என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விரைவு ரெயில்"
- ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரெயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் ரெயில் எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதாலும், பணிகளின் எண்ணிக்கை குறைவாகி இருந்ததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் சக்கரம் கழன்று தடம்புரண்டு ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- அசாமில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து.
- விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
அசாம் மாநிலத்தில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-
ரெயில் 12520 அகர்தலா- எல்டிடி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று மதியம் 3.55 மணியளவில் லும்டிங்கிற்கு அருகிலுள்ள டிபலாங் நிலையம் லும்டிங் அருகே தடம் புரண்டன.
இந்த விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
விபத்தை தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். மேலும், மீட்பு ரெயில் விரைவில் சம்பந்தப்பட்ட இடத்தை அடையும்.
லும்டிங்கில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் 03674 263120, 03674 263126.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
8 coaches of Train 12520 Agartala –LTT Express derailed at Dibalong station near Lumding at 15:55 Hrs today. ????? ??? ???? ?? ????? ???????? ?? ?????? ??? ??? ?????????? ??? ????. We are coordinating railway authorities…
— Himanta Biswa Sarma (@himantabiswa) October 17, 2024
- நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் குமண்டி ரெயில் நிலையம் அருகே ராஞ்சி - சசரம் விரைவு ரெயிலில் தீ பிடித்ததாக பரவிய வதந்தியால் ரெயிலில் இருந்து பலர் தண்டவாளத்தில் குதித்துள்ளனர்.
அவர்கள் தண்டவாளத்தில் குதித்த சமயம் அவ்வழியே வந்த சரக்கு ரெயிலில் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்து பற்றி பரவிய வதந்தி குறித்தும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
- யணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
பெரும்பாவூர்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து நேற்று காலை 9.30 மணியளவில் விரைவு ரெயில் (ரெயில் எண்.16329) மதுரை நோக்கி புறப்பட்டது. 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 23) என்பவர் பயணம் செய்தார். தொடர்ந்து எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. உடனே கார்த்திக் மீட்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த ரெயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, ரெயில்வே ஊழியர்கள், போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தம்.
- ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஜோத்பூர் நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
- செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
- அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பினர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.
ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை, அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர்.
- பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
- தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது. விபத்து காரணமாக மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தண்டவாளத்தை சீரமைத்து, ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
- வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 22-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 22-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல்-பாலக்காடுக்கு இன்று முதல் 29-ந் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரெயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
பாலக்காடு-சென்னை சென்ட்ரலுக்கு இன்று முதல் 30-ந் தேதி வரை புறப்பட வேண்டிய விரைவு ரெயில் (22652), பாலக்காடு சந்திப்பு-பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எதிர்பாராத விதமாக பாரதிதாசன் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- செம்மொழி விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் மகன் பாரதிதாசன் (வயது 38 ). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் திருப்பூர் செல்வதற்காக வீட்டில் இருந்து தஞ்சாவூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து செம்மொழி விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயிலானது தஞ்சை அருகே ஆலக்குடி - பூதலூர் ரெயில் நிலையத்துக்கு இடையே சென்றபோது எதிர்பாராத விதமாக பாரதிதாசன் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பாரதிதாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்து பாரதிதாசன் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பாரதிதாசன் மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
நெல்லை:
தெற்குரெயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்ட நெல்லை கிளை சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்தியசங்க துணைத்தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். எஸ்.ஆர். எம். யூ. நெல்லை கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரராஜா சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோவை-சீரடி சுற்றுலா விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பனை செய்ததை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்