என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth"

    • தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக முடக்கம்.
    • ஜி.எஸ்.டி வரி விதிப்பை மத்திய அரசு குறைத்தால் வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர்ர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் 3,928 பயனாளிகளுக்கு, 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அமைச்சர் சிவி.கணேசன் பேட்டியளித்தபோது கூறுகையில்,

    கல்வி, திருமண உதவித்தொகை, விபத்து, மரணம் உள்ளிட்டவைகளில் 1 லட்சம் 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கம், அடுக்குமாடி குடியிருப்பு, மால் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை கட்டிய கொத்தனார் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை சொந்த வீடு இல்லை என்று வேதனை தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ. 400 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டம் வருகிற 15ம் தேதி முதல் அமைச்சரால் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.

    தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் கூறுகையில்; கட்டிடத் தொழிலில் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்று வேதனை தெரிவித்தார். உள்நாட்டு தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்க தி.மு.க ஆட்சியில் வருடத்திற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அளித்து வந்த தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் முடங்கி கிடந்ததாக குற்றம்சாட்டினார்.

    இந்த பயிற்சி கொடுத்தால் தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்து இருப்பது கொடூர செயல் என்று கடுமையாக விமர்சித்த பொன்.குமார், ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு 5 சதவீதமாக குறைத்தால், கட்டுமான வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • காயல்பட்டினம் ஓடக்கரை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்
    • வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்ற நிலையில் மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் ஓடக்கரை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 62). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இவர்களில் மணிகண்டன் (21) சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    நேற்று அவரது வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்ற நிலையில் மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்
    • தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் இறங்கி வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவபெருமாள். (வயது 39). கூலி வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.

    இந்நிலையில் சிவபெருமாள் நேற்று காலை கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பததால் அவரது குடும்பத்தினர் சிவபெருமாளை தேடி யுள்ளனர். இதற்கிடையில் நீண்ட நேரமாக கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு பைக் நிற்பதாக அப்பகுதி மக்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து அங்கு விரைந்த ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது சிவ பெருமாளின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்துள்ளதால் சிவபெருமாள் ஆற்றில் குளித்தபோது நீரில் இழுத்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதி ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறை யினருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.

    தேடும் பணி தீவிரம்

    இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் இறங்கி சிவபெருமாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை பின்னர் வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடுதல் முயற்சி கைவிடப்பட்டது.

    2-வது நாளான இன்று 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் கருங்குளம் தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழ்ப்பகுதியில் இறங்கி சிவபெருமாளை தேடும் பணியில் ஈடு பட்டனர்.

    நேற்றை விட இன்று காலை ஆற்றில் தண்ணீர் குறைந்து ள்ளதால் தேடும் பணியில் முடுக்கிவிடப்பட்டது.

    இந்நிலையில் இன்று பிற்பகல் சகதிக்குள் சிக்கிய சிவபெருமாளை சடலமாக மீட்டனர்.

    • வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்
    • இதுவரை 1200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    கலாச்சார கலாச்சார நட்புறவு கழக தமிழ் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது,

    1200 பேர் மீட்பு

    தமிழகத்திலிருந்து வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகள் சென்று தவித்த 1200 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் கம்போடியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து 64 பேர் மீட்டுவரப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களின் முழு விமான கட்டணம் உள்ளிட்ட முழு செலவினங்களையும் மனிதநேயத்தோடு தமிழக முதலமைச்சரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

    விழிப்பாக இருக்க வேண்டும்

    வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தாங்கள் வேலைக்கு செல்லும் நிறுவனத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னர் செல்ல வேண்டும்.

    திருச்சியில் கூட வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பி ஏமாற்றிய 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள். தமிழக அரசு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களை அழைத்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் இதுவரை 181 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    500 செவிலியர்கள்

    தற்போது இங்கிலாந்துக்கு 500 செவிலியர்களை அனுப்ப அவர்களை தேர்வு செய்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. என்.ஆர்.சி. கணக்கெடுப்பு பணி வட மாநிலங்களில் நடைபெறுவதாக சொல்கிறீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக இந்தியா இருக்கிறது. தமிழக முதலமைச்சரும் இதனை வலியுறுத்தி வருகின்றார்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • ராமச்சந்திரன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.
    • விஷம் குடித்து மயங்கி கிடந்த ராமச்சந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த வீரணாபுரம் காளிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகாளி. இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 22).

    இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றித்திரிந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ராமச்சந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் இறந்தார். இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறுவள மைய ஏதுவாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியின் உத்தரவுப்படி, வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நாளை (26-ந் தேதி) நடைபெற உள்ள குறுவளமையக் கூட்டத்தில் மாவட்ட ஏதுவாளர்களாக செயல்பட உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் நடந்தது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்த பயிற்சியை நடத்தியது. பாலையம்பட்டியில் உள்ள மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் மகாலிங்கம் வரவேற்றார்.

    இதில் சிவகாசி கல்வி மாவட்டத்தின் கீழ் உள்ள சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஒன்றியங்களைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 237 பேர் கலந்து கொண்டனர். உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி, சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மருதக்காளை, கணேசுவரி, மெர்சி ஆகியோர் பேசினர். இ்ல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரியப் பயிற்றுநர்கள் முத்துராஜ், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைப்பாளராக இளங்கோ, இணை ஒருங்கிணைப்பாளர்களாக மகாலிங்கம், சரவணகுமாரி ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியின் உத்தரவுப்படி, வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    • வீடு வீடாகச் சென்று இளைஞ ர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.
    • வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மேற்கு ஓன்றியம் சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பி னர்கள் சேர்க்கும் முகாம் நகர மன்ற தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் விக்னேஷ்காமராஜ் முன்னிலை வகித்தார். வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம் மேற்கு ஒன்றியம் ஆயக்காரன்புலம் ஒன்றுஊராட்சிக்கு உட்பட்ட பழையகரம், முதலியார் குத்தகை, பெரிய குத்தகை கொச்சிகுத்தகைஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று இல்லம் தேடி இளைஞரணிஉறுப்பினர்கள் சேர்க்கும்பணி நடைபெற்றது. இதில் வீடு வீடாகச் சென்று இளைஞர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்அசோக் குமார்ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, வழக்கறிஞர் அணி அன்பரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமார் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாபு ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் மேற்கு ஒன்றியதுணை செயலாளர் அருள்அரசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • குருமாம்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் என்.ஆர்.டி.யு.சி. தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
    • இதில் என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    குருமாம்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் என்.ஆர்.டி.யு.சி. தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

    விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் அழகு, தொழிற்சங்க தலைவர் அன்பு அப்பாஸ், தலைவர் பாபு, செயலாளர் குமார், பொருளாளர் புகழேந்தி, குணா, தேவராஜ், சோமு, வினோத்குமார் மற்றும் பலர் கலந்து கெண்டனர்.

    விழாவில் என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரசும், என்.ஆர்.டி.யு.சி.யும் இரட்டை குதிரை பூட்டிய தேரை போன்றது. ஒருபுறம் மக்களை காப்பதிலும், மறுபுறம் தொழிலாளர் நலனைக் காப்பதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் என்.ஆர்.காங்கிரஸ் மாநில அந்தஸ்து பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கம்.

    கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞ ர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு ள்ளது.

    குறிப்பாக ஐ.டி. தொழிற்சாலைகளை அதிக அளவில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகளை வழங்க வும், அரசு ஆலோசித்து வருகிறது.

    இதுபோன்ற அரசின் முயற்சி புதுவை இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    • திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல் தலைமையில் நடைபெ‌ற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இளைஞர் திறன் திருவிழா மாரிமுத்து எம்.எல்.ஏ. , மகளிர் திட்ட இயக்குநர்வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெ‌ற்றது.உதவி திட்ட இயக்குநர் தில்லைமணி கண்ணன் வரவேற்புரை வழங்கினார்.

