search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர் பவனி"

    • ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர்.

    சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    அனைத்து குழுவினரும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து 63 நாயன்மார்களை தனி தனி பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் ஹரியானாவைச் சேர்ந்த மதுராந்தா என்ற இளைஞர் உத்தரபிரதேசம் மாநிலம் வாராணாசியில் தொடங்கி 41 நாட்கள் 2,300 கி.மீ பாத யாத்திரையாக பயணித்து ஆதியோகியை தரிசனம் செய்தார். இந்த யாத்திரை தொடர்பாக அவர் கூறுகையில், "சிவ பக்தியில் என்னை கரைத்து கொள்வதற்காக நான் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டேன். காசி முதல் கோவை வரையிலான இந்த யாத்திரை என்னுடைய நண்பர் ஒருவரும் என்னுடன் சேர்ந்து வருவதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக யாத்திரை தொடங்குவதற்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி ஐ.சி.யூவில் அனுமதிக்கப்படும் சூழல் உருவானது. இருந்தபோதும், நான் என்னுடைய யாத்திரையை திட்டமிட்டப்படி தொடர்ந்தேன். ஆதியோகி சிவனின் அருளால் ஐ.சி.யூவில் இருந்து மீண்டு வந்த அந்த நண்பர் என்னுடைய யாத்திரையில் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்த்து" என கூறினார்.

    சென்னை குழுவினருடன் பாத யாத்திரை மேற்கொண்ட ஜனனி அவர்கள் கூறுகையில், "சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது. பல கிராமங்களில் அங்குள்ள மக்கள் ஆதியோகியை தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தரிசனம் செய்ததை பெரும் பாக்கியமாக கூறினர். உடல் அளவில் இந்த யாத்திரை எனக்கு சவாலாக இருந்தாலும், மனதளவில் பெரும் நிறைவை தருகிறது" என்றார்.

    இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மஹாசிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும் 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.

    • இன்று இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது
    • இணை பங்கு தந்தை அருட்பணியாளர்கள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கடந்த 16-ந்தேதி குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 10-ம் நாள் திருவிழா நடைபெற்றது. காலை ஆயர் நசரேன் சூசை மறை உரையாற்றினார். அருட்தந்தை டோனி ஜெரோம் மற்றும் இணை பங்கு தந்தை அருட்பணியாளர்கள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

    இன்று மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு கிறிஸ்து அரசர் கலைக்குழுவினர் நடத்தும் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 10 நாட்களாக நடைபெற்று வரும் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    • தேர் பவனி விழா நடந்தது.
    • நேற்று முதல் இறை விருந்து திருப்பலி, மாலையில் திருப்பலியும், நற்கருனை பணி, ஆசியும் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் உள்ள ஜெபமாலை அன்னை சர்ச் பெருவிழா செப்.29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் நவ நாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் மறை மாவட்ட பாதிரியார் திரவியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தேர் பவனி விழா நேற்று நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. தேர் பவனியில் பங்கு அருள் பணிப் பேரவையினர், தொழில் முனைவோர், வணிகர்கள், ஜெபமாலை அன்னை பக்தர்கள், பங்கு இறைமக்கள் பங்கேற்றனர். நேற்று முதல் இறை விருந்து திருப்பலி, மாலையில் திருப்பலியும், நற்கருனை பணி, ஆசியும் நடந்தது. ராமநாதபுரம் பாதிரி யார்கள் சிங்கராயர், ரீகன் தேவசகாயம் மற்றும் கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

    • கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்
    • அதிகாலை முதல் மாலை 4 மணி வரை விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிக்டன் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

    முன்னதாக கோவிலில் அதிகாலை முதல் மாலை 4 மணி வரை விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விநாயகர் தேர் பவனி நடந்தது. இது கேர்பட்டா, காமராஜர்சதுக்கம், ராம்சண்ட் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் இடக்கல் போஜராஜ் அன்பரசு ராமச்சந்திராரெட்டி, ஜெயக்குமார், தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
    • பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    விழாவின் முக்கிய பெருவிழாவான அன்னையின் பிறந்தநாள் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று இரவு பெரிய சப்பர பவனி எனப்படும், பெரியதேர்த்திருவிழா நடைபெறுகின்றது.

    இதற்காக பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.

    வேளாங்கண்ணியில் பல்வேறு மொழிபேசும் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், மற்றும் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, தினமும் சிறிய சப்பர பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன நாளை மாதாவின் பிறந்தநாள் என்பதால் நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்ப ட்டுள்ளது.

    நாளை காலை 6 மணிக்கு மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் பரிபாலகர் சகாயராஜ்தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவடைகிறது என வேளாங்கண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் தெரிவித்தார்.

    • புத்தன்கடை வட்டார முதன்மை பணியாளர் பென்னிலுக்காஸ் தலைமை தாங்கினார்.
    • 8-ம் நாள் திருவிழாவில் புனித அகுஸ்தினார் ஆடம்பர தேர் பவனி நடைபெறும்.

