என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330130
நீங்கள் தேடியது "Kalameka Perumal"
மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
மதுரை
108 வைணவ தலங்களில் ஒன்றாக மதுரை மாவட்டம் திருமோகூரில் உள்ள காளமேக பெருமாள் கோவில் விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வைகாசி பெருந்திருவிழா விமரிசையாக நடை பெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (4-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி யருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்ய ப்பட்டது. தொடர்ந்து 10:30 மணி முதல் 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை கள் நடந்தன. அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கும் திரு விழாவில் தினமும் காலை மாலை சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் தேவியருடன் வலம் வந்து அருள் பாலிக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் காளமேகப்பெருமாள் மற்றும் அம்பாள் எழுந்த ருளியபின் 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
13-ந் தேதி திருமஞ்சனம் நடக்கிறது. 14-ந் தேதி பகல் 12 மணிக்கு உற்சவ சாந்தி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் ஆணையர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
×

X