என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330020
நீங்கள் தேடியது "நாமக்கல் செய்திகள்"
குமாரபாளையத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் வேல்முருகன்(வயது 40). இவர் அப்பகுதியில் காளான் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது அதை காணவில்லை.
இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் வாகனத்தை திருடியவர், வாகனத்தை திரும்ப ஒப்படைக்கும் எண்ணத்தில் காவேரி நகர் பகுதியில் வந்தார்.
இதையடுத்து வேல்முருகனின் நண்பர்கள் அந்த நபரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வாகனத்தை திருடிய நபர் குளத்துக்காடு பகுதியை சேர்ந்த முருகன்(52) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து, திருடப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர் பகுதிகளில் தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கபிலர்மலை, பரமத்தி, கந்தம்பாளையம், மணியனூர், நல்லூர், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், அண்ணாநகர், செல்லப்பம்பாளையம், கபிலக் குறிச்சி, கவுண்டம் பாளையம், சிறுநல்லி கோவில், கொத்தமங்கலம், சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.
தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காயைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கைகளை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.
வாங்கிய தேங்காய் சிரட்டைகளை தேங்காய்சிரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டியல், பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 8-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்தார்.
பரமத்திவேலூர்,:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே எறையம்பட்டி ஆதிதிராவிடர் தெரு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர் .இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆகாத 2 மகள்கள் வீட்டில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இவர் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் பழனிசாமி நேற்று வீட்டிலிருந்த மருந்தை எடுத்து குடித்து விட்டார். தனது மகளுக்கு போன் மூலம் அவரே தகவல் சொன்னதால் மகள்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.100யை தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு, ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை அதிகரித்து விற்றது. பின்னர் படிப்படியாக குறைந்து மீண்டும் 10 ரூபாய்க்கு வந்தது. விலை வீழ்ச்சியால் செடியில் பறிக்காமல் விடப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில் தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து காரணமாக விலை அதிகரித்துள்ளது.
தரமான ஒரு கிலோ தக்காளி பழம், தற்போதைய நிலையில் சில்லரை மார்க்கெட்டில் 100 ரூபாயினை எட்டி உள்ளது. மொத்த மார்க்கெட்டிலேயே 80 ரூபாயினை கடந்து விட்டது. இரண்டாம் ரக தக்காளி கிலோ 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
வைகாசி மாதம் பிறந்து விட்டதால் அத்தனை வகை காய்கறிகளின் தேவைகளும் அதிகரித்துள்ளன. இதனால் சராசரியாக எல்லா காய்கறிகளின் விலைகளும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பகுதியில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அனல் வீசி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோடைகாலம் தொடங்கி விட்டாலே மக்கள் வெயி–லின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடலுக்கு இதமான குளிர்ச்சி தரும் கனிகளான தர்ப்பூசணி, நுங்கு, இளநீர், மற்றும் வெள்ளரிக்காய், மோர் போன்றவற்றை நாடத் தொடங்குவது வழக்கம்.
அதன்படி குமார–பாளையம் நகரின் பிரதான வீதிகளில் தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களின் முதல் தேர்வாக நுங்கு உள்ளது. நுங்கு சுவையானது மட்டுமல்லாமல் அதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது.
வெயில் காலத்தில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தைக் கொண்டுள்ளது நுங்கு. அதுமட்டுமின்றி உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படு–வதற்கு பெரிதும் உதவியாக நுங்கு இருக்கிறது. நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவ–தோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. இதனால் தற்போது நுங்கு வியாபாரம் சற்று அதிகரித்து உள்ளது. சாலையோரத்தில் சிறு சிறு கடைகள் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். நுங்கு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரபாளையம் பகுதியில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அனல் வீசி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோடைகாலம் தொடங்கி விட்டாலே மக்கள் வெயி–லின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடலுக்கு இதமான குளிர்ச்சி தரும் கனிகளான தர்ப்பூசணி, நுங்கு, இளநீர், மற்றும் வெள்ளரிக்காய், மோர் போன்றவற்றை நாடத் தொடங்குவது வழக்கம்.
அதன்படி குமார–பாளையம் நகரின் பிரதான வீதிகளில் தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களின் முதல் தேர்வாக நுங்கு உள்ளது. நுங்கு சுவையானது மட்டுமல்லாமல் அதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது.
வெயில் காலத்தில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தைக் கொண்டுள்ளது நுங்கு. அதுமட்டுமின்றி உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படு–வதற்கு பெரிதும் உதவியாக நுங்கு இருக்கிறது. நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவ–தோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. இதனால் தற்போது நுங்கு வியாபாரம் சற்று அதிகரித்து உள்ளது. சாலையோரத்தில் சிறு சிறு கடைகள் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். நுங்கு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் மற்றும் பூ மிதி திருவிழா கம்பம் நடுதலுடன் கடந்த 8-ந் தேதி தொடங்கியது.
விழாவை தொடர்ந்து 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிங்கம்,காமதேனு, அன்னம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன் தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று மாலை திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது.
