என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள்"
- இந்தவாரம் குண்டடம் வராசந்தையில் விற்பனைக்காக அதிகளவில் மிளகாயை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
- மிளகாய் செடி 1 ஏக்கர் சாகுபடி செய்ய விதை, நடவு கூலி, உரம், உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம்.
குண்டடம்:
குண்டடம் சுற்றுவட்டாரம் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சுற்றுவட்டார பகுதிகளான குண்டடம், ருத்ராவதி, சூரியநல்லூர், முத்தனம்பட்டி உட்பட பல கிராமங்களிலுள்ள விவசாயிகள் குறைந்த தண்ணீரை கொண்டு நிறைந்த லாபம் தரும் பயிர்களான வெங்காயம், கத்திரி, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களை பயிற்செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சில நாட்களாக பெய்த பருவமழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் தண்ணீர் நல்ல முறையில் கிடைத்துள்ளதால் இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் மிளகாய் செடியை ரகங்களான கருங்காய், உருண்டை, சம்பா போன்ற மிளகாய் செடியை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இது குறித்து குங்குமம் பாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது;-
மிளகாய் செடி 1 ஏக்கர் சாகுபடி செய்ய விதை, நடவு கூலி, உரம், உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். 5 மாதம் வரை காய் பிடிக்கும். நல்ல மகசூல் கிடைத்தால் ஏக்கருக்கு 5 மாதங்களுக்கு 10 டன் வரை உற்பத்தி கிடைக்கும். 30 நாட்களில் காய் பிடிக்கத் தொடங்கும் காய் பிடித்த நாளிலிருந்து 12 நாட்களுக்கு ஒரு முறை காய்களை ஆட்கள் மூலம் கூலி கொடுத்து பறித்து குண்டடம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும்போது வாடகை சுங்கம், என 1 கிலோவுக்கு ரூ.10 செலவு ஆகிறது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை கூடும் இந்த சந்தைக்கு மிளகாயை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதேபோல் மிளகாயை வாங்குவதற்க்காக கேரளா, ஊட்டி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்த வியாபரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்கின்றனர். இந்தநிலையில் இந்தவாரம் குண்டடம் வராசந்தையில் விற்பனைக்காக அதிகளவில் மிளகாயை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதனால் மிளகாய் கிலோ ரூ.20க்கு விற்பனையானது. இனி வரும் மாதங்களில் விலை கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முறையாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். மானியத் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்,
- உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம்:
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். மானியத் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் உரிமம் சான்று வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
- உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
- சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
உடன்குடி:
உடன்குடியில்உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் நல்ல கனமழை பொழிந்து வருகிறது.இந்த நிலையில் வறண்டு கிடக்கும் சடையனேரி கால்வாயில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயநிலங்களை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் கடல்நீர்மட்டம் புகுந்து விடாமல்தடுக்கவும், உடன்குடி பகுதியில் அனைத்து குளங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ேபசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அப்போது அமைச்சருடன் உடன்குடி யூனியன் சேர்மனும் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடிகூட்டுறவு சங்க தலைவர் அங்ஸாப் அலிபாதுஷா, உடன்குடிநகர செயலாளரும் உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், செட்டியா பத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட தி.மு.கவினர் பலர் உடனிருந்தனர்.
- பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் சேலம் கலெக்டரிடம் இன்று மனு கொடுத்தனர்.
- பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம்:
தமிழக இயற்கை விவ சாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 3 ஆண்டாக பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, தவிடு போன்ற பொருட்கள் கடுமையான விலை ஏற்றம் அடைந்து உள்ளது. ஆட்கள் கூலியும் அதிகரித்து உள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத் தியாளர்கள், விவசாய சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆனால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே பால் உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.
- இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.
- பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளை பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலாவிற்கு மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை விவசாயி ராஜாகிருஷ்ணன் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார். இவர் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார். நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது.
இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.
இந்த தொழி ல்நுட்ப த்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவா கவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக கூறினார். அவர் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
இவ்வாறு சாகுபடி செய்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து தனது வருமானத்தினையும் அதிகப்படுத்தி உள்ள தாகவும் விவசாயிகளிடம் அவரது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார். பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம், பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் கூறினார்.
- குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது.
