search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seminar"

    • சாரதா கல்லூரியில் பொருளியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நெல்லை அரியகுளம் சாரதா கல்லூரியில் செயலாளர் யதீஸ்வரி சரவணப்பிரியா அம்பா, இயக்குநர் சந்திரசேகரன் ஆகியோரின் அறிவுத்தலின்படி பொருளியல் துறையின் சார்பில் போட்டித்தேர்வுகளில் பொருளியல் துறையின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் கலந்து கொண்டு பொருளியல் படிப்பின் முக்கியத்துவத்தையும், இந்த துறையில் பட்டம் பெறுவதால் கிடைக்க கூடிய வேலைவாய்ப்பு வழிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கி பேசினார்.

    முன்னதாக 3-ம் ஆண்டு மாணவி இந்துமதி வரவேற்று பேசினார். பொருளியல் துறை தலைவரும், துணை முதல்வருமான கலாவதி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 2-ம் ஆண்டு மாணவி சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.

    • லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தினம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
    • கருத்தரங்கிற்கு முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தினம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சார்லஸ் வரவே ற்று பேசினார். தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் 'மாணவர்களும் தேச ஒருமைப்பாடும்' என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

    கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகளிடத்தில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் விரிவுரையாளர் நடேசன் நன்றி கூறினார்.

    • பாளை திருமால்நகர் மாநகராட்சி பூங்கா நூலகத்தில் தற்சார்பு வாழ்க்கை முறை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் திருமால் நகரை சார்ந்த பெண்கள் பங்கு பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியின் சமூக பணித்துறை சார்பில் பாளை திருமால்நகர் மாநகராட்சி பூங்கா நூலகத்தில் தற்சார்பு வாழ்க்கை முறை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக இந்திரா பொன்னையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்சார்பு வாழ்க்கை முறை என்பது நம் சொந்த தேவைகள் மற்றும் நம் குடும்பத்தின் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வது ஆகும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பருப்பு பொடி, சமையலுக்கு உபயோகப் படுத்தும் மசாலா பொருட்கள் இது போன்ற வைகளை நாம் வெளியே இருந்து வாங்காமல் நம் வீட்டில் செய்து உபயோகிப்பதன் மூலமாக நம் ஆரோக்கியத்தையும் நாம் பேணி காக்கலாம் என்றார்.

    கருத்தரங்கில் திருமால் நகரை சார்ந்த பெண்கள் பங்கு பெற்றனர். ஏற்பாடு களை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி சமூக பணித்துறை மாணவி வரலெட்சுமி செய்திருந்தார்.

    • சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ஏ.எம்.நவீன அரிசி ஆலை லட்சுமி சேகர் தலைமை தாங்கினார்.பொன்னொளிர் ஏஜென்சி அருணாச்சல முத்துச்சாமி , கோவா கேட்டரிங் சுரேஷ், எஸ்.ஆர்.எஸ்.ஹார்டுவேர்ஸ் சுப்புராஜ், ரஜினி பத்திர எழுத்தாளர் ரஜினி, கிளாசிக் கம்ப்யூட்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். கே.ஆர்.பி. நவீன அரிசி ஆலை உரிமையாளர் இளங்கோ தொகுத்து வழங்கினார்.

    பொன் அறிவழகன் தொடக்க உரையாற்றினார்.கோல்டன் டிரேடர்ஸ் செல்வராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார். பைம் தொழில் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாகி சிவக்குமார் தொழில் ஆரம்பிப்பது குறித்து பேசினார்.நிகழ்ச்சியை ராஜாதி ராஜா நவீன அரிசியாலை ஆனந்த் ,நண்பா கேக் சங்கரபாண்டியன், ராஜாமணி திருமலை கொழுந்து, ஆனந்த், ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் கே.எஸ். சினேகா பாரதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சுடர் பரமசிவம் நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு.
    • பேரணியின் போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி நாகூரில் நடத்தப்பட்டது.