இன்று மாலை பூமிதி விழாவும், நாளை புதன்கிழமை பொங்கல், மாவிளக்கு பூஜையும்,நாளை மறுநாள் வியாழக்கிழமை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடலும், 28-ந் தேதி சனிக்கிழமை இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே தொழிலாளியை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே சானார்பாளையத்தில் வசிப்பவர் மாரிமுத்து(வயது 50) கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்( 43).
மாரிமுத்து, ராஜசேகரனுக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். பின்னர் அதை மாரிமுத்து திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகரன் தகாத வார்த்தையால் பேசி மது பாட்டிலை உடைத்து மாரிமுத்துவை நெற்றி, பின் தலை, இடது நெஞ்சு, ஆகிய இடங்களில் குத்தியதாக தெரிகிறது.
இதில் மாரிமுத்து பலத்த காயம் ஏற்பட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் ராஜசேகரனை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளிப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டர் மயங்கி விழுந்து பலியானார்.
பள்ளிப்பாளையம்:
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் லோகுசாமி (வயது 58). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
பள்ளிப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.பி. காலனியில் ஈரோடு செல்லும் வழித்தடத்தில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பஸ்சில் லோகுசாமி நேற்று பணியில் இருந்தார். பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, பஸ்சிலேயே மயங்கி விழுந்தார்.
அவர் உயிருக்கு போராடிக் கொணடிருந்தார். இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து டிரைவர், உடனடியாக பஸ்சை வேகமாக வழியில் எங்கும் நிறுத்தாமல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையை நோக்கி ஓட்டிச் சென்று சிகிச்சைக்காக அவரை சேர்த்தார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் லோகுசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் இது பற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
சாயக்கழிவு நீரை வெளியேற்றிய 11 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில், பெரும்பாலானவை சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுகின்றன. இவற்றை ஆற்றில் கலப்பதால் சுத்தமான தண்ணீர் மாசடைகிறது.
இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள், அலர்ஜி, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கால்நடைகளும், மீன்களும் பாதிக்கப்படுகின்றன.
வழக்கமாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி நேரில் வந்து ஆய்வு நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் சமீபகாலமாக எடுப்பதில்லை. இதனால் சென்னை மாசுகட்டுபாட்டுவாரிய தலைமை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், விதி மீறி செயல்பட்ட சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் தொர்ச்சியாக நேற்று முன்தினம் பள்ளிப்பாளையத்தில் சமயசங்கிலி, ஆவத்திபாளையம், களியனூர் சுற்றுவட்டாரத்தில் 11 சாய ஆலைகளுக்கும் மாசுகட்டுபாட்டுவாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து 11 சாய ஆலைகளுக்கும் சீல் வைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய நபர் கைது செய்தனர்.
குமாரபாளையம்:
ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 51). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் கே.2 என்ற அரசு பஸ் குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விஸ்வநாதன் ஓட்டினார்.
குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ெமாபட்டில் வந்த குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த கார் டிரைவர் சுந்தரம் (53) திடீரென அரசு பஸ்சை வழிமறித்தார்.
பின்னர் சுந்தரம் அந்த பஸ்சில் ஏறி , டிரைவர் விஸ்வநாதனை தகாத வார்த்தையில் பேசி, முகத்தில் பலமாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து விஸ்வநாதன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் , சுந்தரத்தின் உறவுக்கார பெண் ஒருவர் பஸ்சில் கூட்டமாக இருந்ததால் பஸ்சில் ஏற முடியவில்லை.
இது பற்றி அந்த பெண் சுந்தரத்திடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம் அரசு பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.
பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் மற்றும் பூக்குண்ட திருவிழா கடந்த 8-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிம்மம்,ரிஷபம், அன்னபட்சி,பூதகி, யானை மற்றும் குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
22-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், 23-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வீதி வழியாக உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தொடர்ந்து சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது.
நேற்று மாலை தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கியும், பெண்கள் பூ போட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இன்று (புதன்கிழமை) காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் , அலகு குத்துதியும் ஊர்வலமாக சென்றனர்.
இன்று இரவு வாண வேடிக்கை நடைபெறுகிறது. நாளை காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும்,27-ந் தேதி மஞ்சள் நீராடலும்,28-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 29, மற்றும் 30-ந் தேதி முதற்கால மற்றும் 2-ம் கால யாக பூஜையும், அன்னபாவாடை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். எந்தவித அசம்பா விதங்களும் ஏற்படாத வகையில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய ஊழியர்கள் ஆங்காங்கே மின் கம்பிகளை துண்டித்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குமாரபாளையம் 3,9-வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் மேற்ெகாள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நேற்று 9-வது வார்டு ராஜம் தியேட்டர் பகுதியில் ஆய்வு சேர்மன் விஜய்கண்ணன் செய்தார். வார்டு கவுன்சிலர் விஜயா மற்றும் அப்பகுதி மக்கள் சாலை வசதி, வடிகால், குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் செய்து தர கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து அவர் அதிகாரிகளை வரவழைத்து, பணிகளை மேற்கொள்ளுமாறு சேர்மன் அறிவுறுத்தினார். அதே போல் 3-வது வார்டிலும் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வேல்முருகன் உடனிருந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X