- குடிமங்கலம் பகுதியில் தற்போது குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் குடிமங்கலம் குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல் அவதிப்படுவதை தடுக்கும் வகையில் சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் குடிமங்கலம் பகுதியில் தற்போது குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.குடிமங்கலம் பகுதியில் ரெட் லேடி ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இது நல்ல சிவப்பு நிறமும் சுவையும் கொண்டது என்பதால் விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பப்பாளி பழங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று பப்பாளிகளை அறுவடை செய்து கொள்கின்றனர் இதுகுறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி கூறியதாவது. கூடுதல் லாபம் பப்பாளி ரகத்தின் வயது வயது 22 மாதங்கள் ஆகும்குடிமங்கலம் பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.பப்பாளி கன்றுகளை 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்யவேண்டும்..பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது மேலும் மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனைகள் குறைவாகவே உள்ளது..பப்பாளி சாகுபடி செய்த 8 மாதங்களில் இருந்து அறுவடைக்கு தயாராகும். பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்றாலும் பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. பப்பாளி செடியின் வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்காத அளவில் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பப்பாளி 8மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து 14மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்.வியாபாரிகள் தோட்டத்திற்கு நேரடியாக வந்து பழங்களை அறுவடை செய்து கொள்வதால் விவசாயிகளுக்கு செலவு குறைவாகவே உள்ளது. பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார்
- குமரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் தகவல்
- நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
நாகர்கோவில்:
குமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல விதை சில தரங்களை கொண்டது ஆகும். இனத்தூய்மை, புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வையே தரமான விதை யாகும். இந்த விதை தரங்கள் அனைத்தும் உடைய விதையே அதிக மகசூலுக்கு காரணி யாக அமையும். விதை யின் தரத்தினை அறியவே விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதிக அளவு முளைப்புத் திறனும் சரியான அளவு ஈரப்பதத்துடனும் காணப்படுவதே தரமான விதையாகும். இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விற்பனைக்கு வழங்கப்படுவதே சான்று செய்யப்பட்ட விதைகளாகும். எனவே சான்று செய்யப்பட்ட விதைகளை வாங்குவதன் மூலம் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் தங்களிடமுள்ள விதைகளை விதை பரிசோ தனை நிலையத்திற்கு அனுப்பி, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வற்றை உறுதி செய்வதன் மூலமும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தரம் உறுதி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகள் தங்கள் பயிர்களை உடனே காப்பீடு செய்து பயன் பெறலாம்.
- உரிய காலத்திற்குள் செலுத்தப்படுவதை அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-
சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து விவசா யிகள் பயன்பெறு வதற்கு 2022 நவம்பர் 15ஆம் நாள் வரை காலஅவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு விடுமுறை நாட்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் திறந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் பயிர்களை உடனே காப்பீடு செய்து பயன் பெறலாம்.
மேலும், பயிர்க்காப்பீடு செய்வதற்காக கூட்டுறவுச் சங்கத்தை அணுகும் எந்த ஒரு விவசாயிகளையும் திருப்பி அனுப்பாமல் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதையும், வசூலிக்கப்பட்ட காப்பீட்டு கட்டணம் விடுபடாமல் சம்பந்தபட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிய காலத்திற்குள் செலுத்தப்படுவதையும் அதிகாரிகளுக்கு ஆணையி டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
- வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர் சாகுபடியும், 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து மாவட்ட வேளாண் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சேர்த்து திருவாரூரில் 25 ஏக்கர், திருத்துறைப்பூண்டியில் 1020 ஏக்கர், முத்துப்பேட்டையில் 712 ஏக்கர், மன்னார்குடியில் 350 ஏக்கர், நன்னிலத்தில் 1085 ஏக்கர், நீடாமங்கலத்தில் 5 ஏக்கர், குடவாசலில் 725 ஏக்கர், வலங்கைமானில் 675 ஏக்கர் என மொத்தம் 4747 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.
அதில் 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 568 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
காங்கயம்:
காங்கயம் பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு காங்கயம் வேளாண்மை துறை உதவி இயக்குநா் து.வசந்தாமணி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்தில் சாகுபடி செய்யப்படும் சம்பா பருவம் நெல்-2 ம் போக பயிருக்கு சிறப்பு பருவமாக கணக்கிட்டு, எதிா்பாராத இயற்கை இடா்ப்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே நெல் இரண்டாம் போகம் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிா் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் வாயிலாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு காங்கயம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் து.வசந்தாமணி 9344541648 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்து உள்ளனர்.
- வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம், அம்பல், போலகம், வாழ்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும்
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சியத்த மங்கை கோவில் சியாத மங்கை தென்படாகை வருவாய் கிராமம் பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா இளம் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அழுகி துர்நாற்றம் விசுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா சாகுபடி செய்துள்ளோம் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உரிய கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
- பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.
ராசிபுரம்:
ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் யோகநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராசிபுரம் வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 185 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.
ஆதி, பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க உள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டுவரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்க தொட்டி 116 கன மீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.