என் மலர்
நீங்கள் தேடியது "Amount"
- பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
- பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வரவேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம், அனைத்தித்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சென்னை மற்றும் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை தஞ்சாவூர் இணைந்து அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் பெருமங்கல விழாவில் வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பல்கலக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இவ்விழாவில்தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநதம் பேசுகையில், மக்கள் அனைவரும் பசியில்லாமல் வாழவேண்டுமென்றால் பெண்கள் தங்களுடைய அலங்கார செலவின ங்களுக்காக செலவிடும் தொகையை குறைத்தும் ஆண்கள் தீயப்பழக்க வழக்கத்திற்காக செலவிடும் தொகையைத் தவிர்த்தும் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வ ரவேண்டும் என்றார்.
இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவே ந்தருக்கு வள்ளலார் விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தமிழ்ப் பண்பாட்டு மையம் இயக்குனர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார்.
கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை பா. தம்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் வாசுதேவன் இவ்விழாவிற்கு இணைப்புரை வழங்கினார்.
இதில் டாக்டர் சிவராமன், அனைந்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டம்.
- பொருட்கள் மற்றும் செலவின தொகையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும்.
சீர்காழி:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி மானியம் அனுப்பப ட்டுள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 94 பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கபட்டுள்ளது.
இந்த மானிய தொகையை பள்ளியின் வளர்ச்சிக்கு செலவு செய்தல் சார்ந்த கூட்டம் கொள்ளிடம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்க்கு ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் வரவேற்புரை ஆற்றினர். வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை யேற்று பேசும் பொழுது,
இந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்கினை தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் இணைந்து பராமரிக்கபடவேண்டும்.
அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டமிட பட்டு பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தரமான பொருட்களை வழங்க வேண்டும்.
'வழங்கப்பட்டுள்ள மொத்த தொகையில் 10 சதவீதத்தை கழிவறை சுத்தம் செய்யவும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும் பயன்படு த்தி கொள்ளலாம். பள்ளி மானியத்தில் வாங்க ப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் செலவின தொ கையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இப்பயிற்சியின்கருத்தா ளர்களாக மாவட்ட தணிக்கையாளர் மோகன், வட்டார தணிக்கையாளர்கள் ராஜீவ்காந்தி சிவனேசன் ஆகியோர் ஈடுபட்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் கவிதா நன்றி கூறினார்.
- கரும்பு நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் வழங்க வேண்டும்.
- கரும்பு விவசாயிகள் 10-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்:
திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் 10-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடந்ததாக கூறி 10 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
- பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
- ஆபரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட தலைவர் சைவ. குமணன், மாவட்ட செயலாளர் முருகு .இளஞ்செழியன், மாவட்ட பொருளாளர் குமரன் ஆகியோர் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கிய பின்னர் தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரைய தொகை என்று கூறி பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும் . நிலுவைத் தொகை என்ற பெயரில் ஆப்பரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு, திருவையாறு , பூதலூர், பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
சேலம்:
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான என்எம்எம்எஸ் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி- 25ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இத்தேர்விற்கான விண்ணப்பங்களை வரும் 26-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை, https://dgel.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இதற்கான கடைசி நாளாக ஜனவரி 24-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண கோரி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் உடனே வழங்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு ஆலை சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
அதுவரை ஆலையை இயக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது பலர் கருப்பு துண்டு அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தெலைவர் செந்தில்குமார், செயலாளர் என்.வி.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 100 சதவீத காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கக்கூடிய அவல நிலை ஏற்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து வந்தது. குறிப்பாக திருவாரூர், சேந்தமங்கலம், மாங்குடி, வடகரை, வண்டம்பாலை, நன்னிலம், குடவாசல், பேரளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 1லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.
நேற்று காலையில் இருந்து மாலை வரை அதிகமழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சுவிட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக விவசாயிகள் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.
ஏற்கனவே மழை நீரில் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கக்கூடிய அவல நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நி லையில் மாவட்ட முழுவதும் வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
உடனடியாக வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து பாதிப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.
100 சதவீத காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு முன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.
- வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் வழங்கினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.
இந்த சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வனவர்கள், மோப்ப நாய், ட்ரோன் கேமரா, கூண்டுகள், மயக்க மருந்து செலுத்தும் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரை சிறுத்தை புலியை கண்டு பிடிக்க முடியாத நிலையில், தற்போது சிறுத்தைப்புலி வந்து செல்லும் வழித்தடம் கண்டறியப்பட்டு 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள், 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுத்தை புலி தாக்கி பலியான கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தி ருந்தனர். இதையடுத்து, வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பிரவின்குமார் வழங்கினார்.
- மண்புழு உரம் அடங்கிய தளை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
- தளை ஒன்றிற்கு ரூ.750 பயனாளியின் பங்கு தொகையாக வசூலிக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள மூலிகை செடிகளை எளிதில் வீடுகளில் வளர்க்கும் வண்ணம் தோட்டக்கலைத் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 10 வகையான மூலிகைச் செடிகள் (துளசி, கற்பூரவல்லி திருநீற்றுப்பச்சிலை ஆடாதொடை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா, பிரண்டை, கற்றாழை. கீழாநெல்லி) அடங்கிய தளை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.2.25 லட்சம் ஒதுக்கீட்டில் 300 தளைகள் மாவட்ட இலக்கீடாக பெறப்பட்டுள்ளது.
மொத்த விலை ரூ.1500-க்கு 20 மூலிகை செடிகள், 10 செடி வளர்ப்புப் பைகள், 2 கிலோ தென்னை நார் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம் அடங்கிய தளை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
தளை ஒன்றிற்கு ரூ.750 பயனாளியின் பங்குத் தொகையாக வசூலிக்கப்படும்.
ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஒரு தளை பெற தகுதியுடையவர்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து www.tnhorticulture.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும், பயனாளிகள் திட்டப் பயன்களைப் பெற அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகியும் பயன்பெறலாம்.
தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9943422198 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9488945801, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9445257303, கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் தோட்டக்கலை உதவி இயக்குநர் -7299402881, பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் 8526616956/9944340793, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் தோட்டக்கலைஉதவி இயக்குனர் 9445257303 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சித்ரா தலைமை தாங்கினார்.வட்டார இணை செயலாளர் சுகுமாறன், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், முன்னாள் வட்ட செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.முடிவில் சத்துணவு ஊழியர் சங்க திருமருகல் ஒன்றிய தலைவர் உஷாராணி நன்றி கூறினார்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- அகவிலைப்படி, சரண்டர் தொகையை வழங்க வேண்டும்
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட இணை செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது கால முறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சி.பி.எஸ் யை திட்டத்தை ரத்து செய்யவேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் தொகையை வழங்கிட வேண்டும்.
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார கோரிக்கைகள் இடம் பெறாததை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் வட்டக்கிளை செயலாளர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் முரளிதரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், விஜயகுமார், ஓய்வு பெற்ற வருவாய் துறை வட்ட செயலாளர் கலியமூர்த்தி, வருவாய் துறை வட்ட செயலாளர் சுந்தேரேசன், வட்ட பொருளாளர் செல்வராணி, நில அளவை துறை வட்ட சார் ஆய்வாளர் தேவதாஸ், தலைமையிடுத்து துணை வட்டாச்சியர் தமயந்தி, உதவியாளர் பிரதாப், பதிவரை எழுத்தர் ரமேஷ், மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகை நிலுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும்.
சுவாமிமலை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகை நிறுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட பொறுப்பாளர் நீலகண்டன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
இதில் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 வட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.