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் சாந்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பயிற்றுநர்கள் சிவா சுகந்தி மற்றும் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.

    பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பகம் துணைத் தலைவர் மேதின ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக தேசிய பசுமைப்படை ஆசிரியை பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

    ஆசிரியர் மாதவன் நன்றியுரை ஆற்றினார். பின்னர் விழிப்புணர்வு பேரணியை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்க்காவல் படை போக்குவரத்து கமாண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வழிநடத்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியின் போது பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    • தென்காசி அரசு தலைமை மருத்துவ மனையில் நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, தொகுத்து வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு,நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள், குறிப்பாக தென்காசி மாவட்ட மூத்த பொது நல மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என சுமார் 107 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, துணை இயக்குனர் சுகாதாரம் முரளி சங்கர், துணை இயக்குனர் (குடும்ப நலம்) ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் மருத்துவர்கள் அகத்தியன், மல்லிகா, மாரிமுத்து, கார்த்திகேயன், ராஜலட்சுமி, சாரதாதேவி நீரிழிவு நோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர். மேலும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கலந்துகொண்டார்.

    கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, தொகுத்து வழங்கினார். உறைவிட மருத்துவர் ராஜேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முன்னின்று நடத்திய மருத்துவர்கள் விஜயகுமர், மல்லிகா, கார்த்திக் உள்ளிட்டோர் மற்றும் பேச்சாளர்கள், கலந்து கொண்ட மருத்து வர்கள், பணியாளர்களுக்கு நன்றி கூறினார்.

    • நவம்பர் புரட்சி தினத்தை ஒட்டி நூற்றாண்டு மண்டபத்தில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி கம்யூனிஸ்ட் கொடியேற்றினார்.

    நெல்லை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழு சார்பில் நவம்பர் புரட்சி தினத்தை ஒட்டி கருத்தரங்கு பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி கொடியேற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கற்பகம் வரவேற்றார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பூலுடையார், மாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் அறிமுக உரையாற்றினார்.

    கார்ப்பரேட் பாசிசம் குறித்து மாநில குழு உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகி மோகன் ஆகியோர் பேசினர். வகுப்புவாத சவால்கள், மக்கள் ஜனநாயகம், தமிழகமும் வர்க்கபோரும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகள் பேசினர். முடிவில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் நிறைவுரையாற்றினார்.

    • ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • கடன் தருகிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளில் பேசி ஏமாறுகிறவர்களின் பணம் திருடப்படுவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருத்தரங்கில் பேசினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி கலையரங்கத்தில் எம்.பி.ஏ. மாணவ-மாணவிகளுக்கான சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியை சுமதி தலைமை தாங்கினார். முதல்வர் வெங்கடேசுவரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் (சைபர் கிரைம்) கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஏமாறுவதில் படித்தவர்களே அதிகமாக உள்ளனர். இதற்காகவே காவல்துறையில் சைபர் கிரைம் என்ற என்ற ஒரு துறையே உள்ளது. முன்பின் தெரியாதவர்களின் அழைப்பு மற்றும் சம்பந்தம் இல்லாத லிங், பரிசு விழுந்துள்ளது, கடன் தருகிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளில் பேசி ஏமாறுகிறவர்களின் பணம் திருடப்படுகிறது. இதில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் உடனே சைபர் கிரைம் மற்றும் அருகில் உள்ள காவல்நிலையங்களின் மெயில் ஐ.டி. தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நிவாரணம் பெற முடியும்.

    "காவல் உதவி" என்ற ஆப்சை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அதில் 60 விதமான உதவிகள் உள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் தங்களது புகைப்படங்களை வலைதளத்தில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். இதில 200- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான வழிகாட்டி என்ற பெயரில் கருத்தரங்கம் பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் நடை பெற்றது.
    • ரோடரக்ட் சங்கம் ஜெம்ஸ் தலைவர் ரோடரக்டர் ஹரிபிரசாத், வரவேற்று பேசினார்.

