிடம் பணம் பறித்த கும்பல் பயன்படுத்தியது குலசேகரம் போலீஸ் நிலைய வாகனம் என்பது தெரிய வந்தது. குலசேகரம் போலீஸ் நிலையத்தில் உள்ள வாகனத்தை பழுது நீக்குவதற்காக ஒர்க் ஷாப் ஒன்றில் விட்டு இருந்தனர்.
வேலை முடிந்த பிறகு அந்த வாகனத்தை அங்கு நிறுத்தி இருந்தனர். அந்த வாகனத்தை சிலர் எடுத்து செல்வது போன்ற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் போலீஸ் வாகனத்தை எடுத்துச் சென்றது காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்த போஸ்கோ டைசிங் (38), ரூபன் (38), விஷ்ணு (27), கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் (45)என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போஸ்கோ டைசிங், ரூபன், விஷ்ணு ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனத்தை அந்த பகுதியில் இருந்து எடுத்து சென்று கருங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றதாகவும் திரும்பி வரும் வழியில் அஸ்வினிடம் பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள ஹிட்லரை தேடி வருகி றார்கள். போலீஸ் வாகனத்தில் சென்று வாலிபரி டம் பணம் பறித்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- வேலூரில் மர்ம கும்பல் துணிகரம்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர்.அவர்கள் வேலூர் மாநகர பகுதியில் உள்ள தங்கும் விடுதி லாட்ஜிகளில் தங்கி உள்ளனர்.
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முகமது ரசூல் (வயது 34) என்பவர் இன்று காலை தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதால் லாட்ஜில் அறை எடுக்க முடிவு செய்தார்.
இதற்காக ஆற்காடு ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்தார். அவரை ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் லாட்ஜில் தங்கும் இடவசதி உள்ளது. எங்கள் ஆட்டோவில் வாருங்கள் என கூறியுள்ளனர். அதனை நம்பி முகமது ரசூல் அந்த ஆட்டோவில் ஏறினார்.
ஆட்டோவில் அவரை ஏற்றிக்கொண்டு ஆற்காடு ரோட்டில்வேகமாக வந்தனர். காகிதப்பட்டறை டாஸ்மாக் கடை அருகே வந்ததும் அதன் அருகில் உள்ள ஒரு தெருவில் ஆட்டோ நுழைந்தது. அங்கு வைத்து ஆட்டோவில் வந்த நபர்கள் முகமது ரசூலை சரமாரியாக தாக்கினர். அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயத்துடன் பணத்தை இழந்த முகமது ரசூல் அங்கு நின்று கொண்டு என்ன செய்வது என அறியாமல் தவித்தார். அவருக்கு பொதுமக்கள் உதவி செய்தனர். வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் போவதாக கூறிவிட்டு அவர் சென்றார்.
வேலூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் ஒருவரை ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர்.
இந்த நிலையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை ஆட்டோவில் அழைத்து வந்து பணம் பறித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிக்கு வரும் வெளி மாநிலத்தவர்களை தினமும் காலையில் ஆற்காடு ரோட்டில் மடக்கி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கீழே விழுந்ததில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- 34 வயது வாலிபர் டி.எஸ்.பி. 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
கோவை,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 34 வயது வாலிபர்.
இவர் டி.எஸ்.பி. 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு 9.45 மணிக்கு போலீஸ்காரர் கோத்தகிரியில் இருந்து ேமட்டுப்பாளையத்திற்கு வந்தார். பின்னர் தான் புக் ெசய்திருந்த பஸ் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்றார்.
அப்போது அவர் புக் செய்த பஸ் 9.30 மணிக்கு சென்று விட்டது. பஸ் இல்லாததால் இதுகுறித்து போலீஸ்காரர் அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.
அதற்கு நீங்கள் புக் செய்த பஸ் 9.30 மணிக்கு புறப்படும். ஆனால் நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள் என தெரிவித்தனர்.
அப்போது போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஊழியர்கள் கூறியதை கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அங்கிருந்த வர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழியாக ரோந்து சென்ற மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து போலீஸ்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பஸ் கோவை சென்றிருக்கும். நீங்கள் கோவை சென்று ஏறி செல்லுங்கள். இல்லையென்றால் விடுதியில் தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் என கூறி விட்டு சென்றனர்.
ஆனால் போலீஸ்காரர் கோவைக்கும் செல்லாமல் விடுதிக்கும் செல்லாமல், மேட்டுப்பாளையம் பகுதியில் குடிபோதையில் சாலையில் சுற்றி திரிந்துள்ளார்.
இரவு முழுவதும் அங்கேயே சுற்றி திரிந்ததாக தெரிகிறது. நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் ேபாலீஸ்காரர் அருகில் வந்து அவர் போதையில் இருப்பதை பயன்படுத்தி, போலீஸ்காரர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து விட்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் கீழே விழுந்ததில் போலீஸ்காரருக்கு கை, கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வழியாக வந்த போலீசார், அவரை மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ்காரர் போதை யில் இருந்ததால் எவ்வளவு பணத்தை பறிகொடுத்தார் என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.