என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டர் அறிவுரை"
- புளியங்குடி கிராமத்தில் ராமநாதபுரம் கலெக்டர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
- மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடிதண்ணீரை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது அந்தப்பகு தியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சீராக கிடைக் கப்பெறுகிறதா என கலெக் டர் கேட்டறிந்தார்.
அப்போது அவர் தெரி வித்ததாவது:-
தமிழக அரசின் மூலம் நலத்திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பாக மகளிர் பொருளாதார ரீதியாக பயன் பெறும் வகையில் மானி யத்துடன் கடனுதவி கள் வழங்கப்பட்டு சுயதொழில் புரிந்திடும் வகையில் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் மழைக்காலம் தொடங்கியதையொட்டி, கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவை யான பயிர் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் போதியளவு விதைகள், உரங்கள் விவ சாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். வேளாண்மைத்து றையின் மூலம் தேவையான உபகரணங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி களப்ப ணியில் வேளாண் உதவி திட்ட அலுவலர்கள் ஈடு பட்டு வருவார்கள். விவசா யிகள் தக்க ஆலோசனை களை பெற்று விவசாயப்ப ணிகளை மேற் கொள்ள வேண்டும். மேலும் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடி தண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்து வர்கள் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும். அதே போல் மருத்துவக்குழு அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்றின்றி உடல் ஆரோக் கியத்துடன் இருந்திட வேண் டும் என்றார்.
முன்னதாக புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கல்வித்திறன் குறித்து ஆய்வு செய்தவுடன் காலை உணவு மற்றும் மதிய உணவு குழந் தைகளுக்கு வழங்கப்பட்டு வருவதன் விவரம் குறித்து பணியாளர்களிடம் கேட்ட றிந்தவுடன், மழைக்காலத்தை கருத்தில் கொண்டு குழந்தை களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந் தால் அரசு மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து தேவை யான சிகிச்சை வழங்கி உதவிட வேண்டுமாறு அறி வுறுத்தினார்.
இதில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் சடையாண்டி, முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, அன்பு கண்ணன், புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ெந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் விருதுநகர் கலெக்டர் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் செந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில், மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
போதை பழக்கம் நண்பர்கள் மூலமும், சூழ்நி லையின் காரணமாகவும் உருவாகிறது. சரியான விழிப்புணர்வு இருந்தி ருந்தால் போதைக்கு அடிமையாவதை தவிர்க்கலாம். மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தும் மற்ற மாணவர்களிடமிருந்து வரும் பழக்கத்தை நிராகரிக்கும் போது எதிர்வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சாலை விபத்தில் ஓர் ஆண்டில் சுமார் 15,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நமது மாவட்டத்தில் சுமார் 500 பேர் உயிரிழக்கின்றனர். அதுபோக கை, கால் இழப்பு மற்றும் பெருங்காயங்கள் ஏற்பட்டு பாதிப்ப டைவோரும் உள்ளனர். பெரும்பாலும் இந்த விபத்துக்கள் மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவதால் ஏற்படுகிறது.
போதையால் ஒரு நொடியில் ஏற்படக்கூடிய இன்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாழாகிவிடும். படிப்பு, வேலை உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை கட்டுப்ப டுத்துவதற்கு போதைப் பொருள் தீர்வு அல்ல.
மாணவர்கள் தங்கள் இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி காலங்களில் விளை யாட்டாக ஆரம்பிக்கும் போதை பழக்க வழக்கம் எதிர்கால வாழ்க்கையை அழித்து விடும். அவற்றை தவிர்க்க நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
- குடும்ப சூழலை கருத்தில் கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.
- வீரராகவன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் அரசு போட்டி தேர்வாளர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கி யது. இதில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணியிடங்க ளுக்கான அறிவிப்புகள் அவ்வப்போது வரப்பெறு கின்றன. தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தினந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கையைச் சேர்ந்த தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், சிவகங்கையிலும் படிப்பு வட்டத்தில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
முன்னதாக காரைக்குடி பகுதியைச் சுற்றியுள்ள தேர்வாளர்களும் பயன்பெறும் வகையில் இது போன்ற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் தேர்வா ளர்களும் பயன்பெற்றுள்ள னர்.
தேர்விற்கு தேவை யானதை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். குறிப்பாக தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படிக்க வேண்டும். நல்லமுறையில் பயின்று தாங்கள் பயின்றதை திருப்புதல் செய்தலும் மிகவும் அவசியம் ஆகும். நாம் படிப்பதில் புரிதல் இருக்க வேண்டும்.
அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளை முறையாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த முறையில் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று தங்களது வாழ்வில் சிறந்து விளங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகன ச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் வானதி, மாவட்ட கலெக்டன் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிடைத்த வேலையை பயன்படுத்தி விருப்பமான வேலைக்கு முயற்சி செய்து சேர வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.
- எதிர்பார்க்கும் வேலைக்கு முயற்சி செய்து பயன்பெற வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சி நடை பெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார்.முகாமில் மொத்தம் 2523 மாணவர்கள் பங்கேற்ற னர். இதில் தேர்வு செய்யப் பட்ட 309 பேருக்கு கலெக்டர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் முதல் வேலைவாய்ப்பு முகாம் நடந்துள்ளது. 2-வது முகாம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. முகாமில் முன்னணி தனி யார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய வருகை தருகிறார்கள். இதுபோன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நம்மை தேடி வரும் நிறு வனங்களுக்கு சென்று நம்முடைய கல்வித் தகுதிக் கேற்ப வேலைவாய்ப்பு தேர்வு செய்திட வேண்டும். சில நேரங்களில் நமது கல்வித் தகுதிக்கு இணையாக வேலை வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், முதலில் கிடைக்கும் வேலையை பயன்படுத்த வேண்டும். காரணம் அதில் ஏராளமான அனுபவங்கள் கிடைக்கும்.
நாம் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. கிடைக்கும் வேலையை பயன்படுத்தி கொண்டு பின்னர் எதிர்பார்க்கும் வேலைக்கு முயற்சி செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்து கொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறும் வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும் பெறலாம்.
- பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொம்மஅள்ளி ஊராட்சியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார்.
இக்கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது தெரிவித்த தாவது:-
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுகின்றது.
இந்த பொம்மஅள்ளி ஊராட்சியில் நடைபெறு கின்ற இக்கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தருமபுரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.
அத்தகைய திட்டங்களை கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப் போடு செயல்படுத்தி வரு கின்றது.
கிராமங்களின் வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் கிரா மங்களின் வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை பொதுமக்களும் முழுமை யாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்து கொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறும் வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும் பெறலாம்.
இந்த ஊராட்சியும் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கை களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் படிப்படியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. நீர் சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.
பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இந்த கிராம சபைக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் நேரி டையாகவும், மனுக்களின் வாயிலாகவும் தெரி வித்துள்ளீர்கள்.
அதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றக்கூடிய அனைத்து திட்டங்களும் படிப்பாயாக நிறை வேற்றப்படும்.
மேலும். தகுதியான நபர்களுக்கு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தீபா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பழனியம்மாள், பொம்மஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் தீர்த்தகிரி உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஒழுக்கத்துடன் கல்வி கற்று மாணவர்கள் உயர் பதவிகளை அடைய வேண்டும் விழுப்புரம் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
- பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர் பள்ளி தொடங்கிய நாள் முதலே உடனடியாக தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்குமாறு தமிழக முதல்வர் கல்வித்துறைக்கு அறிவித்திருந்தார்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர் பள்ளி தொடங்கிய நாள் முதலே உடனடியாக தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்குமாறு தமிழக முதல்வர் கல்வித்துறைக்கு அறிவித்திருந்தார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் விழுப்புரம் மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள நகராட்சி உயர்நிலை பள்ளி மாணவ-மாணவிகளை வரவேற்று இனிப்புகளை வழங்கி அறிவுரை வழங்கினார். அப்பொழுது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கூறியது போல் பள்ளிகள் சுத்தம் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் சுத்தமாக இருந்தால்தான் ஒழுக்கம் தானாக வரும்ஒழுக்கத்துடன் சிறப்பாக முன்னேற முடியும்.முயல் ஆமை கதை உங்களுக்கு தெரியும் முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை எப்போது வெல்ல முடியாது. ஆகையால் ஒழுக்க கட்டுப்பாட்டுடனும்கல்வி பயின்றுஎங்களைப்போன்ற அதிகாரிகளாக வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்துபள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், நகரசபைத் தலைவர் தமிழ்ச்செல்வி,நகராட்சி கமிஷனர் சுரேந்தர்ஷா, தாசில்தார் ஆனந்தகுமார், நகர தி.மு.க. செயலாளர் சர்க்கரை,கவுன்சிலர்கள் உஷா மோகன்,பத்மநாபன் முன்னாள் கவுன்சிலர் சண்முகம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் வண்டி மேடு ரபிக், துைணத் தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்