    கருப்பூர்:

    பெரியார் பல்கலைக்கழக நூலக துறையும்,  ரோடரக்ட் சங்கம் ஜெம்ஸ், சேலம் ரோட்டரி சங்கம், திருவள்ளுவர் நூலக வாசகர் வட்டம், ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான வழிகாட்டி என்ற பெயரில் கருத்தரங்கம் பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் நடை பெற்றது.ரோடரக்ட் சங்கம் ஜெம்ஸ் தலைவர் ரோடரக்டர் ஹரிபிரசாத், வரவேற்று பேசினார்.

    இதில் பெரியார் பல்கலைக்கழக நூலகர் ஜெயப்பிரகாஷ் பங்கேற்று, இளம் மாணவர்கள் மத்தி யில் பரவிக்கிடக்கும் இணையதள மோகத்தில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும், சமுதாயத்திற்கு இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும்,இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்கு கொண்டு இந்த சமுதாயத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை சுயநலம் இல்லாமல் பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும் என கூறினார்.

    ரோட்டரக்ட் மாவட்ட தலைவர் ரோட்டேரியன் ஹரிதாஸ், வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் மாணவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

    • உலக மரபு வார விழா தொல்லியல் கருத்தரங்கம் நடந்தது.
    • உலக மரபு வார விழா நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தியது. கல்லூரி தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்த் வரவேற்றார்.

    ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள், இயற்கை தாவரங்கள், நாணயங்கள் உள்ளிட்ட தடயங்கள் பற்றியும், ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ், கீழடி, மயிலாடும்பாறை, கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொல்லியல் அகழாய்வுகள் பற்றியும், கல்லூரியின் முதலாமாண்டு மாணவி சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகளில் காணப்படும் சங்ககால தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பற்றியும் படங்களுடன் விளக்கினர். உதவிப் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • அறிவியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது
    • திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்

    திருச்சி

    திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் கல்வி புலமும் அனைத்து அறிவியல் துறைகளும் இணைந்து நிலையான மற்றும் நம்பகத் தன்மை வாய்ந்த எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு என்ற கருப்பொருளில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் பால் தயாபரன் தலைமை வகித்தார்.

    ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ஐக்கிய குடியரசை சேர்ந்த லிவர் ஃபூல் ஹோப் பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர் முனைவர் அதுல்யா நகர் மற்றும் ஐக்கிய குடியரசின் ரீடிங் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் மரபணுவியல் பேராசிரியர் முனைவர் விமல் கரணி ஆகியோர் அங்கம் வகித்தனர்.

    தொடக்க நாள் நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் சிறப்புரையாற்றினார். இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பவியல் துறை இயக்குனர் முனைவர் நகுல் பரசார் மற்றும் கனடா நாட்டின் திருத்துவ மேற்கத்திய பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் முனைவர் பிலிப் லையர்டு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இக்கருத்தரங்கில் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறையின் மூத்த அறிவியல் அறிஞர் முனைவர் வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார் . மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கல்லூரி துணை முதல்வர்கள் அழகப்பா மோசஸ், சத்தியசீலன், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் வயலட் தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நெட்டப்பாக்கம் கிராம நலச்சங்கம் குடும்ப நல ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறது.
    • இந்த மையத்தில் பல்வேறு வகையான பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் கிராம நலச்சங்கம் குடும்ப நல ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு வகையான பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் துண்புறுத்தல்களிலிருந்து அவர்களை பாதுகாத்து வருகிறது.

    அதன்படி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நெட்டப்பா க்கம் கருணாலயம் கிராம நலச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பாதுகாப்பு அலுவலர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் கருணாலயம் கிராம நலச்சங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

    கருணாலயம் கிராம நலச்சங்க குடும்பஆலோசகர் சித்ரா வரவேற்று பேசினார். கருணாலயம் கிராம நலச்சங்க குடும்ப ஆலோசகர் அபிராமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    ×