    திருவட்டார் :

    குலசேகரத்தில் புகழ்பெற்ற புனித அகுஸ்தினார் ஆலய திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. புத்தன்கடை வட்டார முதன்மை பணியாளர் பென்னிலுக்காஸ் தலைமை தாங்கினார்.

    குழித்துறை மறை மாவட்ட செயலாளர் பேரருட்பணி ரசல்ராஜ், ஆலய பங்குதந்தை ஜோன்ஸ்கிளீட்டஸ், இணை பங்கு தந்தை சகாஜோபின், பங்கு பேரவை துணை தலைவர் ஜான்சன், செயலாளர் மேரி டெலரோஸ், பொருளாளர் மகேஷ், துணை செயலாளர் ஜெயசீலன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 10 நாட்கள் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவில் புனித அகுஸ்தினார் ஆடம்பர தேர் பவனி நடைபெறும்.

    இந்த தேர் பவனியானது இன்று மாலையில் கோவிலில் இருந்து தொடங்கி உண்ணியூர், கோணம், ஆணைக்கட்டி வழியாக கான்வென்ட் பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து கோவிலின் பின்புறம் வழியாக அண்ணாநகர், அரசுமூடு, காண்வெண்ட் வந்து கோவில் சன்னதியில் நிறைவடையும். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவிலில் வைத்து ஜாதி, மத பேதமன்றி அனைவருக்கும் சமபந்தி விருந்து நடைபெறுகிறது.

    • கமுதியில் அந்ேதாணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
    • இந்த வருட திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 300 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா ஜூன் மாதத்தில் நடை பெறும். இந்த வருட திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அந்தோணியார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில், கொடி ஏற்றப்பட்டது. பங்குத் தந்தை அருள்சந்தி யாகு மற்றும் அருட் தந்தை யர்கள் முன்னிலையில், பரத உறவின் முறையினர் இந்த கொடியை ஏற்றினர்.

    இதில் 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், காலை திருப்பலி நடந்தது. பின்னர் இரவு புனித அந்தோணியார், புனித ஜெபஸ்தியார், புனித சவேரியார், புனித மிக்கேல் சமனசு ஆண்டவர் போன்ற புனிதர்களின் தேர்பவனி மின்னொளி அலங்காரத் துடன் நடந்தது.

    ஆலயத்தில் தொடங்கிய தேர்பவனி நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் என முக்கிய வீதிகள் வழியாக சென்று, நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இந்த தேர்பவனியை மத வேறுபாடின்றி பொது மக்கள் பொரிகடலை, மிளகு, உப்பு, மலர்மாலை, மெழுகு வர்த்தி போன்ற வற்றை கொடுத்து வழிபட்ட னர். பேண்டு வாத்தியம், வானவேடிக்கை, மற்றும் மேல தாளங்களுடன் தேர்பவனி நடந்தது. இன்று சிறப்பு திருப்பலி நடந்தது.

    விழா ஏற்பாடுகளை பரத உறவின்முறையினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தேர் பவனியில் திரளானோர் பங்கேற்பு
    • திருவிழா ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    10-ம் நாள் திருவிழா வான நேற்று வடக்கன்கு ளம் உதவி பங்குத்தந்தை, எழில் நிலவன் தேரடி திருப்பலியை நடத்தினார். காலை 5 மணிக்கு நடைபெற்ற பெருவிழா கூட்டு திருப்பலியை பங்கு பேரவையினர் சிறப்பித்தனர்.

    வெள்ளமடம் அகஸ் தியர் முனி குழந்தைகள் நல மருத்துவமனை சேர்மன் கென்சன் தலைைம வகித்தார். காவல்கிணறு பங்குத்தந்தை ஆரோக்கி யராஜ் மறையுரை வழங்கினார். காலை 7 மணிக்கு மண்ணின் மைந்தர் குருக்கள் திருப்பலியை நிறைவேற்றினர். இரு அவை கன்னியர்கள் சிறப்பித்தனர்.

    நண்பகல் 2 மணிக்கு தேர்பவனியும், இரவு 8.30 மணிக்கு தேரடி நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. தேர் பவனியில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ஹில்மன் புரூஸ் எட்வின், அழகப்பபுரம் பேரூராட்சி தலைவர் அனிற்றா ஜெரார்டு, துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, ஏர் பிளையிங் டிராவல்ஸ் அதிபர் ஜேம்ஸ் பிரிட்டோ, அன்னை ஏர் டிராவல்ஸ் உரிமையாளர் லாரன்ஸ், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சகாய டென்னிஸ், சைலா ராணி, தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ஜார்ஜ் ஆன்றனி, பங்கு பேரவை துணைத்தலைவர் விக்டர் நவாஸ், செயலாளர் ஞானம், பொருளாளர் டேவிட் ஜெயராஜ், இரு அவை அருட் சகோதரிகள், செயற்குழு, நிதிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    ×