    இந்த திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கனிஅமுதா ரவி, பேருராட்சி தலைவர் மும்தாஜ் நவாஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அமுதாமனோகரன் மற்றும்தமயந்தி, பேருராட்சி செயலாளர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் கமல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

    முடிவில் வட்டார இயக்க மேலாண்மை மேலாளர் ராதிகா நன்றி தெரிவித்தார்.

    • இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
    • விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து திறன் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்ப டுத்தப்பட்டு வரும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் 2022-23 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்க ளிலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்ப டுத்தும் வகையில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடை பெற்றது.

    அப்போது இந்திய அரசும், மாநிலஅரசும் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

    திறன் பயிற்சி திட்டங்க ளில், இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ப, விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து திறன் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொதுமக்களிடமும் இளைஞர்களிடமும் விழிப்பணர்வு ஏற்படுத்துவதே இளைஞர் திருவிழாவின் நோக்கம் என இதில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்து பேசினர்.

    இந்த திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முன்னதாக உதவி திட்ட இயக்குநர் தில்லைமணி கண்ணன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கனியமுதா ரவி, பேருராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், மாவட்ட கவுன்சிலர்கள் அமுதா மனோகரன், தமயந்தி, பேருராட்சி அலுவலர் கார்த்தி. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கமல்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.

    பின்னர் இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் ஏராளமான இளம்பெண்கள் உட்பட பலரும் கலந்துக்கொ ண்டனர்.

    • மலைமீது தேடிய கிராமத்து இளைஞர்கள் பாறை இடுக்கில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர்.
    • கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பொன்னடபட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் விஷ்ணு ராம் (வயது21). நேற்று மாலை இவர் தாயாரிடம் பிரான்மலைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு மலை மேல் உள்ள கொடுங்குன்ற நாதரை தரிசனம் செய்ய தனியாக சென்றார். பொழுது சாய்ந்த நேரத்தில் பாதை தெரியாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற விஷ்ணுராம், அங்குள்ள பாறையில் வழுக்கி புதருக்குள் விழுந்தார்.

    அங்கிருந்து தாயாருக்கு பாதை மாறி சென்றுவிட்டதாக செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பினார். மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியது. குறுந்தகவலை பார்த்த தாயார் உடனடியாக பிரான்மலை ஊருக்குள் வந்து கிராம மக்களிடம் மகன் காணாமல் போன விவரத்தை கூறி அழுதார். இதையடுத்து பிரான்மலை, மற்றும் பாப்பாபட்டியை சேர்ந்த இளைஞர்கள் மலையில் ஏறி இரவு முழுவதும் வாலிபர் விஷ்ணுராமை தேடினர்.

    அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாததால் இரவில் திரும்பி விட்டனர்.இன்று காலை மீண்டும் கிராமத்து இளைஞர்கள் மலைமீது தேடியபோது பாறை இடுக்கின் இடையே தலையில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர். பின்னர் அவரை பத்திரமாக மீட்டு மலையை விட்டு இறங்கினர். காயமடைந்த விஷ்ணுராமை உடனடியாக பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சுமார் 2,500 அடி உயரம் உள்ள பிரான்மலையில் நேரம், காலம் பார்க்காமல் மாலையில் இருந்து இன்று காலை வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாப்பாபட்டி கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பிரான்மலை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது. 

    • திருப்பத்தூர் அருகே நடந்த கார் விபத்தில் மதுரை வாலிபர் பலியானார்.
    • இவர் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டபோது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

    திருப்பத்தூர்

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பழனிவேல்.

    சம்பவத்தன்று பழனி வேல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். காரை சதீஷ் கான் என்பவர் ஓட்டி வந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கும்மங்குடி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்புறமாக கனரக வாகனங்களை முந்தி வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். காரில் பயணித்த பழனிவேல், சதீஷ் கான் ஆகியோர் படுகாயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார்புரம் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி வேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விபத்தில் இறந்த வாலிபர் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் தெருவை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் கார்த்திக் (வயது 24) என தெரியவந்தது. காரைக்குடி பகுதியில் வேலை பார்த்து வந்த இவர் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டபோது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

    விபத்தில் பலியான கார்த்திக்கு முனியம்மாள் என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×